6271.
காணவே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் கருவான புலிப்பாணி மைந்தாகேளு
தோணவே பூநீரை யெடுக்கும்போது சுந்தரனே யுந்தனுக்கு பயமுண்டாகும்
வேணதொரு சித்துமுனி ரிஷிகள்தாமும் வேதாந்தத் தாயினது கடாட்சத்தாலே
பூணவே வேஷமது மாறாமல்கொண்டு புகழான முன்னிற்பார் பிரம்மைபாரே
6272.
பாரேதான் வேஷமது பூண்டுகொண்டு பாங்கான கபாலமது ஏந்திக்கொண்டு
நேரேதான் முன்னாக வந்துநின்று நேர்மையுடன் ஆங்கார கெர்ச்சிப்போடும்
ஆரோதான் பூநீரை எடுக்கவல்லான் வாண்பிள்ளை நீதானோ வென்று கூறி
தேரோடும் சத்தமனக் கிரிச்சிபோலும் தேற்றமுடன் சத்தமது கேட்கும்பாரே
6273.
கேட்டுமே சித்துமுனி யசரீர்வாக்கு கெவனமுடன் கேட்டதுவும் உந்தமக்கு
ஆட்களில்லா வனந்தனிலே இந்தவோசை வப்பனே வதிசயங்கள் காணுதென்று
நிட்கமுடன் தலையெடுத்துப் பார்க்கும்போது நிலையான கறுப்பண்ணச் சாமிபோலே
வீட்கமுடன் முன்னிற்கக் கண்டபோது வித்தகனே பயந்தொடுங்கி சாவார்தானே
6274.
சாவாரே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் சட்டமுடன் ஓமென்ற வேஷத்தோடும்
ஆவதுபோல் மகமேரு தன்னைப்போலே கப்பனே ஜடலமது கொண்டுமல்லோ
வேவலுடன் சவுக்கார வழலையாலே வேதாந்தத் தாயினது வருளினாலே
மேமமுடன் நடுக்கமது பலமுண்டாய மேதினியில் வெகுமாண்பர் மடிந்தார்தானே
6275.
தானான யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் தண்மையுள்ள புலிப்பாணி மைந்தாகேளு
கோனான யெனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் எந்தனுக்குச் சொன்னநீதி
பானான வையகத்து மாண்பரெல்லாம் பாராமல் பூநீரின் அபாயந்தன்னை
மோனான மௌனமென்ற மதியீனத்தால் மூதுலகில் சாபத்தால் மடிந்தார்தாமே
6276.
மடிந்தாரே வன்போடுங் கூடியல்லோ மகத்தான மேன்மக்க ளிருவர்கூடி
துடிந்ததொரு பூநீரை யெடுப்பதற்கு துப்புரவாய் மனதுவந்து மாண்பர்தாமும்
விடிந்த தொருநாழிகையில் ஜாமந்தன்னில் விடுபட்டு வனாந்திரத்தில் இருவர்தாமும்
முடிந்ததொரு முப்பூவைக் காண்பதற்கு முயற்சியுடன் பூமிவளஞ்சென்றிட்டாரே
6277.
சென்றாரே வனந்தனிலே இருவர்தாமும் சிறப்புடனே பூநீரை யெடுக்கும்போது
அன்றறிந்த கருஞ்சாரைச் சற்பந்தானும் வப்பனே பூநீற்றை எடுக்கவந்த
நின்றிருந்த சிவயோகி மாண்பர்தம்மை நெடுந்தூரந் தான்துரத்தி வருகும்போது
குன்றான மலைபோலே விருட்சமப்பா கூறான விருட்சமதில் ஏறிட்டாரே
6278.
ஏறினதோர் மாண்பர்தம்மைக் கண்டபோது எழிலான சற்பமது விருட்சந்தன்னில்
சீறியே தான்கண்டு சினந்துமேதான் தீர்க்கமுடன் சிவயோகி இருவர்தம்மை
மீறியே தீண்டுதற்கு விடமுங்கொண்டு மிக்கான மானிடரைக் காணும்போது
தூறியே சிவயோகி இருவர்தாமும் துப்புரவாய் அம்பதனால் எய்திட்டாரே
6279.
எய்யவே சற்பமதின் சிரசிற்பட்டு எழிலான சற்பமது மடிந்ததங்கே
பையவே சிவயோகி மாண்பர்தாமும் பார்த்துமே சர்ப்பமது மடிந்ததென்று
துய்யநல்ல விருட்சமதை விட்டிறங்கி தூயதான வடிமட்டும் வருகும்போது
வெய்யதொரு வதிசயங்க ளென்னசொல்வேன் வேதாந்தத் தாயினுட மகிமைகேளே
6280.
கேளப்பா புலிப்பாணி மகனேமைந்தா கீர்த்தியுள்ள மகிமையது என்னசொல்வேன்
ஆளப்பா சிவயோகி இருவர்தாமும் வப்பனே பூவெடுத்த வண்மைதன்னை
மாளப்பா பூவெடுக்குங் காலந்தன்னில் மகத்தான கருஞ்சாரை கண்டுமல்லோ
மீளப்பா போகாம லிருப்பதற்கு மீட்சியுடன் தந்திரங்கள் செய்யலாச்சே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக