பக்கங்கள்

வெள்ளி, 12 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6291-6300

6291.
வந்தேனே கல்லாலின் மரத்தின்பேரில் வளமையுடன் குளிகைகொண்டு நிற்கும்போது
அந்தமுள்ள சிவமாண்பர் தன்னைத்தானும் வதிதம்மை சிறப்புடனே தானிழுக்கும் வண்மைமார்க்கம்
தந்திரமாம் மூலியது வசியமூலி தண்மையுடன் மகிமையது கூறுவேனே
6292.
கூறுவேன் புலிப்பாணி புனிதவானே குவலயத்தில் சித்துமுனி யாரேனுந்தான்
சீறுகின்ற சர்ப்பத்தின் கற்பமூலி சீருலகில் கண்டவர்கள் எவர்தானுண்டு
தேறுபுகழ் பதினெண்பேர் நவகோடிதாமும் தேசமதில் வெகுமகிமை பூண்டாரல்லோ
மாறுடைய கூறுஞ்சாரை சர்ப்பமூலி மானிலத்தில் கண்டவர்கள் இல்லைதாமே
6293.
இல்லையே சித்தர்களும் வணக்கங்கூறார் எழிலான சாத்திரத்தைத் தானுங்காணார்
தொல்லையெனும் வனமூலி விஷத்தைக்காணார் தொட்டதொரு கிட்டிருந்த மூலிகண்டார்
அல்லல்வினை தானறுக்கும் வசியமூலி யவனிதனில் வெகுசித்தர் கண்டாருண்டு
கொல்லிமலை திரிந்தாலும் இந்தமூலி குவலயத்தில் கிட்டாது கிட்டாதன்றே
6294.
கிட்டாது என்றதொரு மூலிதானும் கீர்த்தியுள்ள சிலமாண்பர் தன்னையல்லோ
எட்டாத பொருள்தேடிப் போனதாலே எழிலான சிவமாண்பர் தானுமங்கே
சட்டமுடன் பணியைநம்பி யுழுதவர்போல் சாங்கமுடன் மூலியது வினயமாச்சு
விட்டகுறை யிருந்ததனால் வாய்க்கும்பாரு விண்ணாடர் மண்ணாடர் காணார்தாமே
6295.
தானான பதாம்புயத்தைக் கண்டாலல்லோ தாக்கான வசியமூலி வாய்க்கும்பாரு
மானான சிவமாண்பர் மூலிகொண்டு மகத்தான கானகத்தே செல்லும்போது
பானான பாம்பதுதான் சென்றபாதை பாங்கான படும்பாதை யென்றேயெண்ணி
கோனான குருதனையே மனதிலுன்னி கொற்றவனார் மோசமென்று நினைத்திட்டாரே
6296.
மோசமது வந்ததென்று மனதிலெண்ணி முனையான சிவமாண்பர் யேதுசெய்தார்
பாசமுடன் கைதனிலே இருந்தமூலி பட்சமுடன் பூமிதனில் உதறிட்டாரே
நாகமது கொண்டதொரு மூலிதானும் நற்கமல கரந்தனிலே வீழாமற்றானும்
வீசலுடன் மூலியது கரத்தைப்பற்றி விருப்பமுடன் கானகத்தில் விழுகலாச்சே
6297.
ஆச்சப்பா மூலியது இழுக்கும்போது வப்பனே கூடிருந்த தோழன்தானும்
மூச்சுடனே யவர்கரத்தை யிவருங்கூடி முனையாகத் தானிழுக்கப் பார்த்தேன்யானும்
கூச்சலுடன் இருவருமே குய்யோவென்று கூர்மையுடன் மனதுவந்து எண்ணங்கொண்டு
பாச்சலுடன் கரமிருந்த வாளால்தாமும் பான்மையுடன் கரமதனை துணித்தார்பாரே
6298.
பாரேதான் கரமதுவுந் துணிந்தபோது பாங்குடனே மூலியுடன் கானகத்தில்
நேரேதான் கரந்தனையே மூலிதானும் நேர்மையுடன் தானிழுத்து போகக்கண்டேன்
சீரான சிவமாண்பர் இருவர்தாமும் சிறப்புடனே மறுபடியும் பதிதிரும்பி
கூரான பூவழலை காய்க்குமார்க்கம் குறிப்புடனே வந்துமல்லோ யமர்ந்திட்டாரே
6299.
அமர்ந்தாரே சிவமாண்பர் இருவர்தாமும் வப்பனே புலிப்பாணி மைந்தாகேளு
சமர்ந்ததொரு வருட்சமதில் யீன்னுமாண்பர் சுந்தரனே மறுபடியும் யேங்கிவந்து
சமர்த்துடனே பூவழலை யெடுப்பதற்கு சட்டமுடன் குருசொன்ன நீதிபோல
தமர்ந்திடா வண்ணமுடன் புனிதவான்கள் சட்டமுடன் தானெடுத்தார் புண்யராமே
6300.
புண்ணியராம் புலிப்பாணி மைந்தாகேளு புகழான சிவமாண்பர் கரத்தையல்லோ
வண்ணமுடன் சர்ப்பமது மனதுவந்து வளமையுடன் தன்தேவர் குருநாதர்க்கு
திண்ணமுடன் கரந்தனையே காட்டவென்று தீர்க்கமுடன் வாய்தனிலே கவ்வியல்லோ
எண்ணறிய நற்பொருளே யெந்தன்நாதா எழிலான கானகத்தின் வளமைகேளே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக