5801.
என்றவுடன் யாக்கோபு தாள்பணிந்து எழிலான வார்த்தையது கூறும்போது
சென்றுமே யாக்கோபு தன்னைக்கண்டு சிறப்புடனே சுன்னத்து செய்துமல்லோ
தின்றிடவே ரொட்டியது தானுமீய்ந்து சிறப்புடனே யசேனுசேன் என்றுகூறி
வென்றிடவே யுபதேச பிரணவத்தை விருப்பமுடன் மலுங்குமார் ஓதினாரே
5802.
ஓதவே நபிநாயர் கூட்டத்தார்கள் வுத்தமர்கள் மனம்போலே மனதுவந்து
நீதமுடன் மக்கபுரி கோட்டைக்குள்ளே நிஷ்களங்க பக்கிரியாக் கோபுதன்னை
தோதமுடன் கொண்டுசென்றார் அரண்மணைக்குள் தோறாமல் கொத்துமா யோதினார்கள்
வீதமது பயனறிந்த சித்துதாமும் விடுபட்டு வந்ததொரு யாக்கோபாச்சே
5803.
ஆச்சப்பா யின்னமொரு வயனம்சொல்வேன் வப்பனே கொங்கணவர் வயதுமார்க்கம்
பாச்சலுடன் எண்ணூறு வாண்டுமட்டும் பாரினிலே இருந்ததொரு சித்துமாகும்
மாச்சலுடன் சமாதிமுகஞ் சென்றசித்து மகத்தான கொங்கணவர் சித்துமாகும்
ஓச்சலது இல்லாமல் வுலகுதன்னில் வுத்தமனே வெகுகாலம் வுழன்றசித்தே
5804.
சித்தான சித்துமுனி ரிஷிகள்தாமும் சிறப்பான கொங்கணவர் காண்டஞ்சொல்லி
முத்தான கடைக்காண்டம் மூன்றுஞ்சொல்லி மூதுலகில் சமாதிக்கு ஏகலானார்
பத்தியுடன் கடைக்காண்டம் நூலிலப்பா பாடிவைத்தார் வெகுசங்கைக் காணப்போமோ
புத்தியுள்ள மாண்பர்களும் காண்பாரப்பா கண்டாலும் மதிசங்கை யின்னமுண்டே
5805.
உண்டான கடைக்காண்டம் பாடியல்லோ வுத்தமனுங் கொங்கணவர் முனிவர்தானும்
நண்பான வையத்தில் மாண்பர்முன்னே நலமான ரிஷிமுனிவர் தனையழைத்து
வண்பான சாத்திரங்கள் பாடியல்லோ வளமுடனே வெகுசித்தர் மறைத்துவைத்தார்
திண்ணமுடன் காயாதி கற்பங்கொண்டு தீரமுடன் சமாதிக்குச் சொல்வேன்தானே
5806.
சொல்லவே சமாதிமுகம் நின்றபோது செம்மலுடன் சீஷவர்க்கம் அனேகங்கோடி
மெல்லவே சமாதிக்கு இடமுந்தேடி மேன்மையுடன் வழிபாடு செய்துமல்லோ
புல்லவே கொங்கணனார் முனிவர்தானும் புகழான சமாதிமுகம் வுள்ளேசென்று
வல்லமையாய் முப்பது வாண்டுதானும் வளமுடனே இருந்த சித்துதானே
5807.
தானான யின்னமொரு வயனஞ்சொல்வேன் தாக்கான கண்மணியே புகலக்கேளு
கோனான தட்சணா மூர்த்தியப்பா குவலயத்தில் வெகுகால மிருந்தசித்து
மானான வயததுவும் ஏதென்றாக்கால் மகத்தான வாயிரத்து சொச்சமப்பா
பானான படியேழு கடலுஞ்சுத்தி பாரினிலே வுழன்றதொரு சித்துகாணே
5808.
காணவே தட்சணா மூர்த்தியாகும் காசினியில் திருமந்திரம் பாடினோர்தான்
பூணவே சிவாலயந் தன்னிலப்பா பொங்கமுடன் வெகுகால மிருந்தசித்து
தோணவே திருமந்திரம் பாடியல்லோ தோற்றமுடன் சமாதிக்கு யேகவெண்ணி
ஆணவங்கள் தானொடுங்கி சித்துதாமும் வண்பான காசிபதி சென்றிட்டாரே
5809.
சென்றாரே நற்மதா நதியின்பக்கல் சிறப்புடனே தட்சணா மூர்த்திநாயர்
குன்றான கரையோரம் மண்டபந்தான் கொற்றவனார் சமாதிமுகஞ் சென்றுமல்லோ
வென்றிடவே ஒருயுகமாம் அறுபதாண்டு வுத்தமனார் தானிருந்து வந்தசித்து
தென்றிசையில் தட்சணா மூர்த்தியென்று தேசமதில் பேர்கொண்ட சித்துபாரே
5810.
பாரேதான் இன்னமொரு மார்க்கஞ்சொல்வேன் பாங்கான பாலகனே பகரக்கேளு
நீரேதான் கோரக்கர் வயதேதென்றாக்கால் நிஷ்களங்க மாகவல்லோ மாயாசித்து
சேரேதான் வயததுவும் எண்பதாகும் செப்பினார் அவர்நூலில் சூத்திரந்தான்
சீரேதான் பதினாறு சூத்திரத்தில் சிறப்பாகப் பாடிவைத்த துண்மையாமே