5891.
ஆமேதான் தேவதத்தன் என்றுசொல்லி வப்பனே யவன்மைந்தன் மயன்என்பார்கள்
நாமேதான் சொன்னபடி மயனுக்கல்லோ நாடானக் கருவூரார் பிறந்தாரல்லோ
போமேதான் பொன்னுலகர் தேவதச்சர் பொங்கமுடன் கருவூரார்க் கீடுமல்ல
ஆமேதான் பாண்டியர்க்கு வுருவுசெய்து வப்பனே தான்கொடுத்த சித்துதாமே
5892.
தாமாக யின்னமொரு வழிபாடல்லோ சாற்றுகிறேன் புத்தியுள்ள பூபாலாகேள்
கோமானகள் அறிந்ததில்லை சாத்திரதோஷம் கொற்றவனே யாம்கண்ட வரைக்குஞ்சொல்வோம்
சாமான்ய மென்றதொரு புண்ணாக்கீசர் தாரணியில் வந்துதித்த நேர்மைசொல்வேன்
பூமான்கள் ஆரேனும் அறிந்ததுண்டோ புகட்சியுடன் கூறுகிறேன் புனிதவானே
5893.
புனிதமாம் வைகாசி மாதமப்பா புகழான புண்ணாக்கு ஈசர்தாமும்
வனிதமுடன் சித்திரையாம் இரண்டாம்பாதம் மகத்தான புண்ணாக்கர் பிறந்தநாளாம்
சனியிரா குடன்கூடிப் பிறந்ததாலே சாங்கமுடன் தேவரிஷி தன்னைப்போல
மனிதனாய் அவதாரம் எடுத்து மாட்டிடைச்சி யமங்கலியின் பிள்ளையாமே
5894.
பிள்ளையா யின்னமொரு பாகஞ்சொல்வேன் பேரான கண்மணியே புகலக்கேளிர்
எள்ளலவு பிசகாத புலிப்பாணியுன்னை யேற்றமுடன் சொல்லுகிறேன் எழிலாய்க்கேளு
உள்ளபடி நீபிறந்த மாதமப்பா வுத்தமனே புரட்டாசி யென்னலாகும்
கள்ளமிலா ஜொதியென்ற நாலாங்காலாம் கருத்துடனே யவதரித்த சித்துமாச்சே
5895.
ஆச்சப்பா வேடர்குலம் வந்துதித்த வப்பனே கன்னிகழி யாதமங்கை
மூச்சடங்கி கானகத்தில் தவசியாக மூர்க்கமுடன் இருந்த ரிஷியாரோடு
பேச்சுகளும் மிகப்பேசி வாதுகூறி பேரான நவகண்ட ரிஷிதானப்பா
பாச்சலுடன் கன்னிகையைச் சேர்ந்துமல்லோ பாலகனே பெற்றெடுத்த சிசுதானீயே
5896.
சிசுவான பாலகனே நீதானப்பா சிறப்பான காலாங்கி கடாட்சத்தாலே
பசுபோலே வேங்கைதனை வாகனமுமாக்கி பாரினிலே சுற்றிவந்த பாலனாகும்
நிசிதமுடன் எந்தனுக்கு சீஷனாக்கி நிஷ்களங்க மானதொரு புத்திவானாய்
விசுவாச முள்ளதொரு பாலனாக மேதினியில் வந்துதித்த சித்துமாச்சே
5897.
சித்தான யின்னமொரு குறிதான்சொல்வேன் சிறப்பான புலிப்பாணி மகனேகேளாய்
முத்தமுடன் நந்தீசர் பிறந்தநேர்மை மூதுலகோர் தானறிய சொல்வேனப்பா
நித்தமது வைகாசி மாதமப்பா நீடான விசாகமது நாலாங்காலாம்
பத்தியுடன் தான்பிறந்த நந்திதேவர் பாரினிலே தேவஸ்தான குருவுமாச்சே
5898.
குருவான தேவதாஸ் தலங்கள்தன்னில் கொற்றவனே நந்தியென்ற பேருண்டாச்சு
அருவான தேவேந்திரன் சாபத்தாலே வப்பனே பிரம்மகுலந் தனிலுதித்து
உருவாகி மானிட ஜென்மமாகி வுத்தமனே கன்னியது வயிற்றிறங்கி
திருவான நந்திரூபங் கொண்டுமல்லோ சிறப்புடனே வந்துதித்த சித்துதானே
5899.
சித்தான யின்னமொரு மார்க்கம்பாரு சீருள்ள புலிப்பாணி மைந்தாகேளு
புத்தியுள்ள புலஸ்தியனார் பிறந்தநேர்மை பூதலத்தில் எவராலும் கூறப்போமோ
முத்திதரும் ஆவணியாந் திங்கள்தன்னில் முனையான அனுஷமாம் நாலாங்காலில்
பத்தியுடன் பிறந்தாரே புலஸ்தியர்தானும் பாரினிலே வந்துதித்த வுருவுமாச்சே
5900.
உருவான புலஸ்தியரின் மார்க்கங்கேளு ஓகோகோ நாதாக்கள் அறிந்ததில்லை
கருவான தேவரிஷி தன்வரத்தால் கமலமுனி தன்வயிற்றிற் பிறந்தபேரன்
திருவான வகஸ்தியருக் குகந்தசீஷன் தீர்க்கமுள்ள சிவராஜ புனிதயோகன்
பருவான திருமந்திர வுபதேசந்தான் பாருலகில் புலஸ்தியரென் றறையலாமே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக