பக்கங்கள்

வெள்ளி, 19 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5841-5850

5841.
பாரேதான் கமலமுனி வயதேதென்றால் பாலகனே சொல்லுகிறேன் பண்பாய்க்கேளு
நேரேதான் வயததுவும் நாலாயிரந்தான் நேர்மையுடன் முந்நூற்றுச் சொச்சமாகும்
சீரேதான் சீனபதி தன்னிலப்பா சிறப்புடனே நெடுங்கால மிருந்தசித்து
தீரேதான் சமாதிமுகந் தன்னிற்சென்று தீர்க்கமுடன் இருநூறு வாண்டுதானே
5842.
ஆண்டான வருஷமது இருநூரப்பா வப்பனே பூமிதனி லிருந்தசித்து
கூண்டான கூண்டோடு வந்தசித்து குவலயத்தில் இவர்போலுஞ் சித்துமுண்டோ
தாண்டவம்போல் சீனபதி தேசந்தன்னில் சாங்கமுடன் வினோதங்கள் செய்தசித்து
ஆண்டகையாம் ஆனதொரு கமலர்தானும் வப்பனே வையகத்து சித்துமாச்சே
5843.
ஆச்சப்பா இன்னமொரு மகிமைசொல்வேன் வப்பனே யதிசயங்கள் மெத்தவுண்டு
மாச்சலுடன் வையகத்தில் இருந்தசித்து மகத்தான அறிவானந்த சித்துதானும்
பாச்சலுடன் வயததுவும் ஏதென்றாக்கால் பண்பான முந்நூற்று வறுபதாண்டு
மூச்சடங்கி சமாதிதனில் இருந்தசித்து மூர்க்கமுடன் பனிரெண்டு வருஷங்காணே
5844.
காணவே பனிரண் டாண்டுமட்டும் காசினியில் பூமிதனில் இருந்தசித்து
தோணவே கௌபாலர் சீஷனாகும் தொல்லுலகில் இவர்மகிமை மெத்தவுண்டு
பூணவே வையகத்து மாண்பருக்கு புகழாக முன்னடந்த காரியத்தை
வேணபடி சன்னதங்கள் கொண்டாற்போலே விட்டகுறை இருந்தபடி சொல்வார்பாரே
5845.
சொல்லவே யின்னமொரு மார்க்கங்கேளு தூய்தான வகப்பேயர் சித்துதாமும்
வெல்லவே யவர்தமக்கு வயதேதென்றால் விருப்பமுடன் சொல்லுகிறேன் வியனுந்தானும்
புல்லவே நூற்றுபத்து ஒன்றுமூன்று புகழான மரத்தடியில் இருக்குஞ்சித்து
நல்லதொரு சமாதிமுகஞ் சென்றதில்லை நாதாந்த அகப்பைவெளி சித்துதானே
5846.
வெளியான சித்துக்கு குருவேதென்றால் விருப்பமுடன் வியாசமுனி யென்னலாகும்
ஒளிவாக காயாதி தானுமில்லை ஓகோகோ வுலகமதில் வாழுஞ்சித்து
களியான ஜோதியென்ற விருட்சந்தன்னில் கைலாச நாதரைப்போல் சமாதிகொண்டு
வளியான மரப்பொந்தில் தானொடுங்கி மகத்தாக இருந்ததொரு சித்துமாச்சே
5847.
சித்தான சித்துனுட மார்க்கஞ்சொல்வேன் சீரான புலிப்பாணி மன்னாபாரு
முத்தான பாம்பாட்டி வயதேதென்றால் மூதுலகில் பெயர்கொண்ட நெடியசித்து
புத்தியுள்ள சித்துக்கு வயதுசொல்வேன் புண்ணியனே நூற்றிரு பத்துமூன்று
சுத்தமுடன் பாம்பினது விஷத்தைவாங்கி துப்புரவாய் அருந்துகிற சித்துகேளே
5848.
கேளேதான் காயாதி கற்பங்கொண்டு கீர்த்தியுடன் சிலகால மிருந்தசித்து
பாளேதான் போகாமல் தேகந்தன்னை பட்சமுடன் காப்பாற்றி பந்துகொண்டு
நீளேதான் திருவாத்தி மரத்தின்கீழே நீதியுடன் கொலுவிருந்த காயசித்து
ஆனேதான் கோகர்ண சித்துமல்ல வப்பனே சின்மயத்தின் சித்துபாரே
5849.
பாரேதான் இன்னமொரு மார்க்கம்பாரு பட்சமுள்ள எந்தனது பாலாகேளு
சீரேதான் காலகண்ட வயதேதென்றால் சிறப்பான வாயிரமா மிருநூறாண்டு
நேரேதான் நெடுங்கால மிருந்தசித்து நேர்மையுடன் குளிகையது பூண்டசித்து
ஊரேதான் பெயரேது சொல்லவென்றால் வுத்தமனே சேஷனால் முடியாதென்றே
5850.
அன்றான ஆதிசேடன் தன்னினாலும் வப்பனே கூறுதற்கு முடியாதப்பா
குன்றான நெடுமலைகள் வனாந்திரங்கள் கொற்றவனே நெடுங்கால மறிந்தசித்து
தென்றிசையில் தெட்சிணா மூர்த்தினாயன் சிறப்பான சித்துமகா சீஷனுக்கு
வென்றிடவே யுபதேசஞ் செய்தசித்து விட்டகுறை யிருந்ததொரு காலர்தாமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக