5821.
தானான சித்துக்கு வயதேதென்றால் தன்மையுள்ள வருடமது நானூறாகும்
பானான காடுமலை தன்முகத்தில் பாங்குடனே தான்திரிந்த சித்துவாகும்
கோனான குருக்கள்மார் ரிஷிகள்தம்மை கொற்றவனார் தான்கண்டு வுரவுபேசி
மானான பொன்மாற்று அறியவென்று மார்க்கமுடன் சென்றதொரு சித்துபாரே
5822.
பாரப்பா ஜோதியென்ற முனிவர்தானும் பட்சமுடன் சமாதிமுகம் வுள்ளேசென்று
சீரப்பா முப்பத்தா றாண்டுமட்டும் சிறப்புடனே வையகத்தை மறந்தசித்து
நேரப்பா தவசுநிலை தான்கடந்து நேர்மையுடன் சமாதிவிட்டு வந்தசித்து
ஆரப்பா அறிவார்கள் ஜோதிமார்க்கம் வப்பனே யானறிந்து சொல்லிட்டேனே
5823.
சொல்லவே யின்னமொரு மார்க்கம்பாரு தூய்தான பாலகனே என்னசொல்வேன்
வெல்லவே டமரகனார் வயதேதென்றால் வுத்தமனே முந்நூற்றுச் சொச்சமாகும்
புல்லவே நெடுங்காலம் வையகத்து புகழான மாண்பருடன் கூடியல்லோ
நல்லதொரு வதிஷ்டகரு வித்தையெல்லாம் நலமுடனே செய்ததொரு டமரர்காணே
5824.
காணவே ஜெகஜால டமரகந்தான காசினியில் அதீதவித்தை செய்தசித்து
பூணவே நீர்மேலே நடந்தசித்து புகழான வாசியை நடத்துஞ்சித்து
தோணவே கூடுவிட்டு கூடுபாய்ந்து தொல்லுலகில் வித்தைதனை செய்தசித்து
ஆணவங்கள் தானொடுங்கி காயந்தின்று வன்புடனே வீற்றிருந்த சித்துதாமே
5825.
தானான டமரகனார் ஆடுஞ்சித்து தகமையுள்ள சாத்திரத்திற் சொல்லவில்லை
கோனான வாகாயந் தன்னின்மட்டும் கொற்றவனார் கெடைகட்டி யாடுஞ்சித்து
பானான பரிதிமதி தன்னைத்தானும் பக்குவமாய்த் திசைமாற்றிச் செய்தசித்து
மானான டமரகனார் சமாதிதன்னில் மார்க்கமுடன் ஏகுதற்கு எண்ணினாரே
5826.
நண்ணவே சகலரிஷி சித்துதாமும் நலமுடனே வையகத்து சமாதிதன்னில்
மண்ணதனில் இருந்ததொரு சித்துமாச்சு மகத்தான வவர்போன்ற சித்துமல்ல
கண்ணவிந்த குருடனைப்போல் கேணிதன்னில் காசினியில் இறங்கியல்லோ சித்துதானும்
தண்ணீரில் பனிரெண்டு வாண்டுமட்டும் தன்மையுடன் வீற்றிருந்த சித்துதாமே
5827.
சித்தான சித்து ஜலஸ்தம்பனசித்து சிறப்பான டமரகர்போல் சொல்லொண்ணாது
முத்தான கேணிவிட்டு வந்தசித்து மூதுலகில் இவர்போலு மெங்குமுண்டோ
பத்தியுடன் வையகத்தில் அனந்தஞ்சித்து பாரினிலே வெகுமுனிவர் இருந்தாரல்லோ
சாத்திரங்கள் மறவாத சித்தானாலும் ஜலஸ்தம்பன சித்துபோ லில்லைதானே
5828.
இல்லையே இன்னமொரு கவிதைசொல்வேன் எழிலான எந்தனிட மணியேகேளும்
சொல்லவே சுந்தரா னந்தரப்பா தொல்லுலகில் கேசரியாம் வித்தைதன்னை
புல்லவே வதீதமென்ற மாண்பருக்கு புகழுடனே புகட்டியதோர் சித்துமாகும்
வெல்லவே யவர்தமக்கு வயதேதென்றால் வட்டகுறை தொட்டகுறை மிகுதியாமே
5829.
ஆமேதான் அவர்தமக்கு வயதுமெத்த வப்பனே எண்ணூற்று சொச்சமாண்டு
நாமேதான் சொன்னபடி குளிகைபூண்டு நலமான கேசரிமேல் சென்றசித்து
போமேதான் வையகத்தி லிருந்துமல்லோ பொங்கமுடன் சமாதிமுகஞ் சென்றசித்து
வேமேதான் இருபத்தா றாண்டுமட்டும் விடுபட்டு பூமிதனில் வந்தசித்தே
5830.
வந்ததொரு சித்துக்கு சமாதிமார்க்கம் வையகத்தில் மெத்தவுண்டு சொல்லொண்ணாது
சந்ததமாஞ் சீஷவர்க்கம் கோடிமாண்பர் தாரிணியில் கணக்குண்டோ லக்கோயில்லை
சொந்தமுடன் வெகுமாண்பர் கிட்டியல்லோ சுந்தரனார் பாதார விந்தந்தன்னை
அந்தமுடன் தாள்பணிந்து சிரங்குனிந்து வன்புடனே போற்றிசெய்த சித்துமாச்சே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக