பக்கங்கள்

திங்கள், 8 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6601-6610

6601.
புத்தியுடன் சரக்கதனை தானெடுத்து பூபாலா பின்னுமந்தக் கல்வமிட்டு
பத்தியுடன் கருந்துளசி சாறுவிட்டு பாலகனே நாற்சாம மறைத்தபின்பு
சத்தியமாய் பில்லையது லகுவாய்ச்செய்து சாங்கமுடன் ரவிதனிலே காயவைத்து
முத்திபெற சில்லிட்டுச் சீலைசெய்து முனையான ஜோதியென்ற புடந்தான்போடே
6602.
போடேதான் புடமதுவுங் கோழியாக பொங்கமுடன் இப்படியே பத்துமுறைபோடு
நாடேதான் செந்தூரம் நவிலப்போமோ நாதாந்த சித்துமுனி சொல்லாவண்ணம்
கூடநீ செந்தூரந் தனையெடுத்து கொற்றவனே கல்வமதிலிட்டு மைந்தா
ஆடேதான் குமரியின்தன் சாற்றினாலே வப்பனே தானரைப்பாய் சாமம்நாலே
6603.
நாலான சாமமது வரைத்தபின்பு நலமான பில்லையது லகுவாய்ச்செய்து
பாலான ரவிதனிலே காயப்போடு பாலகனே காய்ந்தபின்பு சில்லிசெய்து 
மாலான சீலையது செய்தபின்பு மகத்தான மணல்மறைவிற் புடத்தைப்போடு
சூலான புடமாறி எடுத்துப்பாரு துப்புரவாய்ச் செந்தூரஞ் சொல்லொண்ணாதே
6604.
ஒண்ணாது செந்தூரம் என்னசொல்வேன் ஓகோகோ நாதாக்கள் கூறவில்லை
மண்ணான சரக்கதுவும் பிரிதிவிதன்னால் மகத்தான காரசார மதுவேயாகி
தண்ணமுடன் வேதைமுகங் கோடாகோடி தாக்கிடவே சிமிட்டுவித்தை யென்னலாகும்
விண்ணான நாதாக்கள் காணாவித்தை விருப்பமுடன் உந்தனுக்கு ஓதினேனே
6605.
ஓதினேன் செந்தூரந் தனையெடுத்து வுத்தமனே வெள்ளிதனில் நூற்றுக்கொன்று
நீதியுடன் தானுருக்கிக் குருவொன்றீய நிஷ்களங்க மானதொரு வெள்ளிதானும்
ஆதியென்ற பஞ்சபூத சரக்கினாலே வப்பனே வர்ணமது மிகவேயாகி
பாதிமதி சடையணிந்த தம்பிரானால் பலிக்குமடா வாதவித்தை ஜொலிக்கும்பாரே
6606.
ஜொலிக்குமே மாற்றதுவும் என்னசொல்வேன் சோராமல் வயதுபன் னிரண்டதாகும்
ஒலிக்குமே தங்கமதை என்னசொல்வேன் ஓகோகோ சித்துமுனி அறியாத்தங்கம்
பலிக்குமே சிவயோக மாண்பருக்கு பாவியென் மாண்பருக்கு பலியாதப்பா
எலித்தலையில் கோடாரித்தான் விழுந்தாற்போல எளிதான கைமுறைகள் வினோதந்தானே
6607.
தானான சுயத்தங்கம் பிறவித்தங்கம் தாக்கான சிவயோகிச் செய்யுந்தங்கம்
கோனான காலாங்கி நாதர்சொன்ன குருவான வாக்கதுவும் பொய்யாதப்பா
தேனான மனோன்மணியாள் கடாட்சத்தாலே தேற்றமுடன் பலவிதமாய் நூலைப்பாடி
மானான மாண்பர்களும் அறியாமற்றான் மயக்கமுடன் மருட்கடலில் மழுந்திட்டாரே
6608.
மருட்டான சிடிகையென்ற வேதைதன்னை மார்க்கமுடன் அறியாமல் மாண்பர்தாமும்
இருட்டுவழி யேகியல்லோ பாலரெல்லாம் எழிலான கைமுறையை பாராமற்றான்
பொருளிருக்கு மிடமதுவும் தோன்றாவண்ணம் பொங்கமுடன் மதியீன மயக்கத்தாலே
குருட்டுவிழிப் பூனையது விட்டம்பாய்ந்த குறிப்பான கதைபோலே மேவலாச்சே
6609.
மேவலா மின்னமொரு மேன்மைகேளு மேதினியில் கீர்த்திபெற்ற புண்ணியவானே
ஆவலுடன் உந்தமக்கு மனதுவந்து வப்பனே காலாங்கிப் பதம்பணிந்து 
சாவதுவும் என்றைக்கும் நிட்சயந்தான் சாங்கமுடன் பலதொழிலும் கற்றுமென்ன
போவது மெய்யல்லால் இருப்பதில்லை பொங்கமுடன் வையகத்து வாழ்க்கையாமே
6610.
வாழ்க்கையாம் வெகுகால மிருப்போமென்னும் வண்மையுடன் பலநூலும் வுளவாராய்ந்து
தாட்கமல பதாம்புயத்தை மனதிலுன்னி தகமையுள்ள காயாதி கற்பங்கொண்டு
வீட்கமுடன் நெடுங்காலஞ் சமாதிசென்று விருதாவாய் மறுபடியும் வந்துமென்ன
பாழ்க்கமுடன் பவக்கடலை விட்டகற்றி பாருலகில் சுந்தரம்போ லிருப்பீர்தானே

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6611-6620

6611.
சுந்தரனே காவிக ஷாயம்பூண்டு சுத்தமுடன் இருப்பதுவும் யோகியல்லோ
தந்திரமாய் அஷ்டசித்தி யாடியென்ன தாரணியில் யோகமது கொண்டுமென்ன
அந்தமெல் லாம்புகழ ஞானங்கொண்டு அவனிதனில் பொய்வேஷங் கொண்டுமென்ன
மந்திரத்தில் மாங்காய் விழுங்கதையைப்போல மானிலத்தில் வெகுபேர்கள் மயங்குவாரே
6612.
மயக்கவே எந்தனது மணியேகேளும் மாசற்ற நவலோகச் செந்தூரந்தான்
தியக்கமது வாராமல் லோகந்தன்னை தீர்க்கமுடன் முறைபாடு சொல்வேன்யானும்
நயமுடைய தங்கமது ஒன்றேயாகும் நலமான காரீயம் ஒன்றேகாலாம்
அயமதுவும் விராகனது ஒன்றேயாகும் வப்பனே நாகமது ஆறதாமே
6613.
ஆறான செம்பதுவும் ஒன்றேயாகும் வப்பனே குடவனது ஒன்றேயாகும்
காரான வெள்ளியது ரண்டேயாகும் கருவான வெள்வங்க மொன்றேயாகும்
கூறான வெட்டுருக்கு ஒன்றேயாகும் குறிப்பான நவலோக மொன்றாய்க்கூட்டி
சேறான லோகமெலாம் ஒன்றாய்ச்சேர்த்து செப்புகிறேன் வரிசைபெற வண்மைகேளே
6614.
வண்மையாய் இடைகண்டு இனமுங்கண்டு வகுப்பான சேர்வையது யானுங்கண்டு
தண்மைபெற நாதாக்கள் தாள்வணங்கி தாமுரைத்த முறைபாடு வழிபாடெல்லாம்
உண்மையுடன் தாமறிந்து புத்திவானை வுகமையுள்ள லோகமதைக் கண்டாராய்ந்து
திண்ணமுடன் மூசையிட்டுச் சீலைசெய்து தீர்க்கமுடன் சரவுலையில் வூதிடாயே
6615.
ஊதவே நவலோக மொன்றாய்ச்சேர்ந்து வுத்தமனே வுருகியல்லோ களங்கமாகும்
நீதமுடன் களங்கெடுத்து வுடைத்துமைந்தா நிஷ்களங்க மாகவல்லொ கல்வமிட்டு
சூதமது யீரிடைக்கு ஒன்றேசேர்த்து சுத்தமுடன் கெந்தியது ரெட்டிப்பாக
வாதமது பலிப்பதற்கு வருண்மைந்தாகேள் வளம்பெறவே தாளகமும் பலந்தான்கூட்டே
6616.
கூட்டியே கண்டரது கால்தான்சேரு குணமான கெவுரியது களஞ்சிரெண்டு
நீட்டமுடன் மனோசிலையுங் காலதாக நெடிதான வீரமது களஞ்சிநாலு
தாட்டிகமாய்த் துத்தமது களஞ்சிரெண்டு தாக்கான பூரமது களஞ்சியாறு
வாட்டமுடன் இடைகண்டு கல்வமிட்டு வளம்பெறவே தானரைக்க வகையைக்கேளே
6617.
வகையான ஆறுவகை ஜெயநீர்தன்னால் வளம்பெறவே தானறைப்பாய் எட்டுசாமம்
துகையான சரக்கெல்லா மொன்றாய்க்கூட்டி தோராமல் தானரைத்து பில்லைதட்டி
புகையாம லிருப்பதற்கு ரவியில்வைத்து புகழான சீலையது வலுவாய்ச்செய்து
பகையான புடமதுவும் மண்ணிலப்பா பாங்குபெற கோழியென்ற புடந்தான்போடே
6618.
புடமதுவுந் தீயாறி சென்றபின்பு பத்தியுள்ள பூபாலா யுரைப்பேனப்பா
தடங்கண்டு வழிகண்டு தண்மையோடு சட்டமுடன் மணலதனை நீக்கிமைந்தா
அடலான வாசல்தனை யெடுத்துப்பாரு வப்பனே செந்தூரம் நீலவர்ணம்
மடலான செந்தூரந் தனையெடுத்து மன்னவனே பின்னுமந்த கல்வம்பூட்டே
6619.
பூட்டியே சரக்கெல்லாங் கல்வமிட்டு புத்தியுள்ள கண்மணியே ஜெயநீரப்பா
தாட்டிகமாய் ஆறுவகை ஜெயநீர்தன்னால் சட்டமுடன் தானரைப்பாய்ப் பின்னுமல்லோ
வாட்டமுடன் தானரைத்து பில்லைதட்டி வளமுடனே ரவிதனிலே காயவைத்து
நீட்டமுடன் சில்லிட்டுச் சீலைசெய்து நீதியுடன் மண்மறைவிற் புடந்தான்தாக்கே
6620.
தாக்கவே கோழியது புடமதாக்கி தண்மையுள்ள பூபாலா போட்டாயானால் 
நோக்கமுடன் வோடதனை யுடைத்துப்பாரு வுத்தமனே செந்தூர மென்னசொல்வேன்
ஆக்கமுடன் செந்தூரம் அருணன்போலாம் வப்பனே நாதாக்கள் கூறவில்லை
வாக்கதுவும் பொய்யாது வருண்மைந்தாகேள் வண்மைபெற செந்தூர வேதைதானே

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6621-6630

6621.
தானான வேதைமுகஞ் சாற்றக்கேளிர் தண்மையுள்ள பூபாலா தருமவானே
கோனான யெனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் தாமுரைத்த நீதிவண்ணம்
பானான பராபரியாள் பாதம்போற்றி பாருலகில் மாண்பர்களும் பிழைக்கவென்று
தேனான சிவயோக நிலையில்நின்று தேற்றமுடன் வேதைமுகங் கூறுவேனே
6622.
கூறுவேன் செந்தூரந் தனையெடுத்து குணமான வெள்ளிதனில் நூற்றுக்கொன்று
மாறுதலாய்க் குகையிலிட்டு வுருக்கிமைந்தா மார்க்கமுடன் தகடடித்துப் புடத்தைப்போடு
தேறுதலாய் மாற்றதுவும் என்னசொல்வேன் தேற்றமுடன் எட்டரைக்கு ஆணிக்கொக்கும்
கூறுதலாய்ப் பிறவியென்ற தங்கமாகும் குணமான செந்தூர வேதைகாணே
6623.
காணவே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் கைலாச புலிப்பாணி கருவுள்ளானே
தோணவே செம்பதனை யுருக்கிமைந்தா துப்புரவாய் இடைக்கிடைதான் செந்தூரத்தை
வேணமட்டும் செம்புருக்கிக் கிராசமீவாய் வித்தகனே செம்பதுவுங் களங்கமாகும்
மாணமருங் கல்வியுள்ள பூபாலாகேள் மகத்தான செம்பதனை யூதிப்போடே
6624.
ஊதவே செம்பதுவும் தங்கச்செம்பாம் வுத்தமனே நாதாக்கள் மறைத்தசெம்பு 
நீதமுடன் செம்பெடுத்து செப்பக்கேளும் நிஷ்களங்க மானதொரு வெள்ளிதன்னை
தோடமுடன் நூற்றுக்கு ஒன்றுசேர்க்க துப்புரவாய் மாற்றதுவும் பதினாறாகும்
வாதமது காணவென்றால் இதுவேவாதம் வளம்பெரிய நாதாக்கள் வாதம்பாரே
6625.
பாரேதான் வாரடித்துப் புடந்தான்போடு பாதகாண வெள்ளியது செம்பினாலே
நேரேதான் மாற்றதுவும் அதிகங்காணும் நேர்மையுள்ள பிறவியென்ற தங்கமாச்சு
சீரேதான் இத்தங்கம் சிவயோகத்தங்கம் சிறப்பான மாண்பர்களுக் குகந்ததங்கம்
ஆரோதான் சொல்வாரோ யுந்தமக்கு வப்பனே யானுரைத்தேன் உண்மைபாரே
6626.
உண்மையாம் நவலோக செந்தூரத்தை வுத்தமனே உந்தனுக்கு ஓதினேன்யான்
வண்ணமுடன் சீவனத்துக் கிடமதாக வளம்பெரிய செந்தூரம் பதனம்பண்ணு
எண்ணரிய நற்பொருளை குருவாயெண்ணி எளிதான வறைமை வருங்காலந்தன்னில்
கண்மறையுங் காலமது தானறிந்து கண்மணியே சீவனத்துக் கிடந்தான்கொள்ளே
6627.
கொள்ளவே வருமைவருங் காலந்தன்னில் கொற்றவனே நவலோக செந்தூரத்தை
கள்ளமது வாராமல் மைந்தாகேளு கணக்குடனே நாளொன்றுக் கிருநேரந்தான்
வள்ளலுயர் வணிகரிடம் சென்றுமல்லோ வகையுடனே பணவிடைதான் பொன்தான்யீய்ந்து
உள்ளவரை சீவியநா ளுள்ளமட்டும் வுத்தமனே காலமது கழிக்கநன்றே
6628.
நன்றான செந்தூரம் பதனம்பண்ணு நாதாக்கள் மறைத்துவைத்த செந்தூரந்தான்
குன்றான மலைபழுக்கும் நவலோகந்தான் கொற்றவனே கருமிகட்கு மனம்விடாதே
தின்றாலும் ஒருவனாய் மனதுவந்து தீர்க்கமுடன் மருமமதா யுண்பாயப்பா
அன்றெறித்த ஆதிசிவன் உந்தனுக்கு வப்பனே தான்கொடுத்த வேதையாமே
6629.
வேதையா மின்னமொரு போக்குசொல்வேன் வேதாந்தக் கண்மணியே புனிதவானே
கோதையர்கள் மாயவலை சிக்கிடாதே கொற்றவனே சிக்கினால் மனம்விள்ளாதே
மாதாவின் சீர்பதத்தை தாரிணியில் எப்போதும் தலைமேற் கொண்டு
சீதையுடன் ராமருந்தான் இருந்தநேர்மை செப்பினதோர் கதைதனையே கண்டீர்தானே
6630.
கண்டதொரு மாண்பர்களுக் கிந்தலோகம் கருவான ரோகமது போவதற்கும்
பண்டுளவ மாலையணி கிருஷ்ணாவதாரன் பார்மாலை யாகவல்லோ பூண்டுகொண்டு
தண்டுளவ துளசியென்ற மூலிச்சாற்றால் சட்டமுடன் நவலோக செந்தூரத்தை
கொண்டிடவே யனுபானம் பணவிடைதானப்பா கொற்றவனே ரோகமது தீருங்காணே

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6631-6640

6631.
காணவே நவலோக செந்தூரத்தால் கசரோகம் ஷயரோகம் கழன்றுபோகும்
பூணவே திருகடுகை சூரணத்தில் புகழான செந்தூரம் பணவிடைதான்கொள்ள 
ஆணவத்தால் மிஞ்சிவந்த மேகரோகம் வப்பனே கடல்புக்கி யோடும்பாரு
மாணமருங் கல்வியுள்ள மன்னாகேளும் மகத்தான வியாதிமுகம் இன்னங்கேளே
6632.
கேளப்பா வனுபானம் நெய்தானாகும் கெடியான நவலோக செந்தூரத்தை
ஆளப்பா வியாதிமுகந் தானறிந்து வப்பனே யனுபான மறிந்துகொண்டால்
கேளப்பா ஒருநாளும் வாராதப்பா குணமுள்ள நவலோக செந்தூரந்தான்
பாரப்பா போகாமல் மண்டலந்தான் பரிவுடனே கொண்டவர்க்கு ரோகம்போமே
6633.
போமேதான் பதினெட்டு குஷ்டம்போகும் பொல்லாத மேகமென்ற இருபதும்போம்
ஆமேதான் சூலைபதி னெட்டும்போகும் வப்பனே காமாலை யாறுந்தீரும்
வேமேதான் வாதமது யெண்பதும்போகும் வேகமுடன் பித்தமது நாற்பதும்போம்
நேமேதான் சொன்னபடி கிராணிபோகும் நலமாகப் பாண்டுவகை தீருந்தானே
6634.
தீருமே தேகமது வூதல்தீரும் தீர்க்கமுடன் ரோகநீ ரெல்லாம்போகும்
ஈரதனில் தான்சுரக்கும் விஷநீரப்பா எழிலான தந்தநோ யெல்லாந்தீரும்
நாறுடலம் கிரந்தியென்ற புண்கள்போகும் நலமான தாதுடனே வலியுண்டாகும்
கூறுமுனி காலாங்கி நாதர்வாக்கு குவலயத்தில் ஒருநாளும் பொய்யாதாமே
6635.
பொய்யாது நவலோகஞ் செந்தூரந்தான் பூட்டுகிறேன் நாலாயிரத்துச் சொச்சம்
மெய்யிலுள்ள ரோகமது யெல்லாந்தீரும் மேலான நவலோக செந்தூரந்தான்
வையகங்கள் தான்புகழும் செந்தூரத்தை வளம்பெரிய நாதாக்கள் மறைத்துவைத்தார்
துய்யநல்ல பண்டிதங்கள் மிகவாராய்ந்து துப்புரவாய் ஓதிவைத்தேன் நுணுக்கம்பாரே
6636.
பாரேதான் நவலோக செந்தூரத்தை பாருலகில் நாதாக்கள் மறைத்துவைத்தார்
ஆரோதான் சாஸ்திரங்கள் உளவாராய்ந்து வப்பனே போதிப்பார் யாருமில்லை
நேரேதான் வுந்தன்முகம் மனதுவந்து நெடிதான முறைபாடு வழிபாடெல்லாம்
தீரேதான் இடைபாகங் கைபாகங்கள் தீர்க்கமுடன் உந்தனுக்கு போதித்தேனே
6637.
போதித்தேன் இன்னமொரு மார்க்கங்கேளிர் பொங்கமுடன் புலிப்பாணி புனிதவானே
ஆதித்தன் சந்திரன்போல் வெள்ளிபோக்கு வப்பனே யானுரைப்பேன் அன்புள்ளோனே
நீதியுடன் சூதமது பலந்தானொன்று நிஷ்களங்க மானதொரு காடிவீரம்
தீதில்லாப் பாஷாணஞ் சுன்னமொன்று தீர்க்கமுடன் களஞ்சியிடை தானுந்தூக்கே
6638.
தூக்கியே கல்வமதி லிட்டுமைந்தா துப்புறவாய் ஆறுவகை செயநீர்தன்னால்
நோக்கமுடன் தானரைப்பாய் இரண்டுசாமம் நுணுக்கமுடன் மெழுகதனை யுருட்டிமைந்தா
வாக்குடனே பாகமது பிசகிடாமல் வளமான சூதமென்ற வெண்ணைதன்னை
பாக்களவா யுருட்டியதை மூசையிட்டு பண்புபெற சில்லிட்டுச் சீலைசெய்யே
6639.
சீலையென்றால் ஏழுசீலை வலுவாய்ச்செய்து திட்டமுடன் சரவுலையில் வைத்துவூது
வாலையுடன் தீயாறி யெடுத்துப்பாரு வளமான சூதமது வெள்ளியாகும்
காலையிலே தானுதிக்குஞ் சூரியன்போல் கருவான வெள்ளியது ஜோதிமெத்த
ஆலையெனும் தகடதனை இறுத்திமைந்தா வப்பனே புடம்போடத் துலக்கமாமே
6640.
துலக்கமாம் வெள்ளியது என்னசொல்வேன் துப்புரவாய்ச் சூதமென்ற வெள்ளியாச்சு
பலத்ததொரு சிவராச வெள்ளிதன்னை பாருலகில் நாதாக்கள் மறைத்துவைத்தார்
சுலபமென்ற வேதைமுகங் காணாமாண்பர் சுந்தரனே வெகுகோடி மாண்பரப்பா
கலக்கமது வாராது சூதவெள்ளி கருவான வங்கத்துக்கு அசைந்திடாதே

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6641-6650

6641.
அசையாது சோதனைக்கு வுறுதிவெள்ளி வப்பனே நாதாக்கள் நூலறிந்து 
வகையொன்றும் நேராமல் தாள்பணிந்து வஷ்டாங்க யோகநிலைத் தன்னிற்சென்று
திசையெட்டுங் குளிகையது யானுங்கொண்டு திருவிளையாள் மனோன்மணியாள் போற்றிசெய்து
இசையுடனே யுந்தமக்கு இந்தபாகம் இன்பமுடன் தான்கொடுத்த வேதையாச்சே
6642.
ஆச்சப்பா கைபாகஞ் செய்பாகந்தான் வப்பனே வினயமென்ற பதமறிந்து
மூச்சடங்கி நெடுங்கால மிருந்தசித்து முனையான பாகமதைக் கைமறைத்தார்
பாச்சலுடன் அடியேனுங் குளிகைகொண்டு பாருலகைச் சுத்தியல்லோ மனதுவந்து
வீச்சுடனே யுந்தமக்கு ஓதிவைத்தேன் விட்டகுறை இருந்ததினால் வாய்க்கலாச்சே
6643.
வாய்க்கவே முன்செய்த புண்ணியத்தால் வளமான வினயமென்ற வெள்ளிப்போக்கு
தாய்க்கமலந் தாள்பணிந்த புண்ணியத்தால் சட்டமுடன் உந்தமக்குக் காணலாச்சு
பேய்பிடித்து மாண்பரெல்லாம் வாதந்தேடி பேரான நிலைகடந்து பதிகடந்து
மாய்கையெனும் சமுசார மிட்டிழந்து மாடிழந்து வீடிழந்து மாண்டார்தாமே
6644.
மாண்டாரே வையகத்தில் கோடிமாண்பர் மானிலத்தில் கணக்குண்டோ லக்கோயில்லை
வேண்டியதோர் கருமான மனேகங்கொண்டு விட்டகுறை யில்லாமல் விழலாய்ப்போனார்
காண்டவம்போல் பூர்வீக புண்ணியத்தால் தற்பரனே யுந்தமக்கு இந்தபாகம்
ஆண்டகையாள் மனோன்மணியாள் கடாட்சத்தாலே வப்பனே யுந்தமக்கு வந்தவாறே
6645.
வாறான யின்னமொரு போக்குசொல்வேன் வளமையுள்ள புலிப்பாணி மன்னாகேளும்
கூறான வெள்வங்கம் பலந்தானொன்று கொற்றவனே சூதமது பலந்தான்பாதி
நீறான பாஷாண சுன்னமப்பா நெடிதான மூசையிட்டு வுருக்கியல்லோ
பேறுடைய பற்பமது குன்றியப்பா பெருமையுடன் உருக்குமுகந் தன்னில்தாக்கே
6646.
தாக்கவே வெள்வங்கம் உருகியல்லோ தகமையுள்ள நீரதனை யுரிந்துகொள்ளும்
தேக்கலென்ற வெள்ளீய வூட்டாங்காய்ப்பு தெளிவான நீரதுவும் மருகியல்லோ
நோக்கமுடன் பிறவியென்ற வெள்ளியாச்சு நெடிதான வங்கமதற் கசையாதப்பா
ஏக்கமது கொள்ளாமல் இந்தபாகம் எளிதாகச் செய்வதற்கு சித்தியாமே
6647.
சித்தியாம் வெள்ளீயம் பிரயோகித்தால் சீரான சமுசாரிக் கானவித்தை
முத்திபெற வழியுண்டு ஞானமுண்டு மூதுலகில் நீயுமொரு சித்தனாவாய்
நித்தியமும் சிவானந்த நிலையில்நின்று நீதியுடன் சிவயோகந் தன்னைப்பாரு
சத்தியவான் வார்த்தையப்பா பொய்யாதப்பா சட்டமுடன் காலாங்கி சொன்னவாக்கே
6648.
சொன்னதொரு புலிப்பாணி மைந்தாகேளு சொகுசுள்ள கண்மணியே தீராமாரா
நன்னயமாய் பலநூலுங் கற்றுணர்ந்த நாதாந்த சித்தொளிவை நவில்வேனப்பா
உன்னிதமாய் நாகமென்ற லோகந்தன்னை வுற்பனமாய்த் தானெடுத்து வுண்மைபாரு
பன்னவே நாகமது தானெடுத்து பாலகனே உருக்கியல்லோ சாய்த்திடாயே
6649.
சாய்க்கவே இலுப்பைநெய் தன்னிலப்பா சட்டமுடன் சாரமதைக் கிராசமீய்ந்து
வாய்க்கவே பதினோரு முறைதானப்பா வளமுடனே யுருக்கிமிகச் சாய்த்தாயானால்
மாய்த்துமே சட்டையது சவளையாகி மகத்தாக நாகமது வொருகண்ணாகி
பேய்ந்ததொரு மழையினால் மண்கசடான பேரான பிரீதிவி போலிருக்கும்பாரே
6650.
பாரப்பா புலிப்பாணி யின்னங்கேளு பாகமுடன் முனசெய்த நாகந்தன்னை 
நேரப்பா கரிவங்கந் தானுங்கூட்டி நேர்மையுடன் தானுருக்கிச் செப்பக்கேளிர்
ஆரப்பா தேன்வளைய லென்றபூநீர் வப்பனே தானுருக்கி கவுவிட்டாட்டி
தீரப்பா நாகமதற் கங்கிபூட்டி திறமுடனே ஏழுவகைச் சீலைசெய்யே

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6651-6660

6651.
ஏழான சீலையது வலுவாய்ச்செய்து எழிலான ரவிதனிலே காயவைத்து
ஆழான புடமதுவுங் கோழியப்பா வப்பனே தான்போட்டு எடுத்துப்பாரு
மீளான நாகமது கட்டும்பாரு மிக்கான தவளையென்றே செப்பலாகும்
கோளாறு வாராது இந்தபாகம் கொற்றவனே நாகமது கட்டிப்போச்சே
6652.
கட்டியதோர் நாகமது யின்னஞ்சொல்வேன் கருவான கையானின் சாற்றினாலே
திட்டமுடன் தானுருக்கி சாய்ப்பாயப்பா திறமான நாகமது சீறலேகி 
சட்டமுடன் தவளையது போலேயாகி தகமையுள்ள நாகமது பகையடங்கி
நட்டமில்லா களங்கமதுபோல் ஜோதியோடும் நலமான நாகத்தின் கட்டுதானே
6653.
தானான நாகமது கட்டுதன்னை தண்மையுள்ள பூபாலா சாற்றக்கேளு
மானான மருதோன்றி சாற்றினாலே மார்க்கமுடன் தானுருக்கி சாய்ப்பாயப்பா
பானான பரஞ்சுடர்போல் ஜோதிமின்னும் பாலகனே பத்துமுறை உருக்கிச்சாய்க்க
தேனான நாகமது கண்ணடைந்து யேற்றமுடன் புத்துமென்ற புட்டுதானே
6654.
புட்டான நாகமதைத் தானெடுத்து புகழான பழச்சாற்றில் உருக்கிச்சாய்க்க
திட்டமுடன் பத்துமுறை வுருக்கிப்பாரு தீர்க்கமுள்ள சவளையது போலேயாகும்
கட்டமுடன் பாராமல் விராலிதன்னை கருவாகத் தானுருக்கிச் சாய்த்துப்பாரு
நட்டமென்ன சிவந்தகொடி வேலிதன்னை நன்றாக பத்துமுறை சாய்த்திடாயே
6655.
பத்தான முறையதுஞ் சாய்த்தாயானால் பாலகனே நாகமது கொடிகட்டாம்
சத்தான நாகமது கட்டேயானால் சதகோடி சூரியர்போல் பிரகாசிக்கும்
முத்தமரும் ஞானமுள்ளோர் செய்யமாட்டார் மூதுலகில் சமுசாரி செய்யும்வித்தை
குத்தமது வாராது நாகந்தன்னை குணமுடனே செய்பவனே வாதியாமே
6656.
வாதியாம் நாகமென்ற களங்கெடுத்து வரிசைபெற சூதமது நேரேசேர்த்து
நீதியாம் ஆறுவகை ஜெயநீர்தன்னால் நீட்டியரை யெண்சாமம் தானுமப்பா
ஆதியெனும் பரஞ்சுடரை மனதிலெண்ணி சோராமல் தானரைப்பாய் மெழுகுபோலாம்
பாதிமதி சடையணியுந் தம்பிரானால் பாலகனே மெழுகது போலிருக்குந்தானே
6657.
தானான மெழுகதனை பில்லைதட்டி தகமையுடன் ரவிதனிலே காயவைத்து 
கோனான குருசொன்ன வாக்குபோலே கொற்றவனே சில்லிட்டுச் சீலைசெய்து
மானான மணல்மறைவிற் புடத்தைப்போடு மகத்தான செந்தூரம் நீலவர்ணம்
பானான புடமதுவும் பத்தேயாகும் பாலகனே தானரைத்துப் போடுபோடே
6658.
போடவே செந்தூரம் அருணன்போலாம் பொங்கமுடன் தானெடுத்து செப்பக்கேளு
ஆடவே ஜீவனத்துக் கிடமேதென்றால் வப்பனே வழிபாடு சொல்வேனப்பா
நீடவே செம்பதுதான் களஞ்சிபத்து நெடிதான செந்தூரங் களஞ்சியொன்று
கூடவே தானுருக்கிக் கொடுத்துப்பாரு கொற்றவனே மாற்றதுவும் ஒன்பதாமே
6659.
தாமேதான் செம்பதனை வாரடித்து தண்மைபெற புடம்போட பிறவித்தங்கம்
வேமேதான் காவிக்கு முப்புக்கேகா வேதாந்தக் கண்மணியே விளக்கம்பாரு
ஆமேதான் பசுமையென்ற தங்கமப்பா வப்பனே சமுசாரிக் கானதங்கம்
நாமேதான் சொன்னபடி நாகத்தங்கம் நலம்பெறவே செய்பவனே புத்திவானே
6660.
புத்தியா மின்னமொரு போக்குசொல்வேன் புகழான வெள்ளியது பத்துக்கொன்று
வெற்றிபெற தானுருக்கி குருவொன்றீய வித்தகனே மாற்றதுவும் என்னசொல்வேன்
சத்தியமாய் எட்டரைதான் ஆணிக்கொக்கும் சன்மார்க்க புத்தியுள்ள பூபாலாகேள்
நித்தியமும் குருபதாம் புயத்தைப்போற்றி நீமகனே ஜீவித்து இருப்பீர்காணே