6671.
போடவேதான் பூரமென்ற சரக்குதன்னை பொங்கமுடன் அயச்சட்டி தன்னிலிட்டு
நீடவே பலமொன்றாய் நிறுத்திக்கொண்டு நிஷ்களங்க மானவெள்ளாட்டுப் பாலால்
சாடவே சுறுக்கதுவும் எட்டுசாமம் தண்மையுடன் தான்கொடுத்து பின்னுங்கேளு
கூடவே பசுவின்பால் நாலுசாமம் கொற்றவனே தான்கொடுத்து எடுத்திடாயே
6672.
எடுக்கவே பூரமது என்னசொல்வேன் எழிலான தந்தமது போலேகாணும்
ஒடுக்கமதாய் இருகியல்லோ யிறுகிக்காட்டும் வுத்தமனே தவளைநிறம் போலேகாணும்
தொடுக்கவே வெடியுப்பு பலமொன்றாகும் தோறாமல் சீனமது பலமொன்றாகும்
விடுத்ததொரு துருசதுவும் பலமொன்றாகும் வித்தகனே சிங்கியது பலமொன்றாமே
6673.
ஒன்றான சரக்கெல்லாம் கல்வமிட்டு வுத்தமனே நாதாக்கள் சொன்னவண்ணம்
தென்றிடவே கல்வமதி லிட்டுமைந்தா வேகமுள்ள வருக்கன்பால் தன்னாலாட்டி
குன்றான பூரமதுக் கங்கிபூட்டி கூர்மையுடன் ரவிதனிலே காயப்போடு
நன்றான சீலையது ஏழுசெய்து நலமுடனே எரிக்கும்வகை வரிசைகேளே
6674.
வரிசையாய் தளவாயாம் பாண்டந்தன்னில் வகையுடனே பூமணலைக் கொட்டியேதான்
பரியான பூரமதை எடுத்துமைந்தா பாங்குபெற மணலதனில் பொதிந்துமல்லோ
விரிவான மணலதனால் மேலுமூடி மேலுமந்தப் பாண்டமிட்டு சில்லுசெய்து
துரிதமுடன் ரவிதனிலே காயவைத்து துப்புரவாய் வாலுகையால் ஏற்றிடாயே
6675.
ஏற்றியே தீபமது என்னசொல்வேன் எழிலான புலிப்பாணி புத்திவானே
போற்றியே வம்பாளின் பதாம்புயத்தை பொங்கமுடன் தானெரிப்பாய் கமலம்போல
நீற்றவே பூரமது கட்டுவாகி நீதியுடன் தவளம்போல் நிற்கும்பாரு
ஆற்றியே ஜாமமது நாலுமாகும் வப்பனே தானெரித்து எடுத்திடாயே
6676.
எடுக்கவே கணபதியைப் போற்றிசெய்து எழிலான பாண்டமது திறந்துபாரு
விடுத்ததொரு பூரமது என்னசொல்வேன் விண்ணுலகு சந்திரன்போல் விளக்கமெத்த
தொடுத்ததொரு பூரமதைத் தானெடுத்து சோராமல் கவசமதை நீக்கியேதான்
தடுத்திடா மருந்துவகை யானுரைப்பேன் தற்பரனே சிற்பரனே சார்ந்துகேளே
6677.
சார்ந்துமே பூரமதை எடுத்துபாலா தண்மையுடன் பற்பமது செய்வதற்கு
ஓர்ந்துமே யீயமென்ற செந்தூரத்தை ஓகோகோ நாதாக்கள் மறைத்துவைத்தார்
தீர்ந்ததொரு செந்தூரந் தனையெடுத்து தீர்க்கமுடன் பூரமதுக் கிடையேதூக்கி
ஆர்ந்துமே சிற்றண்டக் கருவினாலே வப்பனே தானரைப்பாய் சாமம்நாலே
6678.
நாலான சாமமது வரைத்தபின்பு நலமாகப் பூரமதுக் கங்கிபூட்டி
பாலான ரவிதனிலே காயப்போடு பட்சமுடன் தானெடுத்து சீலைசெய்து
மாலான மண்மறைவிற் புடத்தைப்போடு மகத்தான கோழியென்ற புடமேயாகும்
சூலான பூரமதுக் குள்ளிருந்து சுந்தரனே சூதமது மடியும் பாரே
6679.
மடியுமே இப்படிதான் பத்துமுறைபோடு மார்க்கமுடன் ஈயமென்ற செந்தூரத்தால்
படிபடியாய் கருவிட்டு ஆட்டிஆட்டி பாலகனே பூரமதுக் கங்கிபூட்டி
விடிந்தபின்பு ரவிதனிலே காயவைத்து வித்தகனே சீலையது வலுவாய்ச்செய்து
முகந்தபின்பு முன்போலே புடமும்போடு முனையான பதமாறி எடுக்கக்கேளே
6680.
கேளேதான் பூரமது இறுகியல்லோ நெடியான சூதமது மடங்கிநிற்கும்
வீளேதான் பூரமதை எடுத்துமைந்தா விருப்பமுடன் பின்னுமல்லோ வதிதங்கேளு
நாளேதான் போகாமல் நாதவானே நவிலுகிறேன் பஞ்சபூத வாராதாரம்
சூளேதான் துருசுவெடி யுப்புக்காரம் சுந்தரனே வருஞ்சாரம் சீனந்தானே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக