பக்கங்கள்

திங்கள், 8 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6681-6690

6681.
சீனமாங் கரியுப்புத் தானுஞ்சேர்த்து சிறப்புடனே செவ்வாலம் பாலாலாட்டி
சோனமதாம் புரத்துக் கங்கிபூட்டி சோராமல் ரவிதனிலே காயப்போடு
கானமருஞ் சுண்ணாம்பு சீலைசெய்து கடுரவியால் பின்னுமங்கே காயவைத்து
ஊனமது வாராமல் மணல்தானப்பா வுத்தமனே கோழியென்ற புடத்தைப்போடே
6682.
புடமாறீத் தீர்ந்தபின்பு எடுத்துப்பாரு புகழான வாறுவகை சரக்குதன்னால்
தடமான பஞ்சபூத வாராதாரம் தண்மையுடன் சரக்கதுவும் சேர்த்துமல்லோ
திடமாகப் புகழடங்கி வீரடங்கி தீர்க்கமுள்ள பூரமது என்னசொல்வேன்
மடலான பூரமது வுருகியல்லோ மார்க்கமுடன் தந்தம்போ லிருக்கும்பாரே
6683.
தந்தமாம் பூரமது கட்டுமானால் தண்மையுள்ள வேதையது என்னசொல்வேன்
அந்தமுடன் பூரமதை எடுத்துபாலா ஆகாகா வராகமென்ற நெய்யினாலே
பந்தமுடன் சுருக்கதுவும் நாலுசாமம் பாகமுடன் தான்கொடுக்க முழுகட்டாகும்
விந்தையுடன் பூரமது சிடிகைவேதை விண்ணுலகில் மண்ணுலகில் காணார்தாமே
6684.
காணாமல் சித்துமுனி நாதர்தாமும் கருவான சாத்திரங்கள் அதிகஞ்சொன்னார்
தோணாத கருக்குருவும் முறைபாடெல்லாம் தோறாமல் பாடிவைத்தார் நூல்கள்தோறும்
வீணாதான் போகாமல் சாத்திரத்தில் விட்டகுறை இருந்தாலே லபிக்குமென்று
மாணாக்கள் அறியவென்று பலநூலெல்லாம் மானிலத்தில் பலவிதமாய்க் கூறினாரே
6685.
கூறினார் வாதநூல் அனேகஞ்சொல்லி குணமான பாகமதை விட்டறுத்து 
தேறினார் நூல்களெல்லாம் முன்பின்னாக தேற்றமுடன் கைமறைப்பாய்க் கட்டறுத்து
மீறியே சிலநூலில் உண்மைகூறி மிக்கான செய்பாகம் வேரறுத்து
சீறியே மாணாக்கர் தமைச்சினந்து சீரறுத்து வாரறுத்து திகைத்திட்டாரே
6686.
திகைத்ததொரு நூல்களெல்லாம் உளவாராய்ந்து தீர்க்கமுடன் காலாங்கிப் பதம்பணிந்து
பகைத்ததொரு சித்தர்களைக் கரங்குவித்து பட்சமுடன் அஞ்சலிகள் மிகவுஞ்செய்து
வகையுடனே குளிகையது பூண்டுமல்லோ வளமான சீனபதி அடியேன்சென்று
தகமையுடன் குருபரனார் பதாம்புயத்தை தாள்பணிந்து சதாகாலந் தரிசித்தேனே
6687.
தெரிசித்தேன் சமாதிமுகம் மதிவாய்நின்று தேற்றமுடன் குருவணக்க மதிகங்கூறி
புரிசடையோன் பதாம்புயத்தை மனதிலெண்ணி பூபாலா காலாங்கி நாதர்பாதம் 
தெரியாத எந்தனுக்கு உகமைகூறி தெளிவான உபதேசம் மிகவேநண்ணி
சரியான சமாதியது பெறவேவேண்டி சட்டமுடன் வருளெனக்கு அருளென்றேனே
6688.
என்றதொரு வாக்கதுவும் கூறும்போது எழிலான காலாங்கி நாதர்தாமும்
தென்றிசையில் கும்பமுனி நாதருக்கு தேற்றமுடன் தரிசனைகள் தந்தாற்போல
சென்றதொரு எந்தனுக்கு வாசீர்மங்கள் தெளிவாக மனதுவந்து வதிகங்கொண்டு
கன்றழுகுங் காலமதில் தாயுவந்து கடும்பசிக்கு பால்கொடுத்த கதைபோலாச்சே
6689.
ஆச்சப்பா எந்தனுக்கு உபதேசங்கள் அவனிதனில் ஆரதுதான் சொன்னாரில்லை
மூச்சடங்கி சென்றதொரு காலாங்கிநாதர் முனையாக எந்தனுக்கு உண்மைகூறி
மாச்சலுடன் சமாதிமுகந் தானிருந்து மன்னவனே கருவிகர ணாதியந்தம்
ஏச்சலது வாராமல் பெற்றுமல்லோ எழிலான சீனபதி கடந்திட்டேனே
6690.
கடந்தேனே சீனபதி நீங்கியல்லோ காலாங்கி நாதருட கிருபையாலும்
சுடர்போன்ற மனோன்மணியாள் கடாட்சத்தாலும் சுந்தரனே யஷ்டதிசை துடர்ந்துவந்தேன்
திடமான முறைபாடு வழிபாடெல்லாம் தீர்க்கமுடன் குணபாடு தெரிந்துமேதான்
சட்டமுடன் காயாதி கற்பங்கொண்டு தாரணியில் நெடுங்கால மிருந்திட்டேனே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக