பக்கங்கள்

திங்கள், 8 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6661-6670

6661.
காணவே வாரடித்து புடந்தான்போடு கருவான வெள்ளியது பசுமையாகி 
நீணவே தானிருக்கும் மாற்றோமெத்த நிஷ்களங்க மானதொரு தங்கமப்பா
ஆணவங்கள் தானொடுங்கி பதாம்புயத்தை வப்பனே எந்நாளும் மனதிலெண்ணி
காணவே கரங்குவித்து அஞ்சலித்து காசினியில் மர்மமதாய் வாழ்குவீரே
6662.
வாழ்கவென்றால் செந்தூரம் பதனம்பண்ணு மகத்தான புலிப்பாணி மன்னாகேளு
வாழ்கவென்றால் செந்தூரந் தனையெடுத்து வளம்பெறவே செயரோகந் தன்னிலீவாய்
வாழ்கவென்றால் மேகமென்ற இருபதுக்கும் மகத்தான கசரோகந் தன்தனக்கும்
வாழ்கவென்றால் காயாதி கற்பம்போலே வண்மையுடன் தானருந்தி வண்மைகொள்ளே
6663.
கொள்ளவே அனுபானந் தன்னிலீய கொற்றவனே காசமது வாறும்போகும்
உள்ளதொரு பாண்டுவகை யாறுந்தீரும் வுத்தமனே வாயுவென்ற தென்பதும்போம்
கள்ளமிலா பித்தமது நாற்பதும்போம் கயரோகஞ் சில்விஷங்க ளற்றுப்போகும்
வள்ளலுயர் மேகமென்ற குஷ்டரோகம் வண்மைபெறுந் தாமரையும் தானும்போமே
6664.
போமேதான் பொல்லாத ரோகம்போகும் போக்கான வாய்நாற்றம் வெள்ளைதீரும்
நாமேதான் சொன்னபடி நளிர்சுரங்கள் நலமிலாக் கிராணியது ஆறுந்தீரும்
வேமேதான் நேத்ரவலி தொண்ணூற்றாறும் விட்டகலும் மேனியது காந்திமெத்த
ஆமேதான் நாதாக்கள் கொண்டகற்பம் வப்பனே நாகசெந் தூரம்பாரே
6665.
பாரேதான் செந்தூரம் உண்டபேர்க்கு பாலகனே யேழானை பலமுண்டாகும்
நேரேதான் கிருஷ்ணாவ தாரனைப்போல் நெடிதான $லீலை மன்மதந்தான்
சீரேதான் செந்தூரந் தானுமல்லோ $ராமர் கொண்டதொரு கற்பமாகும்
வேறேதான் கற்பமது இதற்கீடுண்டோ வேதாந்தத் தாய்கொடுத்த கற்பமாச்சே
6666.
கற்பமாம் நாகமென்ற செந்தூரந்தான் காலாங்கி நாதருட கடாட்சத்தாலே
சொற்பமென்று நினையாதே துய்யபாலா சுந்தரனே சமுசாரிக் கானவித்தை
விற்பனர் கொண்டாடும் வேதைதன்னை விள்ளாதே யொருவருக்கும் விள்ளவேண்டாம்
அற்பமென்று நினையாதே வருண்மைந்தாகேள் ஆச்சரிய மானதொரு மகிமைதானே
6667.
மகிமையா மின்னமொரு போக்குசொல்வேன் மகத்தான புலிப்பாணி மன்னாகேளு
அகிலமெலாந் தான்புகழும் காலாங்கிநாதர் வண்மையுடன் எந்தமக்கு சொன்னநீதி
சகிதமுடன் உந்தமக்கு ஞானோபித்து சகலகலை கியானமெல்லாம் உபதேசிப்பேன்
விகிதராய்க் கருமிகளும் உம்மைப்பற்றி வீரமுடன் நேசமது கொள்வார்பாரே
6668.
பாரான கருமிகளும் உம்மைவேண்டி பாருலகில் சினேகவதஞ் செய்யவென்று
காரான நல்லவர்போல் வார்த்தைகூறி கடுஞ்சினத்தை மனதிலுன்னி மெய்யேகூர்வார்
நேரான சிடிகையென்ற வேதைமார்க்கம் நேர்மையுடன் தாமுரைக்க வதிதஞ்சொல்வார்
கூரான வார்த்தையது மிகவிடாமல் குணமுடனே நயனமதுவாய் நேசங்கொள்ளே
6669.
கொள்ளவென்றால் பூரணத்தைக் கேட்பாரப்பா கொற்றவனே மர்மமதை வெளிவிடாதே
தெள்ளுதமிழ் வாகடத்தைப் பேசுபேசு தேஜொளியில் சின்மயத்தை வெளியிடாதே
உள்ளதொரு பொருளெல்லாம் உவமையோடும் வுத்தமனே தடம்பிரித்து கேட்பாரப்பா
கள்ளமன மில்லாமல் கபடகற்றி கண்மணியே உண்மையது புகன்றிடாயே
6670.
புகலவே புலிப்பாணி மன்னாகேளு புகழான பூரணமென்ற வேதைதன்னை
சகலமுனி சித்துகளுஞ் சொன்னாரப்பா தாரணியில் மர்மமதாய் சொல்லிவிட்டார்
நிகலவே சாத்திரங்கள் கோடாகோடி நீதியுடன் கட்டுமுறை யனேகங்கண்டார்
அகலமுள்ள இரும்பென்ற பாண்டந்தன்னை வப்பனே வெண்மையதாய் துலக்கிப்போடே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக