6721.
ஓதவே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் ஓகோகோ நாதாக்கள் ஒளித்தமார்க்கம்
நீதமுடன் காயகற்ப சூரணந்தான் நிலையான யோகிகட்கும் மாண்பருக்கும்
தோடமுடன் சரக்குவகை செப்பக்கேளும் தோன்றாமல் சுக்குடனே மிளகுமாகும்
ஆதமுடன் திப்பிலியும் கடுக்காய்த்தான்றி வப்பனே மாசிக்காய் தானுங்கூட்டே
6722.
கூட்டவே தேசரவம் வாய்விளங்கம் குணமான கார்போகங் கடுக்காய்ப்பூவும்
நாட்டமுடன் சிற்றரத்தை பேரத்தை நலமான வாலுளுவை யோமந்தானும்
வாட்டமுடன் சிறுமல்லி பேராமல்லி வளமான குராசுரளி யோமந்தானும்
கோஷ்டமுடன் கட்டதிப்பி லியுங்கூட்டி குணமான அதிமதுரம் மேலந்தானே
6723.
தானான கிராம்புடனே லவங்கப்பட்டை தண்மையுள்ள ஜாதிக்காய் ஜாதிபத்திரி
கோனான தக்கோலம் பிறப்பின்மூலம் கோடிதான பூமிசர்க்கரை யுமாகும்
தேனான பரங்கியுட பட்டைதானும் தெளிவான வால்மிளகு செங்கடுக்காய்
பானான துளசியென்ற வித்துதானும் பாங்கான ஆலினது வித்துங்கூட்டே
6724.
வித்தான அரசினது வித்துமாகும் வீரான யிச்சினுட வித்துமாகும்
சுத்தமுள்ள பூனையென்ற காலிதானும் சுந்தரனே ஊமத்தை வித்துங்கூட்டு
மெத்த வரிதான விராலிவித்து மேன்மையுள்ள பூவரசன் வித்துகூட்டு
சத்தநதிக் கப்பாலே விளையும்வித்து சந்தனமாம் வித்ததுவும் கூடச்சேரே
6725.
சேரப்பா அத்தியுட வித்துதானும் செயலான அழிஞ்சியுட வித்துதானும்
கூரப்பா சாரத்தின் வித்துதானும் குறிப்பான வூசத்தின் வித்துதானும்
நேரப்பா முருக்கிலையின் வித்துதானும் நெடிதான எருக்கினிட வித்துதானும்
ஆரப்பா சூரியுட வித்துதானும் வப்பனே எல்லினுட வித்துகாணே
6726.
காணவே வகைவகைக்கு பலந்தானொன்று கருத்தாகத் தான்வருத்து சூரணித்து
தோணவே சூரணத்தை ஒன்றாய்க்கூட்டி சோராமல் பசும்பாலில் சுத்தித்தேதான்
வேணதொரு சரிபாகஞ் சீனிசேர்த்து விருப்பமுடன் சீசாவிற் பதனம்பண்ணு
ஆணவங்கள் வுண்டாக இந்தபாகம் வப்பனே சரிகூட்டி பதனம்பண்ணே
6727.
பண்ணவே முப்பூவுங் களஞ்சிசேர்த்து பண்மையுடன் மண்டலந்தான் கொண்டபேர்க்கு
நண்ணவே நடுச்சாம வயதுதன்னில் நாட்டமுடன் சிவயோகஞ் செய்யும்பேர்க்கு
திண்ணவே மண்டலந்தான் காயகற்பம் தீர்க்கமுடன் சமுசாரிக் கானவித்தை
வண்ணமுடன் இப்பாகஞ் சித்தருக்கு வளமையுடன் மறைத்துவைத்தார் வண்மைபாரே
6728.
பாரேதான் மண்டலங் காயாதியப்பா பாங்குபெற வுண்டவர்க்கு எல்லாஞ்சித்தி
நேரேதான் சமுசாரிக்கான கற்பம் நெடிதான துறவிகட்கும் உகந்தகற்பம்
சீரேதான் காயாதி கொண்டபின்பு தீர்க்கமுடன் வழலையது கொள்ளவேண்டும்
நீரேதான் வழலையது கைபாகந்தான் நீதியுடன் அறிவதற்கு இன்னங்கேளே
6729.
கேளப்பா புலிப்பாணி மன்னாபாரு கெடியான யோகங்கள் சாதிப்போர்க்கு
வாளேதான் சமுசாரி குடியுள்ளோர்க்கு வகுப்பான சிவயோகி வேடத்தோர்க்கும்
பாளேதான் யோகமது போகாமற்றான் பகருகிறேன் திராவக வழலையப்பா
சூளேதான் கைபாகஞ் செய்பாகந்தான் சூட்டுகிறேன் வரிசைமுறை யின்னங்கேளே
6730.
முறையான முறைபாடு யாதென்றாக்கால் முனையான லவணமது வெடியுப்பாகும்
துறையான கல்லுப்பு வளையலுப்பு துடியான சவுட்டுப்பு இந்துப்பாகும்
குறையகற்பம் கரியுப்பு பூநீருப்பு குணமான காரமுடன் சீனகற்பம்
பிறைபோன்ற பாஷாணங் கெவுரிதானும் பேரான லிங்கமது பூரங்கூட்டே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக