6731.
கூட்டவே வீரமுடன் சிங்கிதானும் குணமான தாளகமும் கெவுரிதானும்
நீட்டவே மனோசிலையும் வரிதாரந்தான் நிலையான கெந்தியுடன் கற்பாஷாணம்
நாட்டமுடன் சங்குயென்ற பாஷாணந்தான் நலமான துத்தமுடன் துருசுங்கூட்டு
வாட்டமுடன் சரக்கெல்லாஞ் சமனதாக வளமுடனே தானிறுத்து எடுத்துக்கொள்ளே
6732.
கொள்ளவே சரக்குநிகர் சாரஞ்சேர்த்து கொடிதான சீனமது ரெட்டிப்பாக்கி
விள்ளவே குழிக்கல்லில் பொடியதாக்கி வீரான வாலையிட்டு திராவகந்தான்
மெள்ளவே பாண்டமதில் சரக்கையிட்டு மேன்மையுடன் சக்கரமாம் வாலைதன்னை
எள்ளளவு கோளாறு நேராமற்றான் எளிதான திராவகத்தை வாங்குவாங்கே
6733.
வாங்கையிலே திராவகந்தான் வெளுத்தவண்ணம் வளமையுடன் மறுபடியும் அடித்துவாங்கு
தூங்கியே திரியாதே துய்யபாலா துப்புரவாய் திராவகத்தை யேழுமுறைவாங்கு
ஏங்கியே இருக்காமல் திராவகத்தை எழிலான சீசாவிற் பதனம்பண்ணு
சாங்கமுடன் யோகமது சாதிக்குங்கால் சட்டமுடன் திராவகத்தின் தண்மைகேளே
6734.
தண்மையாம் திராவகத்தை தாக்குவண்ணம் தகமையுள்ள புலிப்பாணி தயவுள்ளோனே
உண்மையுடன் மண்டலந்தான் அந்திசந்தி உத்தமனே களஞ்சியது கொண்டாயானால்
நண்ணமுடன் வாசியது மேல்நோக்காது நளினமது வாராது நடுங்காமேனி
சுன்னமது கொண்டாலும் ஒன்றுமில்லை சுந்தரனே திராவகத்தை பதனஞ்செய்யே
6735.
செய்யவே இன்னமொரு புலப்பஞ்சொல்வேன் செயலான புலிப்பாணி கணிதவானே
வையகத்தில் நெடுங்கால மிருந்துமல்லோ வளமுடனே உபதேசம் அனேகங்கொண்டீர்
வெய்யவே மகுத்துவங்கள் கோடாகோடி மேன்மையுடன் தானடைந்தீர் புண்ணியத்தால்
பையவே யுந்தமக்கு ஞானப்பாலை பகருகிறேன் புலிப்பாணி பண்புள்ளோனே
6736.
பண்பான புலிப்பாணி பாருள்ளானே பகருகிறேன் ஞானமென்ற பாலையப்பா
நண்பான வேங்கைதனை விட்டிறங்கி நலமுடனே திருப்பாலின் கடலின்மார்க்கம்
விண்ணதனில் குளிகையிட்டு யென்பின்னாக விட்டகுறை இருந்ததொரு புண்ணியத்தால்
வண்ணமுடன் பின்தொடர்ந்து வருகவென்று வணக்கமுடன் போகரவர் கூறுவாரே
6737.
கூறுவார் வாய்திறந்து போகர்தாமும் குணமான புலிப்பாணி தன்னைத்தானும்
நாறுமுடல் உந்தமக்கு உபதேசங்கள் நற்கதிகள் பெறுவதற்கு நயமதாக
ஆறுபுடை சூழ்நகரந் தன்னைநீங்கி வப்பனே திருப்பாலின் கடல்வாவென்று
பேறுடைய சப்தமுடன் உச்சாடித்து பெருமையுடன் சீஷனுக்கு உபதேசிப்பாரே
6738.
போதிப்பார் லோகமது மார்க்கந்தன்னை பொங்கமுடன் சாத்திரத்தில் வழிபாடெல்லாம்
சாதிப்பா யுலகமெல்லாம் ஆடலாகும் தற்பரன்போ லிருப்பதற்கு ஞாயமுண்டு
நீதியுடன் வையகத்து மகிமையெல்லாம் நிஷ்களங்க மாகவல்லோ நடத்தலாகும்
ஆதியந்த மானதொரு சாதிபேதம் வப்பனே நடத்துவதாம் உண்மைபாரே
6739.
பாரேதான் திக்கெட்டும் ஆளலாகும் பாராளும் மன்னவரை வெல்லலாகும்
தீரேதான் திக்குவிஜயம் கொண்டதீரன் தீர்க்கமுள்ள பற்குணனை வெல்லலாகும்
சீரேதான் ஏழுகடலுங் காணலாகும் சிறப்புடனே நீரின்மேல் நடக்கலாகும்
கூரேதான் மிருகமென்ற ஜாதிதன்னை குறிப்புடனே யழைப்பதற்கு வசியமுண்டே
6740.
வசியமாம் பட்சிதனை பிடித்துவந்து வழக்கமுடன் பாஷைகளைச் சொல்லலாகும்
நிசிதமுடன் அரவமதை யாட்டலாகும் நிஷ்டூர மானதொரு கொடியபேரை
நசிதமுடன் நன்மையாற் சொல்லலாகும் நலமான பரிபோகஞ் செய்யலாகும்
பசிவந்த பாலனுக்கு பால்கொடுத்த பாருலகில் கதைபோல முடியுந்தானே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக