6761.
இரண்டான கலைக்குள்ளே முப்பத்திரண்டு எழிலான கலையதுவும் இதிலடக்கம்
திரண்டுமே ரேசகபூ ரகத்தைப்பற்றி தெளிவான கும்பகமும் இதிலடக்கம்
கரண்டகம்போல் ஆகாசகபாடமாகும் கருவிகர ணாதியந்தம் இதிலடக்கம்
வரண்டதொரு மேல்வீடு மோட்சவீடு வளம்பெரிய வாகாய கோட்டையாமே
6762.
கோட்டையாங் கபாலமென்ற கோட்டையப்பா கொடிதான சின்மயத்தின் கோட்டையாகும்
பாட்டையுடன் வாசலது யதிலேயுண்டு பாலகனே சின்மயத்தின் வாசலப்பா
தேட்டையெனும் வமுர்தமப்பா வுமிழ்நீர்தேட்டை தேஜொளிவின் பம்பரம்போல் சுரக்குந்தேட்டை
காட்டையது கண்டாலுங் காணலாம்பார் காயாபுரி கோட்டையின்தன் கருகாணாரே
6763.
காணாரே பஞ்சேந்திர கோட்டைதன்னை கருவான தடங்களது காணமாட்டார்
தோணாரே வாசலது தடங்கண்டாலும் தோறாமல் சின்மயத்தின் வழியறிந்து
வீணாளைப் போக்காமல் விட்டில்போலே வியாபித்துக் குருவயர்ந்து விழலாய்ப்போனார்
ஊணாமல் பரஞ்சுடரை தனலென்றெண்ணி யுத்தமனே பாதைவழி தெரியார்காணே
6764.
தானான வட்சரத்தை யோதமாட்டார் தண்மையுள்ள குருட்டுவழி தன்னில்சென்று
தேனான மடாலயத்தை வீடென்றெண்ணி தேற்றமுடன் கிருஷ்ணாவ தாரனப்பா
பானான கீதையிலே யுபதேசித்த பற்குணனார் உபதேசம் போலேயப்பா
மானான பத்மபீடம் பெற்றேனென்று மார்க்கமுடன் தாமுரைத்து கெட்டார்பாரே
6765.
கெட்டாரே ஞானத்தின் பீடங்கண்டால் கெடியான மோட்சவழி காணலாகும்
தொட்டாலே சின்மயத்தின் பொருளேதொட்டால் தோராமல் கேசதான் பத்தலாகும்
விட்டகுறை இருந்தாலும் ஞானப்பால்தான் விருப்பமுடன் உந்தமக்கு லபிக்கும்பாரு
தொட்டகுறி போலதுவே துய்யபாலா துப்புறவாய் உபதேசம் செய்திட்டேனே
6766.
இட்டேனே இன்னமொரு பாகஞ்சொல்வேன் எழிலான புலிப்பாணி ராஜபாலா
நட்டதொரு பயிரெல்லாம் பயிர்தானாமோ நாடதனில் பெற்றதெல்லாம் பாலராமோ
துட்டரென்றால் துட்டரது சொல்லப்போமோ துரைராஜ சுந்தரனே துய்யபாலா
கெட்டவர்கள் நல்லவர்க ளாவாரோதான் கெடியான வையகத்தில் மாண்பர்தாமே
6767.
மாண்பான வையகத்தின் மார்க்கம்சொல்வேன் மார்க்கமுடன் முறைபாடு வெவ்வேறாகும்
தாண்பான கொக்கதுதான் அன்னமாமோ தாடாண்மை கொண்டதொரு கோழிதானும்
ஆண்பான கலாபமென்ற மயில்தானாமோ வப்பனே குன்றின்மணி கெம்பாமோசொல்
காண்பான செக்கதுவும் லிங்கமாமோ தாரணியில் முறைபாடு இன்னங்கேளே
6768.
கேளேதான் பனியதுவும் மழைதானாமோ கெடிதான மின்மினிதான் விளக்காமோசொல்
தானான பிரிதிவென்ற பவளந்தானும் தாக்கான நற்பவள மாகுமோசொல்
பாளான சிப்பியது வெள்ளியாமோ பாலான வெள்ளைமணல் உப்பாமோசொல்
கோளான மாண்பர்களில் நிகர்தான்கூற கொற்றவனே வேணவித்தி யாசம்பாரே
6769.
பாரேதான் சௌரியங்கள் அதிகமுள்ளோர் பாருலகில் அவருக்கோ ரீடுமுண்டோ
நேரேதான் அவரொக்க ரிஷிகளாவார் நேர்மையுடன் இவரொக்கர் அவரேனாவார்
சீரேதான் சீர்வளங்கள் மிகவும்பாடி சிறப்புடனே பேர்வளங்கள் மிககொண்டாடி
கூரேதான் சித்துமுனி சாத்திரங்கள் கூறினார் வெகுகோடி வேதைதானே
6770.
வேதையா மின்னமொரு பாகஞ்சொல்வேன் வேதாந்த தாயினது கிருபையாலே
பாதையாம் சமுசாரிக் கானவித்தை பாலகனே யுந்தமக்கு பகருவேன்யான்
சீதையெனும் பெண்ணாகி மாதுபூண்ட ஜெகஜோதி தங்கமதை யென்னசொல்வேன்
சூதகற்றி மயக்கறுத்து சுட்டிடாமல் சுந்தரனே சிடிகையென்ற வேதைகேளே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக