6771.
கேளேதான் துருசதுவும் சேர்தானெட்டு கெடியான தாரமது சேர்தானொன்று
பாளேதான் போகாமல் கல்வமிட்டு பாலகனே தானரைப்பாய் நாலுசாமம்
நீளேதான் செருப்படையில் நாலுசாமம் நிலையான நுணாமூலி நாலுசாமம்
கீளேதான் வேரோடிப் படர்ந்திருக்கும் கெடியான கும்மட்டி மூலிவாங்கே
6772.
வாங்கியே தானரைப்பாய் நாலுசாமம் வளமுடனே மாத்திரையாய் செய்துகொண்டு
தூங்கியே திரியாதே துய்யபாலா துப்புரவாய் மாத்திரையைப் பீங்கானிட்டு
ஓங்கியே வெள்ளாட்டுக் கோமியந்தான் உத்தமனே மண்டலந்தான் ஊறப்போடு
சாங்கமுடன் மண்டலந்தான் சென்றபின்பு சட்டமுடன் மாத்திரைதான் எடுத்துக்கொள்ளே
6773.
கொள்ளவே மாத்திரைகள் பதனம்பண்ணு கோவேந்தர் புலிப்பாணி பனிதவானே
விள்ளவே வெள்ளியது பலந்தான்ரெண்டு விருப்பமுடன் மாத்திரைதான் பலந்தான்பத்து
எள்ளளவும் பிசகதுவும் நேராமற்றான் எழிலான வெள்ளிதனை மூசையிட்டு
உள்ளபடி வெள்ளியது வுருகும்போது வுத்தமனே மாத்திரைதான் துலமும்போடே
6774.
போடேதான் மாத்திரைதான் உருகியல்லோ பொங்கமுடன் தானிறக்கி வைத்துமல்லோ
நாடேதான் மற்றாநாள் பின்னுமப்பா நலமுடனே மூசைதனை யுருகிக்கொண்டு
நீடேதான் பின்னுமந்த மூசைதன்னில் நிலையான மாத்திரையை துலந்தானீவாய்
கூடேதான் மூசைதனை இறக்கிவைத்து குணமாக மற்றாநாள் உருக்கிக்கொள்ளே
6775.
உருக்கியே பத்துமுறை பத்துநாளப்பா முனையான மாத்திரையை கிராசமீவாய்
செருக்குடனே பத்துநா ளானபின்பு செவ்வையுடன் மூசைதனை யெடுத்துமைந்தா
பெறுக்கவே யாதுவகை ஜெயநீர்தன்னில் பேரான வெள்ளிதனை யுருக்கிசாய்ப்பாய்
சுருக்கமது வாராது வெள்ளிக்கப்பா சுந்தரனே பத்துமுறை யுருக்கியூத்தே
6776.
ஊத்தையிலே குண்டசெம்பு வெள்ளிதானும் உத்தமனே மஞ்சளென்ற வர்ணங்காணும்
நாத்தமுள்ள செம்பதுவும் ஊறலேகி நலமான வெள்ளியது பழுக்கும்பாரு
பாத்தவர்கள் வாதமென்ற சூதுவித்தை பாருலகில் மகிமைதனை யறிவாரோதான்
நேர்த்தியுள்ள கண்டரது மகிமையாலே நேர்மையுள்ள வெள்ளியது பழுக்கலாச்சே
6777.
ஆச்சப்பா மலைநாட்டுக் குள்ளிருக்கும் வப்பனே குரும்பரென்ற சித்துதானும்
பாச்சலுடன் காடுமலை வணாந்திரங்கள் பாங்கான குகைதனிலே இருந்துகொண்டு
ஏச்சலது வாராமல் எந்நாளைக்கும் எழிலான கண்டருட வேதைதன்னை
ஆச்சரிய மாகவல்லோ செய்துகொண்டு வப்பனெ கடைமாறி யுண்ணிவாரே
6778.
உண்ணுவார் சமுசாரி தம்மிடத்தில் உத்தமனே நிதிவாங்கி பொன்கொடுத்து
திண்ணமுடன் மாற்றதுவும் என்னசொல்வேன் துய்யவெள்ளி பத்தரையுங் காணும்காணும்
எண்ணரிய நற்பொருளைக் காணாமற்றான் எழிலான சமுசாரி எல்லாமாய்ந்தார்
பண்ணவெனக் கும்மையது வறியாமற்றான் பாருலகில் யானுமல்லோ மயங்கினேனே
6779.
மயங்கியதோர் எந்தனுக்கு மன்னாகேளு மகத்தான காலாங்கி கிருபையாலே
நயம்படவே வித்தையது யானுங்கண்டு நாதாந்த சித்தொளிவின் ஒளியுங்கண்டு
ஜெயம்பெறவே வாதமென்ற வேதைதன்னை சேர்வையுடன் உந்தனுக்கு யானுந்தந்தேன்
பயப்படவே யெந்நாளும் பதாம்புயத்தை பணிந்துமல்லோ வசனித்து துதிப்பாய்தானே
6780.
தானான திருராமர் கொண்டசீதை தகமையுள்ள ஜானகியாள் தன்தனக்கு
கோனான கோவேந்தர் பதியிலப்பா கொற்றவனே சித்தர்களும் முடித்தவேதை
தோனான செம்பொன்னே தங்கவர்ணம் தேற்றமுடன் பிறவியென்ற தங்கமாகும்
பானான சுயத்தங்கம் நயத்தங்கம் பாருலகில் நாதாக்கள் மறைத்தார்காணே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக