6741.
தானான வுலகமதை யாண்டுமென்ன தாரணியில் கீர்த்தியது பெற்றுமென்ன
கோனான கோவேந்தர் தன்னைப்போலே கொற்றவனே கிரீடமதைக் கொண்டுமென்ன
தேனான மாளிகையுங் கட்டியென்ன திகழான சமுசாரங் கொண்டுமென்ன
பானான பாலகரைப் பெற்றுமென்ன பாலகனே ஞானமென்ற பால்தான்வேண்டே
6742.
பாலான ஞானமென்ற பாலையப்பா பகருகிறேன் புலிப்பாணி பளிங்குள்ளானே
மேலான பதந்தனையே நண்ணவேண்டும் மேதினியில் பவக்கடலை யகற்றவேண்டும்
நாலான பதந்தனக்கு மேலேயப்பா நற்பதமாம் பொற்பதத்தை நண்ணல்வேண்டும்
காலான சிதாபாசப் பொருளையப்பா கருதுவேன் உந்தமக்கு கருதுவேனே
6743.
கருதவென்றால் நாவில்லை பாவுமில்லை கண்மணியே புலிப்பாணி கவிராஜேந்திரா
திருகமுள்ள திருப்பாலின் கடலின்பக்கம் சிற்பரனே என்பாலா சிரியவானே
குருவினது காலாங்கி வாக்குபோலே குணமான வுபதேசம் நீயும்பெற்று
பரிதிமதி யுள்ளநாளளவு மட்டும் பாலகனே யுபதேசம் போற்றுவாயே
6744.
போற்றவே புலிப்பாணி புகழுள்ளானே பொங்கமுடன் திருப்பாலின் நடுமையத்தில்
ஆற்றவே கிருஷ்ணாவ தாரனப்பா அலைகடலில் பள்ளிகொண்ட வம்பலத்தில்
நாற்றிசையும் நாதாந்த சித்துதாமும் நடுக்கமுடன் ரிஷிகளெல்லாம் பார்த்திருக்க
மேற்புரத்தில் போகரிஷி நாதர்தாமும் மெல்லெனவே வடபாகஞ் சாதிப்பாரே
6745.
சாதிக்க வடபாகந் தனிலிருந்து சட்டமுடன் புலிப்பாணிக்கு உபதேசிக்க
மேதினியில் தேவாதி தேவரெல்லாம் மேன்மையுடன் கண்டல்லோ பிரமித்தேங்க
ஆதியென்ற பராபரியாள் முன்னேநிற்க அங்ஙனவே யுபதேச மனதுவந்து
ஜோதிமணி மந்திரத்தை உச்சாடித்து சுந்தரர்க்கு உபதேசங் கூறுவாரே
6746.
கூறுவார் உபதேசமென்ன வென்றால் குணமான திருப்பாலின் கடலின்மேலே
மாறுபா டானதொரு மயத்தைநீக்கி மகத்தான சிதபசா நிலையில்நின்று
தேறுதலாய் சமாதிமுகம் நிற்கவேண்டும் தேஜொளிவின் சின்மயத்தை யறியவேண்டும்
ஆறுதல மென்றதொரு பிரளயத்தை யப்பனே உச்சரித்து நிலையில்நில்லே
6747.
நிலையான நிலையதுவும் என்னசொல்வேன் நிஷ்களங்க மானதொரு கபாலபீடம்
கலையான கலையதுவும் யிடகலைபிங்கலையில் கருவான நாசியது மையம்பற்றி
மலையான கபாலமென்ற பீடம்பற்றி மகத்தான மூலவரை மேலேசென்று
தலையான பஞ்சேந்திரம் உள்ளடக்கம் சாற்றுகிறேன் சிவயோகம் சாற்றுவேனே
6748.
சாற்றுகிறேன் வாரமது ஒன்பதுந்தான் சட்டமுடன் தானடைத்து மேலேபூட்டி
போற்றியதோர் கும்பகத்தில் நின்றுகொண்டு போதனா சத்தியெல்லாம் மனதிலுன்னி
தூற்றியே தான்புடைத்து பொருளாராய்ந்து துப்புரவாய் சிதாபாசக் களையறுத்து
மாற்றியே வட்சரத்தை வுள்ளாராய்ந்து மகத்தான வுளவுதனை யறிந்துகொள்ளே
6749.
கொள்ளவே யறுபத்துக் கலைநான்காக கோடான கலைவகுத்து கயிர்கள்மாட்டி
விள்ளவே சச்சிதா நிலையில்நின்று விட்டகுறை வருமளவும் மேலேநோக்கி
உள்ளதொரு பூரணத்தை வெளிகாட்டாமல் வுத்தமனே விசுத்தியிலே நின்றுகொண்டு
தெள்ளமுர்த மானதொரு ஞானப்பாலை தேற்றமுடன் ஊசரத்தி லிருந்துதாக்கே
6750.
தாக்கவே யூசரத்தை கொள்ளும்போது தகமையுள்ள வனாகதத்தை யெட்டிவாங்கு
நோக்கமுடன் கேசரத்தை கொண்டாயானால் நுணுக்கமுடன் கலைவகுத்து பிரிக்கலாகும்
ஆக்கமுடன் விசுத்தியிலே இருந்துகொண்டு ஆண்மையுடன் சுழுத்தியிலே மேலேபாய்ந்து
சாக்கரதை சொற்பனமும் வஸ்தையற்று சட்டமுடன் இருப்பதுவே சமாதிதானே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக