6781.
காணவே நாதாக்கள் மறைத்ததாலே காலாங்கி நாதருட கிருபையாலும்
தோணவே மனோன்மணியாள் கடாட்சத்தாலும் தோறாமல் உந்தனுக்கு மனதுவந்து
வேணதொரு நீதிமுறை பாடுகூறி வேதாந்த வுபதேச உண்மைகூறி
நீணவே யுந்தனுக்கு உபதேசித்தேன் நீடாழி பதவிதனை யாளுவீரே
6782.
ஆளவென்றா லின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் வப்பனே புலிப்பாணி யறிவுள்ளானே
நீளவே தாரமது சேர்தானெட்டு நிலையான காரமது சேர்தான் ரெண்டு
சூளவே துருசதுவும் சேர்தான்ரெண்டு சுந்தரனே சூதமது சேர்தான்ரெண்டு
மீளவே இவையெல்லாங் கல்வமிட்டு மிக்கான சிவகரந்தை சாற்றாலாட்டே
6783.
ஆட்டவே அற்சாமம் ஆனபின்பு வப்பனே மத்திரைதான் செய்துகொண்டு
தாட்டிகமாய் வெள்ளிதனை யுருக்கிமைந்தா சட்டமுடன் சேருக்கு பத்துதாக்கு
நீட்டமுடன் வெள்ளியது வுருகும்போது நிஷ்களங்க மானதொரு மருந்துதன்னை
வாட்டமில்லா சேரதுதான் ஒன்றுதாக்கு வளமுடனே வெள்ளியது வுரியும்பாரே
6784.
உரியுமே மாத்திரையை வாங்கிக்கொள்ளும் உத்தமனே மூசைதனை யாறவைத்து
சரியாக வைந்துநாள் தணியவிட்டு சாங்கமுடன் மறுபடியும் பின்னுமல்லோ
புரியான வெள்ளிதனை மூசையிட்டு பட்சமுடன் தானுருக்கி மருந்தையப்பா
வரியான கணக்குடனே முன்போலப்பா வளமுடனே சேருக்கு ஒன்றுதாக்கே
6785.
தாக்கவே மூசையிட்டு உருக்கிமைந்தா தண்மையுடன் நாளதுவும் உமைந்ததாக
நோக்கமுடன் இப்படியே பத்துமுறையப்பா நுணுக்கமுடன் உருக்கியல்லோ ஆறவைப்பாய்
வாக்கதுவும் பொய்யாது காலாங்கிநீதி வளம்பெரிய சித்தர்களும் மறைத்ததோஷம்
ஏக்கமது கொள்ளாமல் எழில்வேந்தாகேள் எழிலுடனே செய்குவது பாகமாமே
6786.
பாகமாம் இப்படியே பத்துமுறைதீர்ந்த பாலான வெள்ளிதனை எடுத்துமைந்தா
ஆகமத்தில் முறைபாடு செய்பாடெல்லாம் வப்பனே கண்டுமிக வுளவாராய்ந்து
வேகமுடன் ஆறுவகை ஜெயநீர்தன்னால் வெட்கமுடன் தானுருக்கி சாய்ப்பாயப்பா
பாகமது பொய்யாது மெய்யேயாகும் பாருலகில் செய்தவர்க்கு சித்திதானே
6787.
சித்தியாம் இப்படியே பத்துமுறைபோடு சேர்வைகண்டு பதனங்கண்டு உருக்கிசாய்ப்பாய்
சத்தியவான் காலாங்கி நாதர்வாக்கு சங்கரனே பொய்யாது வேதவாக்கியம்
பத்தியுடன் மனோன்மணியை தொழுதுபோற்றி பாலகனே முறைபோலே செய்வாயப்பா
சத்தியுள்ள வெள்ளிதனை யூதிப்பாரு சுந்தரனே மாற்றதுவும் சொல்லொண்ணாதே
6788.
சொல்லவென்றால் நாவில்லை பாவுமில்லை துரைராஜ சுந்தரனே எவர்தான்காண்பர்
வல்லதொரு சித்தாதி முனிவர்தாமும் வளம்பெரிய சாத்திரத்தில் மறைத்துவைத்த
கல்லான முறைகளெல்லாங் கருக்கள்காட்டி கருவிகர ணாதியந்தம் முடிவுண்டாக்கி
நல்லதொரு முறைபாடு செய்பாடெல்லாம் நாட்டினிலே மாண்பர்களுக் குரைத்திட்டேனே
6789.
உரைத்தேனே தாரமென்ற களங்குமார்க்கம் ஓகோகோ நாதாக்கள் கூறவில்லை
வரையான பொருளெல்லாம் இதிலேதோயும் வளமான மாற்றதுவும் பத்தேயாகும்
திரைகடலில் நாதாக்கள் மறைத்ததாலே தீர்க்கமுள்ள வேதைமுகம் யானுங்கண்டு
விரைபோட்டால் சுரையொன்று முளைக்குமோதான் வித்தகனே தாரமென்ற தங்கமாமே
6790.
தங்கமா மின்னமொரு வயனஞ்சொல்வோம் தண்மையுள்ள புலிப்பாணி தயவுள்ளோனே
இங்கிதமாய் யெந்தனையும் சித்தர்கூடி எழிலான விண்ணப்ப வருந்தல்தன்னை
சங்கமென்ற சபையாறு மனதுவந்து சட்டமுடன் எந்தனையும் கேள்விகேட்க
வந்தனமாய்ச் சொன்னதொரு வளம்பாடெல்லாம் வண்மையுடன் உந்தனுக்கு ஓதுவேனே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக