6691.
இருந்தேனே நெடுங்காலங் குளிகைகொண்டு எழிலான சமாதிமுகம் எல்லாங்கண்டு
பொருந்தவே யுந்தமக்கு உபதேசங்கள் பொங்கமுடன் கொட்டிவைத்தேன் இடங்கொள்ளாது
திருந்தவே பூரமென்ற காயகற்பம் திட்டமுடன் குன்றிவீதங் கொண்டாயானால்
அருந்தியதோர் தேகமது ஜோதிமின்னும் வப்பனே பூரமதின் வேகந்தானே
6692.
தானான குருசொன்ன வாக்குபோலே சட்டமுடன் மண்டலந்தான் உண்பாயானால்
பானான தேகமது என்னசொல்வேன் பரிதிகண்ட பனிபோலே நோய்கள்தீர்ந்து
தேனான மேனியது காந்திவீசும் தேசமதில் விதியாளி யறிவான்பாரு
மானான மகதேவர் கடாட்சத்தாலே மார்க்கமுடன் உந்தமக்கு வமைக்கலாச்சே
6693.
அமைப்பான பூரமதை எடுத்துமைந்தா வப்பனே மதிதனிலே நூற்றுக்கொன்று
நிமைப்பொழுதும் காலமது வீண்போகாமல் நீதியுள்ள புலிப்பாணி புனிதவானே
சுவைதாங்கும் நளியாளர் குறைதீர்த்தாப்போல சுந்தரனே சிடிகையென்ற வேதைதன்னை
அமைப்புடனே மதிதானும் உருகும்போது வப்பனே பூரமது ஒன்றுதாக்கே
6694.
தாக்கியே வுருக்குமுகந் தன்னிலப்பா தகமையுடன் வெள்ளிதனை யெடுத்துப்பாரு
ஆக்கியோன் வாக்கதுவும் பொய்யாதப்பா வப்பனே வெள்ளியது என்னசொல்வேன்
பாக்கியமுண் டாவதற்கு பசுமையாகி பாங்குடனே பத்தரையா மாற்றுமாகும்
வாக்கதுவும் பொய்யாது மைந்தாகேளு வண்மையுள்ள பிறவியென்ற தங்கமாச்சே
6695.
தங்கமாம் சுயத்தங்கம் பிறவித்தங்கம் தாரணியில் நாதாக்கள் மெச்சுந்தங்கம்
புங்கசித்திக் குகந்ததொரு யோகத்தங்கம் புகழான சமுசாரிக்கான தங்கம்
வங்கமதற் கசையாத வலுத்ததங்கம் வளம்பெரிய சித்துமுனி போற்றுந்தங்கம்
இங்கிதமாம் மாண்பர்களுக் குகந்ததங்கம் எழிலான நடராஜ தங்கம்பாரே
6696.
பாரேதான் புலிப்பாணி மைந்தாகேளு பாலகனே யின்னமொரு போக்குசொல்வேன்
நேரேதான் செம்பதுவும் களஞ்சிநூறு நேர்மையுடன் குகைதனிலே இட்டுமைந்தா
தீரேதான் பாகமது பிசகிடாமல் தீர்க்கமுடன் தானுருக்கி மருந்தையீவாய்
கூரேதான் காரமது விட்டுருக்கி கொற்றவனே குருவொன்று கொடுத்திடாயே
6697.
கொடுத்தவுடன் செம்பதுவும் உருகியல்லோ கோவேந்தர் புலிப்பாணி மன்னாகேளு
அடுத்தவிஷஞ் செம்பினது வூரலேகி வப்பனே மாற்றதுவும் சொல்லப்போமோ
தடுத்திட வர்ணமது என்னசொல்வேன் தாரணியில் நாதாக்கள் மறைத்தகூத்து
நடுப்படையில் வில்லுக்கு நாணுமற்று நானிலத்தில் விழுந்ததொரு கதைபோலாச்சே
6698.
கதையான செம்பதுவும் மாற்றோமெத்த காசினியில் ஆரறிவார் மகிமைதன்னை
சதையாமல் வாரடித்துப் புடத்தைப்போடு சட்டமுடன் தங்கமது என்னசொல்வேன்
உடையாது புடத்துக்கு வசைந்திடாது வுத்தமனே வங்கமதுக் குறந்திடாது
பதையாமல் வாரடித்துப் புடந்தான்போட பாங்குபெற செம்பொன்னின் மகிமைபாரே
6699.
பாரேதான் கவசகுண்ட லத்துக்காதி பாங்குபெற சிவயோகிக் குகந்ததங்கம்
நேரேதான் வருமைவருங் காலந்தன்னில் நேர்மையுடன் உண்பதற்கு சொன்னநீதி
ஆரோதான் சொல்வார்கள் இந்தப்போக்கு வப்பனே யாமுனக்கு வுரைத்தேனப்பா
சீரேதான் நெடுங்காலந் தவமிருந்து சிற்பரனே வேதைமுகஞ் செய்துபாரே
6700.
செய்துமே குருவணக்கம் மிகவுங்கூறி செயலான பாக்கியமும் அதிகங்கொண்டு
வையகங்கள் தான்புகழ புத்திவானாய் வளம்பெரிய நாதாக்கள் பதம்பணிந்து
துய்யநல்ல சிவவேடம் பூண்டுமல்லோ துப்புரவாய் யோகநிஷ்டை தனிலிருந்து
பையவே யுனக்குகந்த சீஷன்தேடி பாலகனே வுபதேசஞ் செய்வார்தானே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக