6701.
தானான யின்னமொரு போக்குசொல்வேன் தகமையுள்ள நற்பாலா பண்புள்ளானே
கோனான எனதையர் காலாஙிகிநாதர் கொற்றவனார் எந்தனுக்குச் சொன்னநீதி
தேனான மனோன்மணியாள் கடாட்சத்தாலே தெளிவுடனே எந்தனுக்கு உபதேசித்தார்
பானான பரஞ்சுடரைப் போற்றியேதான் பாடுகிறேன் கொச்சியென்ற வேதைகாணே
6702.
காணவே கொச்சியென்ற வீரமப்பா கவனமுடன் பலமதுதான் கொண்டுவந்து
தோணவே லட்சுமியாள் வீற்றிருக்கும் துகையான வில்வமது பழந்தான்பத்து
நீணவே பழமதனைக் கீறியல்லோ நீதியுடன் வீரமதை யுள்ளமைத்து
மாணவே சீலையது வலுவாய்ச் செய்து மயங்காமல் மணல்மறைவிற் புடத்தைப்போடே
6703.
போடவே இப்படியே பத்துமுறைபோடு போக்கான வீரமது கட்டிப்போகும்
நீடவே வீரமது கட்டினாக்கால் நீடாழி யுலகமெலாம் கட்டலாம்பார்
சாடவே வீரமதைத் தானெடுத்து சட்டமுடன் சமென்ற செந்தூரத்தை
ஆடவே பழச்சாற்றால் தானரைத்து வப்பனே வீரமதுக் கங்கிபூட்டே
6704.
பூட்டியே ரவிதனிலே காயவைத்து பொங்கமுடன் சீலையது வலுவாய்ச்செய்து
நீட்டியே மணல்மறைவிற் புடத்தைப்போடு நீதியுடன் வீரமது புகையடங்கி
தாட்டிகமாய் உருகியே கட்டிநிற்கும் தாடாண்மை யானதொரு வப்புதானும்
கூட்டியே பின்னுமந்த வீரந்தன்னை குணமாக மறுபடியுஞ் செப்பக்கேளே
6705.
செப்பவென்றால் இன்னமொரு மார்க்கஞ்சொல்வேன் செயலான வீரமது தானெடுத்து
ஒப்பமுடன் மிருதாரு சிங்கிதன்னை ஓகோகோ நாதாக்கள் மறைப்புநீக்கி
தப்பிதங்கள் வாராமல் சிங்கிதன்னை சட்டமுடன் வெண்கருவால் தானரைத்து
மெய்ப்புடனே வீரமதற் கங்கிபூட்டி மேன்மையுடன் ரவிதனிலே காயப்போடே
6706.
காய்ந்தபின்பு சீலையது வலுவாய்ச்செய்து கவனமுடன் மண்மறைவிற் புடத்தைப்போடு
தேய்ந்ததொரு வீரமது கட்டுமாகி தேற்றமுடன் படிகமென்ற கல்லுபோலாம்
மாய்ந்ததொரு வீரமதைத் தானெடுத்து மறுபடியும் முன்போல பாகஞ்செய்து
பாய்ந்ததொரு மண்மறைவிற் புடந்தான்பத்து பாலகனே போட்டுவரக் கட்டிப்போமே
6707.
கட்டியதோர் வீரமதைத் தானெடுத்து கலங்காமல் சீலையது விலக்கியல்லோ
திட்டமுடன் பின்னுமொரு பாகஞ்சொல்வேன் தீர்க்கமுள்ள புலிப்பாணி புகலக்கேளிர்
எட்டியென்ற வித்ததுவும் பலந்தானைந்து எழிலாக நிம்பழத்தின் சாற்றினாலே
கொட்டியதோர் விஷந்தனைத் தானரைத்து கூறவே வீரமதற் கங்கிபூட்டே
6708.
அங்கியென்ற வீரமதை ரவியில்வைத்து வப்பனே ஏழுசீலை வலுவாய்ச்செய்து
இங்கிதமாய் மண்மறைவிற் புடத்தைப்போடு எழிலான புடமாறி எடுத்துப்பாரு
சங்கையில்லா வீரமது என்னசொல்வேன் சட்டமுடன் மணிபோலே இறுகிநிற்கும்
வங்கமென்ற மணிபோலே தோற்றும்பாரு வளமையுள்ள வீரமணி யாகுந்தானே
6709.
தானான வீரமணி என்னசொல்வேன் தாக்கான புடமதுவும் முன்போலாக
கோனான புடமதுவும் தூறுபோடு கொற்றவனே வீரமணி என்னசொல்வேன்
மானான வீரமணி கட்டினாக்கால் மதகரியி லேறுதற்கு ஐயமுண்டோ
தேனான மனோன்மணியாள் கடாட்சத்தாலே தேஜொளியில் வீரமணி காணலாமே
6710.
காணலாம் வீரமணி தனையெடுத்து கனமான மதகரியின் மேலேசென்று
பூணவே வீரமணி கட்டினேன்யான் புகழாக எதிரியென்ற மாண்பர்தம்மை
வேணவே மண்டதனை பிளப்பேனென்று விருதுபறை யறைந்திடலாம் மணியினாலே
நாணவே சித்தாதி முனிவர்தாமும் நடுங்குவார் மணிதனையே கண்டபோதே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக