பக்கங்கள்

வெள்ளி, 12 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6281-6290

6281.
தந்திரமா மூலியிட மகிமைதன்னை சதகோடி சூரியருங் கண்டதில்லை
விந்தையுள்ள சித்தரது திருக்கூத்தப்பா விண்ணுலகு மண்ணுலகுங் கண்கொள்ளாட
சிந்தையுடன் இருமனது ஒன்றதாகி சிறப்புடனே பூவழலை யெடுக்கும்போது
வந்துதல்லோ கருஞ்சாரை காலந்தானும் வளமையுள்ள மகிமையது புதுமைதானே
6282.
புதுமையாம் சர்ப்பமது என்னசொல்வேன் புகழாக மூலிதனை மனதுவந்து
கதுமையுடன் கானகத்தில் சென்றுமல்லோ கடிதான மலைகுகைகள் தான்கடந்து
மெதுவான சஞ்சீவி மூலிதானும் மேன்மையுடன் வாய்தனிலே கவ்விக்கொண்டு
பதுமமென்ற சர்ப்பமது இருக்கும்ஸ்தானம் பான்மையுடன் வந்தல்லோ நிற்கலாச்சே
6283.
நிற்கின்ற மறுசற்பந் தன்னைக்கண்டு நீதியுடன் சிலமாண்பர் இருவர்தாமும்
அற்பமென்று நினையாமல் ஆலோசித்து அறிவுள்ள சர்ப்பமதை கண்ணிற்கண்டு
துப்புரவா யெய்ததொரு சர்பந்தன்னை துணிவுகொண்டு மூலிதனை மணங்கள்வீச
சொற்பெரிய சர்ப்பமது உயிருண்டாக்கி சோறாமல் எழுந்திருக்கக் கண்டிட்டாரே
6284.
கண்டாரே சர்ப்பமது மூலிதன்னால் கைலாசஞ் சென்றதொரு சர்ப்பந்தன்னை
பண்டுவள மாலையணி கிருஷ்ணன்கொண்ட பாங்கான மூலியது விஷமூலிதானும்
தொண்டல்லோ தான்கொடுத்து உயிருண்டாக்கி கூட்டுறவாய் யழைத்துக்கொண்டு சென்றநேர்மை
சண்டமா ருதம்போலே யிருவர்மாண்பர் சட்டமுடன் பிரமித்து திகைத்திட்டாரே
6285.
திகைத்துமே சிவமாண்பர் இருவர்தாமும் தீர்க்கமுடன் மனஞ்சோர்ந்து நிற்கும்போது
புகைபடர்ந்த வனந்தனிலே சர்ப்பந்தானும் புகட்சியுடன் முன்னிறந்த சர்ப்பங்கூட்டி
பகைபோன்ற சிவமாண்பர் இருவர்காண பாங்குடனே கானகத்தைச் சென்றவண்ணம்
தகமையுடன் சர்ப்பமது கொண்டுசெல்ல தாட்சியுடன் சிலமாண்பர் பார்த்திட்டாரே
6286.
பார்த்துமே சர்ப்பமது சென்றுதென்று பாங்குடனே சிவமாண்பர் இருவர்தாமும்
நேர்த்தியுள்ள மூலிகைதான் என்றறிந்து நேர்மையுடன் சிவமாண்பர் மனதிலெண்ணி
பூர்த்தியுட னிருக்கப் பயந்தானுண்டோ புகழான வடிவார மரத்திற்றானும்
கார்த்தருந்து மூலிதனைக் கையிற்றானும் கவனமுடன் எடுத்துவர நண்ணினாரே
6287.
நண்ணியே சர்ப்பமது சென்றபின்பு நாதாந்தத் தாயாரை மனதிலெண்ணி
குண்ணியே மனதுவந்து முகமும்வாடி கூறான மூலிதனை எடுக்கவல்லோ
வண்ணமுடன் சிவமாண்பர் இருவருந்தான் வளமையுடன் உறவுகொண் டாடிகூட
திண்மையுடன் மூலிதனை யொருதோழன்தான் துப்புரவாய்த் தானெடுக்கக் கண்டிட்டேனே
6288.
கண்டேனே சிவமாண்பர் மூலிதன்னை கரந்தனிலே மூலிதனைத் தொட்டபோது
அண்டர்பிரான் மகிமையது யென்னசொல்வேன் ஆகாகா வையகத்தில் யார்தான்கண்டார்
சண்டமா ருதம்போலே சர்ப்பந்தானும் சட்டமுடன் மூலிதனை வைத்தநேர்மை
தண்டகம்போல் அடியேனும் கண்டுயேங்கி சட்டமுடன் மகிமைதனைப் பார்த்திட்டேனே
6289.
பார்த்தேனே சிவமாண்பர் ஒருவர்தானும் பண்பான மூலிதனைக் கரத்திற்றானும்
நேர்த்தியுள்ள மூலிதனை யென்றயம்பி நேர்மையுடன் கரந்தனிலே எடுக்கும்போது
பூர்த்தியுள்ள மூலியது என்னசொல்வேன் புகழான வஞ்சனமாய் மூலிதானும்
ஆர்த்தியுடன் சிவமாண்பர் தோழன்தன்னை வப்பனே இருக்கவது பார்திட்டேனே
6290.
பார்த்தேனே மூலியது மகிமைதன்னை பாண்மையுடன் பிர்மித்து யேங்கும்போது
தீர்த்தமுடன் மூலியது வளத்திற்றானும் தீர்க்கமுடன் சிவமாண்பர் கரத்தைப்பற்றி
நேர்த்தியுடன் மூலியது தன்னைத்தானும் நேரான வனந்தனிலே இருக்கும்நேர்மை
பூர்த்தியுடன் யான்கண்டு திடுக்கிட்டேங்கி புகழாகக் குளிகைகொண்டு வந்திட்டேனே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக