கெதியென்று காலாங்கி கேட்குங்காலம் கெடியான பலராமர் ரிஷியார்தாமும்
பதிதனையைத் தேடிவந்த ரிஷியாருக்கு பட்சமுடன் ஞானோப தேசங்கூறி
மதிபோன்ற மகதேவர் காலாங்கிக்கு மார்க்கமுடன் உலகவதி சயங்களெல்லாம்
இதிகாச புராணமென்னும் மறைப்பையெல்லாம் யிஷ்டமுடன் மனதுவந்து போதித்தாரே
6902.
போதிக்க வின்னமொரு வயணஞ்சொல்வேன் பொங்கமுடன் புலிப்பாணி புகழுள்ளானே
ஆதித்தன் சந்திரன்போல் பௌத்மசித்து அரகரா யென்னசொல்வேன் கிரியிலப்பா
ஜோதிபிர காசமென்ற காலாங்கிநாதர் சொர்ணமென்ற கிரியைதனில் செல்லும்போது
சாதியிலா தவனார் பௌத்மசித்து சட்டமுடன் நெடுந்தவசி பார்த்திட்டாரே
6903.
பார்த்தாரே யென்தேவர் காலாங்கிநாதர் பாரான மலைதனிலே தவசியாரை
சார்த்தகையாள் வார்போல தவங்கள்பூண்டு சட்டமுடன் நெடுங்கால சித்துதம்மை
கோர்த்துமே சுரமெத்து அஞ்சலித்து கொப்பெனவே காலாங்கி வணக்கஞ்செய்தார்
தீர்த்தமுடன் பத்திரமாந் துளபமாலை தீர்க்கமுடன் தான்கொடுத்து வர்ணித்தாரே
6904.
வசனிக்கா ஞானோப தேசந்தன்னை வளமுடனே பௌத்மமகா ரிஷியார்தாமும்
நிசமுடனே மனங்களித்து மனதுவந்து நிட்சயமாம் ஞானமென்ற இதிகாசத்தை
வசனமதாய் யுபதேச வுண்மையாக வாக்களித்தார் காலாங்கி நாதருக்கு
தசமுடனே பஞ்தசா காயமாக்கி சட்டமுடன் மனதுவந்து கொடுத்திட்டாரே
6905.
கொடுக்கவே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் கோளாறு தானகற்றி மைந்தாகேளு
விடுக்கவே காலாங்கி நாதர்தாமும் விட்டகுறை இருந்ததொரு தன்மையாலே
படுகளம் போல்பத்தாவ தாரந்தன்னை பாற்கடல்கள் சுற்றிவந்து பான்மைகொண்டார்
தொடுகுறிபோல் கலிக்கமகா ரிஷியார்தம்மை தோறாமல் கிரிதனையே கண்டார்தானே
6906.
தானான கலிக்கமகா ரிஷியார்தன்னை தகமையுள்ள காலாங்கி நாதர்தாமும்
பானான கிரேதாயி னுகத்திலப்பா பாங்கான மலைதனிலே கண்டாரங்கே
தேனான பிரளயங்கள் வந்தபோது தேற்றமுடன் மலைதனிலே நின்றசித்து
கோனான கொடுந்தவசி யானசித்து கொப்பெனவே சித்துமகா பத்துமாமே
6907.
பத்தான மகிமையது என்னசொல்வேன் பாங்கான புலிப்பாணி பாலாகேளிர்
செத்துமே சாகாமல் காயங்கொண்டு சேனைநெடுங் காலமது வரையிலப்பா
முத்தான மோட்சவழி பெறுவதற்கு முத்தான பத்துமகா ரிஷியார்தாமும்
சுத்தமுடன் கிரேதாயி னுகத்திலப்பா சுந்தரனே தவசிருந்து சித்துபாரே
6908.
பாரேதான் காலாங்கி நாதர்தாமும் பட்சமுடன் எந்தனுக்குச் சொன்னநீதி
நேரேதான் அவர்களுந்தான் மனிதரன்றி நெடிதான தேவர் அவதாரமல்ல
சீரேதான் கலியுகத்து மாண்பரெல்லாம் சிறப்புடனே தசாவதாரக் கடவுளென்று
வேரேதான் இன்னமொரு தெய்வமுண்டோ வித்தகனே என்றல்லோ விதிக்கின்றாரே
6909.
வித்தகனே இவர்களெல்லாம் தெய்வமல்ல விண்ணுலகம் பதிப்பதற்கு கூடுமோதான்
செத்தவர்கள் கோடிமனு மாண்பருண்டு தேவாதி தேவரிஷி யானபேரும்
கைத்தவங்கள் தான்மறந்து மண்ணாய்ப்போனார் காசினியில் யாவருந்தான் இப்படியேபோனார்
மெய்த்தவங்கள் செய்துமல்லோ காரம்பூண்டு வெகுகோடி மாண்பர்களும் இருக்கின்றாரே
6910.
இருக்கவே இன்னம்வெகு மகத்துவங்கள் எழிலான புலிப்பாணி கண்ணியவானே
பொருக்கவே வையகத்தின் மகிமையெல்லாம் பகட்டினேன் கணக்குண்டோ லக்கோயில்லை
பெருக்கவே துகைகண்டு விதிகண்டு பேரான ஸ்தலமகிமை யாவுங்கண்டு
குருக்கவே திசையெட்டும் மதிக்கும்நான்கும் கூரான தேவகோட்டை கூறுவேனே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக