6991.
இட்டேனே நவகோடி ரிஷியாருக்கு எழிலான பதினெண்பேர் சித்தருக்கும்
சட்டமுடன் நாற்பத்தி எட்டுபேர்கள் சதுரான முனிவருக்கு சரணஞ்சொன்னேன்
திட்டமுடன் மனோன்மணியாள் பாதம்போற்றி திகழான சுடரொளியாஞ் சோதிபோற்றி
அட்டதிசை தான்புகழுங் காலாங்கிநாதர் வையனே யுன்பாதம் போற்றிதானே
6992.
தானான சித்துமகா ரிஷியாருக்கு தண்மையுள்ள மனுவொன்று சொல்வேனப்பா
கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் சீனபதி தேசந்தன்னில்
மானான வையகத்து மகிமையெல்லாம் மார்க்கமுடன் எந்தனுக்கு உபதேசித்தார்
பானான சதகோடி சூரியன்போல் பாடினேன் சத்தகாண்டம் பண்பாய்த்தானே
6993.
பண்பான லோகவதி சயங்களெல்லாம் பாருலகில் நாதாக்கள் மறைத்ததாலே
நண்பான மாண்பர்களும் பிழைக்கவேதான் நலமான புலிப்பாணி பாலனுக்கு
திண்ணமுடன் இதிகாச வித்தையெல்லாம் தீர்க்கமுடன் சத்தசாக ரத்தைப்போலே
உண்மையாம் போகரே ழாயிரந்தான் வுகமையுடன் பாடிவைத்தேன் காண்டம்பாரே
6994.
பாரேதான் மகுத்துவங்கள் வெளியாச்சென்று பண்புள்ள நாதாக்கள் நீங்களெல்லாம்
வேரேதான் கோபமது கொள்ளாமற்றான் வேழ்க்கமுடன் எந்தன்மேல் கிருபைவைத்து
சீரேதான் சிறுபாலன் என்னையுந்தான் சிறப்புடனே மனதுவந்து வஞ்சலித்து
நேரேதான் என்மீதிற் சினங்கொள்ளாமல் நேர்மையுடன் கொண்டணைத்தல் பாரமாமே
6995.
பாரமாம் எந்நூலிற் துகளுண்டானால் பாலகனே சிக்கறுத்து மனங்களித்து
தூரான வார்த்தையது மிகக்கொள்ளாமல் துப்புரவாய்ச் செந்தமிழைச் சீர்திருத்தி
கூறான விதிபாடு முறைபாடோடு குணபாடு வழிபாடு தானமர்த்தி
சீறான போகரே ழாயிரத்தை சிறப்புடனே யுகந்துமனங் கொள்வீர்தாமே
6996.
தாமான சித்துமுனி ரிஷியார்முன்னே தகமையுடன் பாடிவைத்த சத்தகாண்டம்
ஆமேதான் பசுங்கிள்ளை முன்னே வப்பனே யருங்காக்கை சத்தம்போலும்
வேமேதான் செந்தமிழாற் சித்தர்முன்னே வேட்கையுடன் யான்செய்த சத்தகாண்டம்
தாமேதான் புல்லறிவா லுரைத்ததாலே தண்மையுடன் பெரியோர் புன்னகையுமாமே
6997.
நகையான போகரே ழாயிரந்தான் நலமான சித்தர்முனி நாதருக்கு
தகமையுள்ள காண்டமது பெருமையோசொல் தாரணியில் அனேகம்பேர் சித்தர்கூடி
குகைதனிலே வெகுநூல்கள் பாடியல்லோ கொற்றவனே சமாதிமுகம் வைத்தாரப்பா
வகையான சாத்திரத்துக் கொப்புசொல்ல வல்லவனே எந்நாளும் முடியாதன்றே
6998.
அன்றான ஆதிசேடன் தன்னினாலும் வப்பனே வினவிடவும் போகாதப்பா
குன்றான மலைபோலே சாத்திரங்கள் கொட்டினார் சித்தரெல்லாம் லக்கோயில்லை
வென்றிடவே கும்பமுனி வர்க்கத்தோரும் வேதாந்த திருமூல வர்க்கத்தோரும்
நன்றாகப் பாடிவைத்தார் கோடிநூல்கள் நலமாகப் பாடிவைத்தேன் இந்நூலாமே
6999.
சின்னூலாம் என்றதொரு இந்தநூலை சினமதுவுங் கொள்ளாமல் மனதுவந்து
பன்னூலும் பெருநூலா யிருந்திட்டாலும் பட்சமுடன் மனங்களித்து வாசீர்மித்து
என்னூலைக் குற்றமது கூறாமற்றான் எழிலான சிறியேன்மேல் அன்புகூர்ந்து
நன்னூலா யிதம்பூண்டு யின்னூல்தன்னை நன்மையுடன் அனுசரித்து கொள்ளநன்றே
7000.
கொள்ளவே போகரே ழாயிரந்தான் கொற்றவனே நெடுங்காலந் தவமிருந்து
உள்ளபடி யுடல்பொருள்கள் ஆவியெல்லாம் வுத்தமனே இந்நூலுக் கொப்பிவைத்தேன்
கள்ளமிலா சாத்திரமாம் சத்தகாண்டம் கலியுகத்தார் தான்பிழைக்க பாடிவைத்தேன்
உள்ளபடி சாபமது இந்நூற்கில்லை வுத்தமனே காண்டமது யேழுதானே
7001.
தானான காண்டமது ஏழுக்குள்ளே சதகோடி சூரியன்போல் மகத்துவங்கள்
கோனான காலாங்கி கடாட்சத்தாலே கொற்றவனே பெருநூலாம் குருநூலாக
தேனான மனோன்மணியாள் கிருபையாலும் தேஜொளிவின் சின்மயத்தின் அருளினாலும்
மானான போகரே ழாயிரந்தான் மார்க்கமுடன் பெருநூலும் முற்றதாமே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக