6951.
கொள்ளாது போகரே ழாயிரந்தான் கொற்றவனே நாதாக்கள் கூறவில்லை
எள்ளளவும் பிசகாது இந்நூலப்பா யிணையான நூலுக்கு எதுவேதென்றால்
கள்ளமிலாக் கும்பமுனி சொன்னநூலாம் காசினியில் பெருநூலாம் பேதமுண்டோ
தள்ளளவுந் தான்போகாத காண்டமப்பா தருவான பன்னீ ராயிரந்தானே
6952.
பன்னீராயிரம் என்னும் நூல்தானப்பா பயிலான காண்டமது பனிரெண்டுமாகும்
சொன்னமொழி தவறாது துய்யபாலா துகளகற்றி பன்னீராயிரந்தான் சொன்னார்
கன்னியமாய்ப் பன்னிரண்டு காண்டஞ்சொன்னார் கண்மணியே வாயிரத்துக் கொருகாண்டந்தான்
உன்னிதமாய் இந்நூலுக்கு உவமைகூறி வுத்தமனார் பாடிவைத்தார் உண்மைதானே
6953.
உண்மையாம் எந்நூலைக் கண்டறிந்து வுத்தமனே கும்பமுனி நூலைப்பாரு
திண்ணமுடன் பனிரெண்டு காண்டம்பாரு தீர்க்கமுடன் ரகசியங்கள் எல்லாம்விள்ளும்
நன்மைபெற மோட்சவழி கதியேகொள்வார் நாதாந்த கும்பமுனி முன்னேநிற்பார்
தண்மையுள்ள சாத்திரந்தான் பெருநூலப்பா தகமையுள்ள பனிரெண்டு காண்டம்பாரே
6954.
பாரேதான் அகஸ்தியனார் கோடிநூல்கள் பாருலகில் பாடிவைத்தார் மறைப்புமெத்த
நேரேதான் பெருநூலின் மார்க்கமெல்லாம் நேர்மையுள்ள வென்னூல்போல் விள்ளலாகும்
சீரேதான் பனிரெண்டு காண்டமாக சிறப்புடனே பாடிவைத்தார் புலஸ்தியற்கு
வேரேதான் சாஸ்திரங்கள் பார்ப்பதுண்டோ பார்த்தாலும் பெருநூலுக் கொவ்வாதன்றே
6955.
அன்றான சாத்திரங்கள் அனந்தங்கோடி வளவில்லா சூத்திரங்கள் கணக்கோயில்லை
குன்றான மலைபோலே குவித்துவைத்தார் கொடிதான சாத்திரத்தின் மகிமையெல்லாம்
தென்றிசையில் கும்பமுனி செய்தநூல்கள் தேசத்தில் பாதியுண்டு ஆயுர்வேதம்
வென்றிடவே பதினெண்பேர் செய்தநூல்கள் வேட்கமுடன் மறுபாதி என்னலாமே
6956.
என்னவே கும்பமுனி என்றநாமம் எழிலான வகஸ்தியரின் நாமமாகும்
பன்னவே யகஸ்தியனார் யென்றநாமம் பலபலவாஞ் சாத்திரத்தில் முறைபாடாக
துன்னவே கும்பமுனி யென்றுமேதான் துப்புரவாய் எப்போதும் வழக்கம்பாரு
சொன்னதொரு நூல்களிலே மகிமைகோடி தோறாமல் பாடிவைத்தார் முனிவர்தாமே
6957.
முனியான சாத்திரங்கள் பலநூல்கோர்வை மூதுலகில் பாடிவைத்தார் சித்தரெல்லாம்
கனியான நவகனியாம் நூல்தானப்பா கருத்துடனே பனிரெண்டு காண்டஞ்சொன்னார்
பனியதுதான் சூரியனைக் கண்டாற்போல பறக்குமடா பனிரெண்டு காண்டமுன்னே
தொனிபோன்ற சாத்திரங்கள் களவுமார்க்கம் துப்புரவாய்க் காவியத்துக் கொவ்வாதன்றே
6958.
அன்றான சாத்திரமாங் கோர்வையப்பா வப்பனே பனிரெண்டு காண்டஞ்சொன்னார்
குன்றான மலைபோலே கோடித்தங்கம் கொட்டினார் பனிரெண்டு காண்டத்துள்ளே
சென்றிடவே வைத்தியமும் வாதமார்க்கம் செயலான யோகமுதல் ஞானமார்க்கம்
வென்றிடவே மாந்திரீக மாரணவேதம் வேண்டியதோர் கருமானம் மிகவுண்டாமே
6959.
உண்டான சாத்திரத்தில் இல்லாமார்க்கம் வுத்தமனே பெருநூலிற் காணலாகும்
கண்டாலும் விடுவாரோ பெருநூலப்பா காசினியில் பனிரெண்டு காண்டந்தன்னை
விண்டதொரு பொருளெல்லாம் அதிலேதோயும் வித்தகனே மற்றோர்நூல் காண்பதில்லை
சண்டமா ருதம்போலே பனிரெண்டுகாண்டம் சங்கையற வாயிரத்துக் கொருகாண்டந்தானே
6960.
சங்கையில்லா பெருநூலை பார்த்தபேர்கள் சாயுச்சிய பதவிதனைப் பெறவேயாகும்
இங்கிதமாய்ப் பெருநூலைப் பார்க்காமாண்பர் எழிலான சாலோக சாபமீந்தான்
அங்கமுடன் சாரூப பதவிமூன்றும் வப்பனே கிட்டுவதும் அரிதேயாகும்
புங்கசித்தி எட்டுவித போகந்தன்னை புகழுடனே பெருநூலோர் காண்பார்தானே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக