பக்கங்கள்

சனி, 6 ஜூலை, 2013

bogar போகர்-சப்த காண்டம் 7000 6921-6930

6921.
தலமான தேவதா தலமுமாகும் தாக்கான கோர்வையது என்னசொல்வேன்
பிலமான கோயிலது முப்பத்திரண்டு பேரான மண்டபந்தான் அறுபத்துநான்கு
வலமான பாஞ்சால தேசமப்பா வளமான தேவதா தலமுமாகும்
நலமான கோர்வையது என்னசொல்வேன் நாட்டிலே நவில்வதற்கு நாவில்லைதானே
6922.
நாவில்லைப்பா வில்லையென்ன சொல்வேன் நன்மையுள்ள வறுபத்து நாலுசத்தம்
காவிலா நேபாள தேசமப்பா கருவான தேவதா தலமுமாகும்
பூவிலுயர் கோர்வையது யென்னசொல்வேன் புகழான சத்தமது பரிசமெட்டு
தாவுபுகழ் ஆவுடையார் தலமுமாகும் தகமையுள்ள கோர்வையது சொல்லக்கேளே
6923.
சொல்லவென்றால் நாற்பத்தி யாறேயாகும் சுத்தமுள்ள சத்தமது நாலேயாகும்
வெல்லவே பழனிமகா தலமுமாகும் வேதாந்த தலத்தினது கோர்வைசொல்வேன்
புல்லவே சதுரெட்டு திசைகள்நான்கு புகழான கோணமது வறுபத்துநான்கு
வெல்லவே கழுக்குன்ற பதிதானப்பா மேன்மையுள்ள தலமென்று செப்பலாமே
6924.
செப்பவென்றால் கோர்வையது என்னசொல்வேன் ஜெகதலத்தில் யாராலும் சொல்லப்போமோ
ஒப்பமுடன் இருபத்து நாலுமாகும் ஓகோகோ நாதாக்கள் மறைத்தகூத்து
எப்படியும் ஈரைந்தாய்ப் பதினாறாக எழிலான மண்டபமும் கூறலாகும்
தப்பிதங்கள் இல்லாமல் தயவுள்ளானே சாற்றுகிறேன் திருவொற்றி யூரைத்தானே
6925.
தானான துவாபரமாம் யுகத்திலப்பா தகமையுடன் பிரளயங்கள் வந்தபோது
கோனான திருவொற்றி யூர்தானப்பா கொற்றவனே கடலிலே நெடுந்தூரந்தான்
தேனான மாபுரமுங் கோபுரந்தான் தோறாமல் பிரளயங்கள் வந்துமல்லோ
மானான தலமதுவும் மூழ்கியல்லோ மன்னவனே சமுத்திரமும் மேவலாச்சே
6926.
மேவவென்றால் கோர்வையது என்னசொல்வேன் மேன்மையுள்ள நாற்பத்தி யெட்டேயாகும்
தாவுகட லலையதுவு மிஞ்சியேதான் சட்டமுடன் பூமியல்லோ முழுகலாச்சே
ஆவலுடன் குளிகைகொண்டு சென்றேனப்பா வப்பனே திருப்புவனங் கண்டேன்யானும்
நாவதனில் கூறுதற்கு நளினமில்லை நலமான தலமதுவும் மகிமையாச்சே
6927.
ஆச்சப்பா கோர்வையது என்னசொல்வேன் வப்பனே பதினெட்டு ரெண்டுபத்து
பாச்சலென்ற திருப்பழனி தலமுமாகும் பாங்கான மகிமையது என்னசொல்வேன்
மாச்சலென்ற கோர்வையது முப்பத்திரண்டு மகத்தான மண்டபமும் எட்டுநாலு
வீச்சுடனே குளிகைகொண்டு பார்த்துவந்தேன் விதக்கவே புலிப்பாணி இன்னங்கேளே
6928.
கேளப்பா பிணிதீர்த்த வைத்தியநாதர் கெடியான தலமென்ற தொன்றுவுண்டு
ஆளப்பா கோர்வையது என்னசொல்வேன் வப்பனே பதினாறு திக்குநாலு
யாளப்பா திருப்பரமாங் குன்றந்தானும் வளமையுள்ள கெடிஸ்தலமாம் அதற்குப்பேரு
சூளப்பா கோர்வையது என்னசொல்வேன் துப்புறவாய் இருமூன்று சதரமெட்டே
6929.
எட்டான திருவாரூர் என்னலாகும் எழிலான கோர்வையது என்னசொல்வேன்
சட்டமுடன் திருவாசல் அறுபத்துநான்கு தகமையுள்ள கலையாறு சத்தமெட்டு
திட்டமுடன் திருவிடையா மருதூரப்பா தேவதா தலமென்று செப்பலாகும்
வட்டமுடன் கோர்வையது வன்பத்தாறு வப்பனே பரிசமது நாலுதானே
6930.
நாலான திருவிருஞ்சி தலமுமப்பா நலமான மலைநாடு கள்ளர்தேசம்
பாலான கோர்வையது என்னசொல்வேன் பாங்கான விளையாட்டு சத்தமெட்டு
காலான திருச்சோழ தலமுமாகும் கருவான மகிமையது என்னசொல்வேன்
நூலான கோர்வையது நாலுபத்து நுட்பமுடன் கலையாறு பாசமெட்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக