பக்கங்கள்

சனி, 6 ஜூலை, 2013

bogar போகர்-சப்த காண்டம் 7000 6941-6950

6941.
ஆமேதான் புலிப்பாணி யன்புள்ளானே வப்பனே வனாகதத்தின் தீர்த்தங்கண்டேன்
நாமேதான் காலாங்கி நாதர்தம்மால் நலமான குளிகையது பூண்டுகொண்டு 
தாமேதான் காலாங்கி சொன்னநீதி தண்மையுடன் வாக்கதுவும் செய்யாமற்றான்
போமேதான் அஷ்டதிசை யான்கடந்து பொங்கமுடன் தீர்த்தமதைக் கண்டிட்டேனே
6942.
கண்டேனே வெகுகோடி தீர்த்தந்தன்னை காசினியில் ஆர்கண்டார் என்னைப்போல
உண்டான சித்துமுனி ரிஷிகள்தேவர் வுலகமெலாம் குளிகைகொண்டு சென்றதுண்டே
ஒண்டொடியாய் மரம்பொந்து சமாதிபீடம் ஓகோகோ நாதாக்கள் கண்டதில்லை
சண்டமா ருதம்போலே குளிகைபூண்டு சட்டமுடன் அஷ்டதிசை கண்டிட்டேனே
6943.
இட்டேனே இன்னமொரு மார்க்கஞ்சொல்வேன் யெளிதான நாதாந்த சித்துதாமும்
பட்டமாம் விட்டலவோ பாரின்மீது பாருலகில் அதிசயத்தைக் கண்டிதில்லை
விட்டகுறை இருந்ததொரு புண்ணியத்தால் வேதாந்தத் தாயினது மகத்துவத்தால்
சட்டமுடன் வையகத்து மகிமையெல்லாம் தாரணியில் கண்டறிந்த மகிமைபாரே
6944.
புதுமையாம் வெகுகோடி சித்தர்தாமும் புகழான வுலகுதனில் கோடாகோடி
கதுமையுள்ள தேவரிஷி இருந்தாரல்லோ காசினியில் அதிசயங்கள் கண்டேனென்றும்
பதுமைமுகம் அஷ்டதிக்கு பரிசம்யாவும் பார்த்துவந்த வுறுதியதும் கூறவில்லை
வதுவைபுரி சுரக்காயங் கரிக்காயென்ற வார்த்தையது போலலைவாய் நவின்றிட்டாரே
6945.
நவின்றாரே சித்துமுனி கோடாகோடி நாற்பத்து எட்டுலட்ச கிரந்தந்தன்னை
குவின்றதொரு சாத்திரங்கள் மலைபோலாக குணமுடனே பாடிவைத்தார் லக்கோயில்லை
கவிந்ததொரு குறுக்குவழி சுறுக்குமார்க்கம் கண்டுமனது வந்தல்லோ வுளவாராய்ந்து
அவிந்ததொரு விளக்கதனை ஏற்றினார்போல் வப்பனே சத்தகாண்டம் பாடினேனே
6946.
பாடினேன் இன்னமொரு மார்க்கஞ்சொல்வேன் பாலகனே புலிப்பாணி பகரக்கேளாய்
நீடியதோர் காலாங்கி கிருபையாலே நீதியுடன் நெடுங்கால மிருந்தேனங்கே
தேடியே காலாங்கி நாதர்தாமும் தேற்றமுடன் தன்தனக்கு உகந்தசீஷன்
நாடியே வேண்டுமென்று நன்மையாலே நானவற்கு நற்சீஷ னாகினேனே
6947.
ஆகினேன் நெடுங்காலம் பணிதிசெய்து வப்பனே சமாதிக்குப் பூசைசெய்தேன்
பாலில்விழும் ஈயைப்போல பரிதவித்தேன் பட்சமுடன் என்மீதில் மனதுவந்து
சாகின்ற சடலமது காயந்தந்து சட்டமுடன் எந்தனுக்கு இதவுகூறி
மேதிடவே ஞானோப தேசஞ்சொல்லி மேன்மையுடன் எந்தனை யாசீர்மித்தாரே
6948.
எந்தனையும் ஆசீர்மம் மிகவுஞ்செய்து எழிலான வுபதேச வுண்மைகூறி
அந்தமுடன் ஆதியந்த முடிவுஞ்சொல்லி வப்பனே யோகமென்ற வழியுங்காட்டி
விந்தையுடன் வையகத்து மகிமைகூறி விட்டகுறை யாவனைத்து மொழிந்துமல்லோ
சொந்தமுடன் எந்நாளும் சீஷனாக்கி சுந்தரனே மகத்துவங்கள் கூறினாரே
6949.
கூறினார் வெகுகோடி இதிகாசங்கள் கொற்றவனே சமாதிமுறை பாடுஞ்சொல்லி
தேறியே சிலகாலம் அங்கிருந்து தேற்றமுடன் வையகத்து வதிசயங்கள்
மீறியே தானுணர்ந்து குளிகைபூண்டு மிக்கான நாடுபதி தேசமெல்லாம்
கோறியே தேசமெல்லாம் மகிதம்பூண்டு கொற்றவனே எந்தனுக்கு வருள்தந்தாரே
6950.
தந்தாரே எந்தனுக்குக் கோடியாக சட்டமுடன் காலாங்கி நாதர்தாமும்
அந்தமுடன் எந்தனுக்கு வதிதமார்க்கம் வப்பனே தாமுரைத்துப் போகவென்று
இந்தமா னிலத்திலுள்ள மகிமையெல்லாம் ஏற்றமுள்ள குளிகையினால் அறிந்துகொண்டு
விந்தையுடன் பாடிவைப்பேன் சத்தகாண்டம் விண்ணுலகம் மண்ணுலகம் விடங்கொள்ளாதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக