6871.
கேளப்பா தேகமது கூர்மவர்ணம் கெடியான திருமுகந்தான் மனுஷரூபம்
வாளப்பா நெடுங்காலந் தவசிருந்து வளமையுடன் காலாங்கி மலைமேற்றானும்
ஆளப்பா பிரளயங்கள் வந்தபோது வப்பனே தவசிருந்த சித்துமாகும்
காளப்பா திரேதாயி னுகத்தில்தானும் கருவான மலைதனிலே இருந்தசித்தே
6872.
சித்தான புலிப்பாணி சிறியபாலா சிறப்புள்ள வதிசயங்கள் இன்னஞ்சொல்வேன்
பத்தியுடன் காலாங்கி நாதர்தாமும் பாருலகில் திரேதாயி னுகத்திலப்பா
சத்தியங்கள் தவறாமல் தவசுசெய்து சாங்கமுடன் பிரளயங்கள் வந்தபோது
சுத்தியே நிற்பதற்கு இடங்கொள்ளாமல் சுந்தரனார் மலைமீதில் ஏறினாரே
6873.
ஏறினார் காலாங்கி மலையின்மேலே எழிலான பிரளயங்கள் வந்தபோது
மீறியே யாகங்கள் செய்துகொண்டு மிக்கான மலைகளிலே இருக்கும்போது
கூறியதோர் வராகமென்ற ரிஷியார்தாமும் கொற்றவனார் மலையதனில் தவசிருந்தார்
கோறியே காலாங்கி நாதர்தாமும் கொப்பெனவே தவசியிடம் சென்றார்பாரே
6874.
பாரேதான் எனதையர் காலாங்கிநாதர் பாங்கான மலைதனிலே தவசிருந்த
சீரான வராகரிஷி தன்னைத்தானும் சிறப்புடனே காலாங்கி காணும்போது
தீரான வுருவமது வராகம்போலும் தீர்க்கமுள்ள திருமுகந்தான் மனிதரூபம்
நேரேதான் தவயோகஞ் செய்துகொண்டு நேர்மையுடன் தானிருந்த ரிஷிகண்டாரே
6875.
கண்டாரே நெடுங்காலந் தவசிருக்கும் கருவான ரிஷியாரை மனதுவந்து
தெண்டமுடன் காலாங்கி நாதர்தாமும் தேற்றமுடன் ரிஷியாரைக் கேட்கும்போது
சண்டமா ருதம்போலே ரிஷியார்தாமும் சட்டமுடன் மனதுவந்து சாற்றலுற்றார்
திண்ணமுடன் திரேதாயி னுகத்திலப்பா திருவாண்டு முதல்வருஷஞ் சமாதிகாணே
6876.
தானான காலாங்கி நாதரேகேள் தகமையுடன் திரேதாயி னுகத்திலப்பா
தேனான மனோன்மணியாள் கிருபையாலே திரளான பிரளயங்கள் வந்தபோது
மானான மகதேவர் கடாட்சந்தானே மன்னவனே நெடுங்காலந் தவசிருந்தேன்
பானான வையகத்தில் ஆரேனுந்தான் பக்கல்வந்து கேட்டதில்லை என்றிட்டாரே
6877.
இட்டாரே வராகரிஷி முனிவர்தானும் எழிலான காலாங்கி தன்னைக்கண்டு
விட்டகுறை இருந்ததொரு புண்ணியத்தால் விருப்பமுடன் எந்தனையும் காணலாச்சு
சட்டமுடன் உந்தனுக்கு உபதேசங்கள் சாங்கமுடன் போதிப்பேன் என்றுசொல்லி
திட்டமுடன் உலகத்தில் மகிமையெல்லாம் தீர்க்கமுடன் காலாங்கிக் கோதினாரே
6878.
ஓதினார் சமாதிமுகம் இருந்தகாலம் வுத்தமனார் காலாங்கி நாதருக்கு
ஆதியெனும் பராபரத்தின் ரகசியத்தை வப்பனே காலாங்கிக் கோதினார்காண்
நீதியுடன் உபதேசம் பெற்றுமல்லோ நிகட்சியுடன் தெற்குமுகம் திரும்பிவந்தார்
பாதிமதி சடையணிந்த தம்பிரான்போல் பரமகுரு ரிஷியொருவர் இருந்திட்டாரே
6879.
இருந்தாரே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் எழிலான புலிப்பாணி இன்புள்ளானே
பொருந்தவே திரேதாயி னுகத்திலப்பா பொங்கமுடன் காலாங்கி நாதர்தாமும்
திருந்தியே கண்டதொரு வதிசயங்கள் தீர்க்கமுடன் எந்தனுக்கு சொன்னநீதி
வருந்தவே நரசிங்க ரிஷியார்தன்னை வளப்பமுடன் கண்டதொரு வுண்மைபாரே
6880.
உண்மையாங் காலாங்கி நாதர்தாமும் வுத்தமனார் திரேதாயி னுகத்திலப்பா
வண்மையுடன் காலாங்கி நாதர்தாமும் வாகுடனே மலைமீதிற் கண்டசேதி
திண்மைபெற மார்க்கமது யாதென்றாக்கால் தீர்க்கமுடன் கிரிசுத்தி வருகும்போது
வண்மையுள்ள சுனையொன்று தடாகமுண்டு வளம்பெரிய தவசிதனை பார்த்திட்டாரே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக