6931.
எட்டான சேரனது தலமுமப்பா எழிலான மகிமையது என்னசொல்வேன்
மட்டான தலபதியின் மகிமைசொல்வேன் மகத்தான கோர்வையது தொண்ணூற்றாறு
திட்டமுடன் பாண்டியனார் தலமுமப்பா திகழான வைகைவள நாடேயாகும்
வட்டமுடன் கோர்வையது என்னசொல்வேன் வண்மையுள்ள கலைரெண்டு சோடசமுமேழே
6932.
ஏழான காசியது எட்டேயாகும் எழிலான மகிமையது என்னசொல்வேன்
பாழான கோர்வையது நூற்றிரண்டுபத்து சட்டமுடன் மகிமையது மெத்தவுண்டு
காழான நாகார்ச்சுன தலமுமாகும் கருவான கோர்வையது எழுபத்திரண்டு
தாழான டில்லியது மகிமைமெத்த தாக்கான கோர்வையது எண்பத்திரண்டே
6933.
ரெண்டான சீனபதி தன்னிற்சென்று எழிலான குளிகையது யானும்பூண்டு
குண்டலியாம் வாசிதனை பூட்டியல்லோ கொற்றவனே சீனபதி யானிருந்து
சண்டமா ருதம்போலே சிலநாட்சென்று சாங்கமுடன் குளிகையது பூண்டுகொண்டு
வண்ணமுடன் தீர்த்தவரை காணுதற்கு வளமுடனே சென்றதொரு மகிமைபாரே
6934.
பாரேதான் படிகமாந் தீர்த்தங்கண்டேன் பாங்கான ஜம்புவென்ற தீர்த்தங்கண்டேன்
நேரேதான் செந்தாமரை தீர்த்தங்கண்டேன் நெடிதான மனோன்மணியாள் தீர்த்தங்கண்டேன்
கூரேதான் மஹேஸ்வரனார் தீர்த்தங்கண்டேன் குறிப்பான மச்சமென்ற தீர்த்தங்கண்டேன்
சீரேதான் மானிடவ தீர்த்தங்கண்டேன் சிறப்பான கோபருவ தீர்த்தங்கண்டேனே
6935.
காணவே பட்சியென்ற தீர்த்தங்கண்டேன் கருவான சங்லினுட தீர்த்தங்கண்டேன்
பூணவே சந்தனமாந் தீர்த்தங்கண்டேன் புகழான வியாசமுனி தீர்த்தங் கண்டேன்
மாணவே மகதேவர் தீர்த்தங்கண்டேன் மகத்தான பச்சையென்ற தீர்த்தங்கண்டேன்
கோணவே திருப்பாலின் தீர்த்தங்கண்டேன் தோறாத வண்டூரன் தீர்த்தமாமே
6936.
தீர்த்தமாங் கரியமால் தீர்த்தங்கண்டேன் திறமான நாகேஸ்வர தீர்த்தங்கண்டேன்
பூர்த்தியாய் பரமசிவ தீர்த்தங்கண்டேன் புகழான பாகவத தீர்த்தங்கண்டேன்
கீர்த்தியுள்ள செங்கண்மால் தீர்த்தங்கண்டேன் கெடியான புண்ணியத் தீர்த்தங்கண்டேன்
பார்த்தேனே சடாயுவென்ற தீர்த்தங்கண்டேன் பாங்கான வச்சிரவல்லி தீர்த்தந்தானே
6937.
தானான குசலமென்ற தீர்த்தங்கண்டேன் தாக்கான யமுனையென்ற தீர்த்தங்கண்டேன்
கோனான வகஸ்தியனார் தீர்த்தங்கண்டேன் குணமான வன்னியனார் தீர்த்தங்கண்டேன்
தேனான மல்லியென்ற தீர்த்தங்கண்டேன் தெளிவான வனுமாரின் தீர்த்தங்கண்டேன்
பானான காசியென்ற தீர்த்தங்கண்டேன் பாங்கான கைலங்கிரி தீர்த்தம்பாரே
6938.
பாரேதான் செண்பகத்தின் தீர்த்தங்கண்டேன் பாங்கான கைகேசி தீர்த்தங்கண்டேன்
நேரேதான் கறுப்பண்ணர் தீர்த்தங்கண்டேன் நெடிதான கிட்கிந்தா தீர்த்தங்கண்டேன்
கூரேதான் அஷ்டமென்ற தீர்த்தங் கண்டேன் குணமான ஜெகமோகினி தீர்த்தங்கண்டேன்
திரேதாயின் திருவல்லி தீர்த்தங்கண்டேன் திறமான கற்பத்தின் தீர்த்தங்கண்டேனே
6939.
காணவே இன்னம்வெகு தீர்த்தமுண்டு கண்மணியே விலாடமென்ற தீர்த்தங்கண்டேன்
பூணவே இரணியனார் தீர்த்தங்கண்டேன் புகழான புஜண்டரிட தீர்த்தங்கண்டேன்
வேணபடி திருமாலின் தீர்த்தங்கண்டேன் விருளான கும்பமென்ற தீர்த்தங்கண்டேன்
நீணவே காளிங்க தீர்த்தங்கண்டேன் நிஷ்களங்க சொர்ணமென்ற தீர்த்தந்தானே
6940.
தானான தீர்த்தமது என்னசொல்வேன் தகமையுள்ள புலிப்பாணி தம்பிரானே
மானான தாமரையின் தீர்த்தங்கண்டேன் மகத்தான ஞானமென்ற தீர்த்தங்கண்டேன்
வேனான யாதவமாந் தீர்த்தங்கண்டேன் வெளியான வமுர்தமென்ற தீர்த்தங்கண்டேன்
பானான வசுவனியாந் தீர்த்தங்கண்டேன் பாங்கான வற்புதமாம் தீர்த்தமாமே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக