பக்கங்கள்

சனி, 6 ஜூலை, 2013

bogar போகர்-சப்த காண்டம் 7000 6981-6990

6981.
பாடினேன் புலிப்பாணி மைந்தாகேளு பாலகனே வியாசமுனி நாதருக்கு
தேடியே யவர்பாதந் தொழுதேனப்பா தேற்றமுடன் சரணங்கள் மிகவுஞ்சொன்னேன்
கூடியே கௌதம ரிஷியாரின்தன் கொற்றவனே யவர்பாதந் தொழுதுபோற்றி
நீடியே வஞ்சலிகள் மிகவுஞ்செய்து நீதியுடன் அவர்பதத்தை பணிந்திட்டேனே
6982.
இட்டேனே திருமூலர் சரணஞ்சொன்னேன் எழிலுடனே யவர்பாதந் தொழுதுபோற்றி
சட்டமுடன் பாம்பாட்டி சித்தருக்கு சதகோடி நமஸ்காரம் செய்தேன்யானும்
திட்டமுடன் அவர்பாதந் தொழுதுபோற்றி தீர்க்கமுடன் மேலுமஞ்சலிகள் செய்தேன்
பட்டமுடன் கடுவெளியார் சித்தருக்கு பாலகனே நமஸ்காரஞ் செய்தேன்பாரே
6983.
பாரேதான் கமலமென்ற முனியாருக்கு பட்சமுடன் சதகோடி சரணஞ்சொன்னேன்
சீரேதான் அவர்பாதந் தொழுதுபோற்றி சிறப்புடனே வஞ்சலிகள் மிகவுஞ்செய்தேன்
நேரேதான் கைலாச ரிஷியாருக்கு நேர்மையுடன் அவர்பாதந் தொழுதுபோற்றி
கூரேதான் நமஸ்காரம் மிகவுஞ்சொன்னேன் கொற்றவனே புலிப்பாணி பண்புள்ளானே
6984.
பண்பான வஞ்சனமாம் ரிஷியாருக்கு பாலகனே சரணங்கள் அதிகஞ்சொன்னேன்
நண்புடனே தான்பணிந்து முடிகள்சாய்த்து நன்மையுடன் அவர்பாதந் தொழுதுபோற்றி
வண்பான நவகண்டர் பாதம்போற்றி வளமுடனே யவர்தனக்கு சரணஞ்சொன்னேன்
திண்பான வஞ்சலிகள் மிகவுஞ்செய்து தீர்க்கமுடன் கரங்குவித்து வணங்கினேனே
6985.
வணங்கவே இன்னம்வெகு சித்தருண்டு வளமான நாதாந்த ரிஷியாரப்பா
இணங்கினேன் ஜமதக்னி முனியாருக்கு எழிலான சரணங்கள் மிகவுஞ்சொன்னேன்
சுணங்கமது வாராமல் ரிஷியாருக்கு சுத்தமுடன் அவர்பாதந் தொழுதுபோற்றி
மணங்கமழுந் திரணாக்கிய முனிவருக்கு மார்க்கமுடன் அவர்பாதந் தொழுதிட்டேனே
6986.
தொழுதேனே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் தொல்லையெனும் பிறவியது மயக்கறுத்த
பழுதுபடா புலிப்பாணி பகர்வேனப்பா பாலகனே இன்னம்வெகு சித்தருண்டு
முழுதுமே மூதுலகில் கீர்த்திபெற்ற முனையான வசுவினியாந் தேவருக்கு
தொழுதுமே யவர்பாதம் போற்றிபோற்றி தோற்றமுடன் அஞ்சலிகள் பகருவேனே
6987.
பகரவே புஜண்டமகா ரிஷியாருக்கு பண்புடனே வெகுகோடி சரணஞ்சொன்னேன்
நிகரவே யவர்பாதந் தொழுதுபோற்றி நீதியுடன் தலைகுனிந்து முடிகள்சாய்த்தேன்
சகராஜ பரிட்சித்து மன்னனுக்கு சட்டமுடன் சோதிடங்கள் தாமுரைத்த
சுகரென்ற ரிஷியார்க்குச் சரணஞ்சொன்னேன் துப்புரவாய் அவர்பாதம் பணிந்திட்டேனே
6988.
பணிந்தேனே பலிப்பாணி மன்னவாகேள் பாருலகில் கும்பமென்ற யீசருக்கு
துணிந்துமே யவர்பாதந் தொழுதுபோற்றி துப்புரவாய் சரணங்கள் அதிகஞ்சொன்னேன்
கணிதமென்ற மூலத்தின் ஈசருக்கு கனகாபி ஷேகமுடன் சரணஞ்சொன்னேன்
மணிபோன்ற பாதமதைத் தொழுதுபோற்றி மன்னவனே சதாகாலம் நினைப்பேன்காணே
6989.
காணவே கருவூரார் சித்தருக்கு கனகாபி ஷேகமது மிகவுஞ்செய்து
தோணவே யவர்தனக்கு சரணஞ்சொன்னேன் துப்புரவாய் அவர்பாதம் போற்றிபோற்றி
மாணமருங் கல்வியுள்ள கொங்கணர்க்கு மகத்தான சரணங்கள் மிகவுஞ்சொன்னேன்
நீணவே வாலையா னந்தருக்கு நீதியுடன் பாதமது பணிந்தேன்தானே
6990.
தானான புலஸ்தியர்க்கு சரணஞ்சொன்னேன் தாக்கான வால்மீகர் பாதம்போற்றி
கோனான சுப்பிரமணியர் சரணஞ்சொன்னேன் கூரான வவர்பாதந் தொழுதுபோற்றி
தேனான ஜெயகண்டி பாதம்போற்றி செங்கமல வள்ளுவனார் சரணஞ்சொன்னேன்
மானான மகதேவர் காலதூதர் மகத்தான பாதமது பணிந்திட்டேனே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக