பக்கங்கள்

சனி, 6 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6881-6890

6881.
பார்த்தாரே நரசிங்க ரிஷியார்தம்மைப் பட்சமுடன் காலாங்கி காணும்போது
தீர்த்தமுடன் ரிஷியாரின் தவசின்வேடம் திரேகமெல்லாம் சிம்பத்தின் ரூபமாகும்
நேர்த்தியுள்ள வர்ணமது தங்கவர்ணம் நேர்மையுடன் வையகத்தி லிருந்தசித்து
ஆர்த்ததொரு திருமுகம் மனிதரூபம் வப்பனே தவநிலையை அறிந்திட்டாரே
6882.
அறிந்தாரே தவசியுட மகிமைதன்னை வன்புடனே மனதுவந்து யருகில்வந்து
சிறந்ததொரு ரிஷியாரைக் காலாங்கிநாதர் தேற்றமுடன் வினவியங்கே கேட்கும்போது
குறித்ததொரு காலாங்கி நாதருக்கு குணமான நரசிங்க ரிஷியார்தாமும் 
மறித்துமே காலாங்கி நாதர்தாமும் மன்னவனே மார்க்கமது கூறுவேனே
6883.
கூறுவேன் என்றதுமே ரிஷியார்தாமும் குணமான காலாங்கி நாதருக்கு
தேறுதலாய் உபதேசம் மிகவுஞ்சொல்லி தேற்றமுடன் நெடுங்காலம் மலையிலப்பா
மாறுலக வையகத்தில் தவசிருந்து மன்னவனே யானறிந்த மகிமைகோடி
ஆறுதலாய் உபதேச வதிதங்கூறி வப்பனே போகவென்று விடைதந்தாரே
6884.
தந்தாரே காலாங்கி நாதருக்கு தாரணியில் அதிசயங்கள் அதிதஞ்சொன்னார்
பொந்தியே காலாங்கி நாதர்தாமும் போனதொரு கிரிகைதனில் மேற்குபாகம்
சொந்தமுடன் காணுதற்கு மனதுவந்து தோறாமல் கிரியோரம் வருகும்போது
விந்தையுடன் அதிசயங்கள் என்னவென்றால் வீரான வாமரிஷி தனைக்கண்டாரே
6885.
கண்டாரே புலிப்பாணி புனிதவானே காசினியில் இன்னும்வெகு வதிசயங்கள்
அண்டர்பிரா நாதாக்கள் ரிஷியார்தாமும் யாரேனுங் கண்டறிந்து சொன்னதுண்டோ
சண்டமா ருதம்போல எந்தன்தேவர் சட்டமுடன் காலாங்கி நாதர்தாமும்
கண்டறிந்த வதிசயத்தை யாமுரைப்பேன் கண்மணியே விண்மணியே கழறக்கேளே
6886.
கேளப்பா எந்தனது காலாங்கிநாதர் கெடிதான திரேதாயி னுகத்திலப்பா
ஆளப்பா கிரிசுத்தி வருகும்போது வப்பனே மலையோரம் வடபக்கந்தான்
மீளவே தவநிலையைப் பார்க்கவென்று மிக்கான சுனையருகே வந்தபோது
சூளப்பா ரிஷியார்கள் கூட்டத்தோடும் சுந்தரனே வாமமகா ரிஷிகண்டாரே
6887.
கண்டாரே வாமமகா ரிஷியார்தம்மை கருவான தேகமது வாமரூபம்
கொண்டதொரு திருமுகமும் மனிதரூபம் கோடான கோடியது நெடுங்காலந்தான்
அண்டமகா ரிஷிபோலே வாமர்தாமும் வருளான பெருந்தவசு தானிருந்தார்
கொண்டல்வண்ணன் அச்சுதன்போல் விசுவரூபம் கொடியதவம் செய்திருக்கக் கண்டிட்டாரே
6888.
கண்டாரே திரேதாயி னுகத்திலப்பா கடுந்தவசு செய்திருந்த ரிஷியார்தம்மை
சண்டமா ருதம்போலே தவசிருந்து சாங்கமுடன் வையகத்து மகிமையெல்லாம்
வண்டணியாள் ரேணுகையாள் மகிமைதன்னை வளமுடனே தானுரைத்தார் காலாங்கிக்கு
குண்ணதின் மேலிருந்து தவசியாகும் கூறினார் வெகுகோடி மகிமைதானே
6889.
தானான யின்னமொரு தண்மைசொல்வேன் தண்மையுள்ள புலிப்பாணி கனவானேகேள்
கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் எந்தனுக்கு சொன்னநீதி
தேனான திரேதாயி னுகத்திலப்பா தேற்றமுடன் இருபதா மாண்டுதன்னில்
பானான பிரம்மகுல பரசுராமன் பெருந்தவசு தானிருந்த வண்மைபாரே
6890.
பாரேதான் பிரளயங்கள் வந்தபோது பாங்கான காலாங்கி மலையின்பேரில்
நேரேதான் நெடுங்காலந் தவசிருந்து நேர்மையுள்ள பிரம்மகுல சித்துதானும்
சீரேதான் கிரிதனக்கு கீழ்பாகந்தான் சிறப்புடனே தவமிருந்த ரிஷியார்தம்மை
ஆரோதான் காண்பதற்கு வையகத்தில் வப்பனே யாராலும் முடியாதன்றே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக