6911.
கூறுவேன் புலிப்பாணி மன்னாகேளு கொற்றவனார் காலாங்கி சொன்னநீதி
பேறுடைய வையகத்தின் ஸ்தலங்களெல்லாம் பேர்வகுத்துச் சீர்வகுத்துப் பிரித்துச்சொன்னார்
ஆறுதலம் பஞ்சபூத ஸ்தலத்தைக்கண்டு வப்பனே எந்தனுக்கு ஓதினார்காண்
மாறுபடா ஸ்தலமகிமை யுந்தனுக்கு மார்க்கமுடன் வகைபிரித்து சொல்வேன்தானே
6912.
தானான பஞ்சபூத ஸ்தலமேதென்றால் தாக்கான காளஸ்திரி காஞ்சியாகும்
தேனான திருக்காசி சிதம்பரந்தான் தெளிவான திருவருணை ஸ்தலமுமாகும்
பானான ஸ்தலத்தினது சேர்வைசொன்னேன் பாங்கான ஆராதாரங்கள் சொல்வேன்
மானான மகதேவர் மதுரையைத்தான் மகத்தான ஸ்தலமென்று மதிப்பிட்டாரே
6913.
மதிப்பான ஸ்தலத்தினது கோர்வைசொல்வேன் மகத்தான மதுரைக்குள் எண்பத்துநாலு
துதிப்புடைய சிதம்பரங் கோர்வைசொல்வேன் துப்புரவாய் பதினாறு ரெண்டுயெட்டு
யிதிலான வருணைக்குக் கோர்வைசொல்வேன் விற்பனனே சோடசமா மொன்றுநான்கு
மதிப்போன்ற காளஸ்திரி கோர்வைசொல்வேன் மார்க்கமுடன் கலைரெண்டு தசங்களொன்றே
6914.
ஒன்றான காசியின்றன் கோர்வைசொல்வேன் ஓகோகோ நாதாக்கள் மறைத்தகூத்து
சென்றதொரு கோர்வையது யாதென்றாக்கால் செம்மலுடன் ஒன்றுபத்து நான்குஎட்டு
நன்றான திருக்காஞ்சி கோர்வைசொல்வேன் நலமான பஞ்சம்ரண்டு சத்தம்நாலு
குன்றான கணக்குவகை யின்னஞ்சொல்வேன் குணமுள்ள புலிப்பாணி மன்னாகேளு
6915.
மன்னாகேள் திருவானைக் காவலப்பா மகத்தான ஸ்தலத்தினது கோர்வைசொல்வேன்
நன்னயமாய் யதைச்சார்ந்த தேவஸ்தானம் நலமான ஈறாறு ஸ்தலமேயாகும்
தென்னாடன் கும்பமுனி அகஸ்தியன்தான் தேவதா கிரியுடனே ஸ்தலமுஞ்சொல்வேன்
முன்னேதான் பெரியோர்கள் உரைத்தவண்ணம் முனியான கோயில்வகை கூறுவேனே
6916.
வரையான வகஸ்தியனார் ஸ்தலமொன்றுண்டு வளமான கோர்வையது இன்னஞ்சொல்வேன்
திறையான சத்தமது மூன்றேயாகும் திகழான வட்டமது நான்கேயாகும்
குறையாத நந்தியது கோட்டையப்பா கொற்றவனார் மலயருகே சுற்றியுண்டு
முறையான வகஸ்தியனார் தேவஸ்தானம் முனையான லக்கமிது சொல்லொண்ணாதே
6917.
ஒண்ணாது திருக்கடையூர் தேவஸ்தானம் வுத்தமனே கோர்வையது என்னசொல்வேன்
திண்ணமுடன் கலைநானகு இருமூன்றாறு திகழான மண்டபங்கள் பதினெட்டாகும்
வண்ணமுடன் சீர்காழி தேவஸ்தானம் மகத்தான கோர்வையது என்னசொல்வேன்
தண்ணமுடன் கலைநான்கு பதிகளெட்டு தாக்கான மண்டபமும் பதினாலாமே
6918.
நாலான சேதுபதி தலமுஞ்சொல்வேன் நலமான கோர்வையது என்னசொல்வேன்
காலான வறுபத்து நாலுமாகும் கருவான மண்டபந்தான் முப்பத்திரண்டு
மாலான மகதேவர் எந்தன்நாதர் மார்க்கமுடன் கண்டறிந்த தலமுமாகும்
பாலான மனோன்மணியாள் கடாட்சத்தாலே பாங்கான புதுமை யின்னங்கூறுவேனே
6919.
கூறுவேன் தணிகையது தலமுமாகும் கூரான கோர்வையது என்னசொல்வேன்
ஆறுதலங் கோட்டையது மலைமேலப்பா வப்பனே தசம்ரெண்டு சத்தம்நாலு
வேறுண்டோ வையகத்தில் சொன்னாரில்லை வெட்டவெளி யானதொரு தலமுமில்லை
நாறுண்டோ பூவதுபோல் மணமுமாகி நானிலத்தில் கோடிதலங் கண்டேன்பாரே
6920.
பாரேதான் கோணமது நவகோணந்தான் பாங்கான கும்பமென்ற கோணமப்பா
நேரேதான் தேவதா தலமுமாகும் நெடிதான கோர்வையது என்னசொல்வேன்
கூரேதான் கலையாறு ருசிகையெட்டு குணமான தேவுதா தலமுமாகும்
நீரேதான் வகுத்தறிய யின்னஞ்சொல்வேன் நிஷ்களங்க மாயவர் தலமுமாமே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக