பக்கங்கள்

சனி, 3 ஆகஸ்ட், 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 4901-4910

4901.
கூறவென்றால் சாரனைகள் என்னசொல்வேன் கொப்பெனவே வசிஷ்டமகா ரிஷியார்தாமும்
மாறலுடன் குளிகைக்கு வுறுதிசொல்லி மகத்தான சாரனைகள் மிகவுஞ்செய்து
ஆறவே எந்தனுக்கு வதிதங்கூறி வப்பனே குளிகையிட மார்க்கங்கூறி
சேறவே மகமேரு தன்னிலப்பா தேற்றமுடன் செல்கவென்று வரந்தந்தாரே
4902.
தந்தாரே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் தயவான புலிப்பாணி மைந்தாகேளு
தெந்தமுடன் அடியேனுங் குளிகைகொண்டு துப்புரவாய் மேருகிரி தன்னிற் சென்றேன்
அந்தமுடன் பதிமூன்றாம் வரையிற்சென்று அவ்வரையில் விநாயகரைக் காணவென்று
விந்தையுடன் அடியேனும் மனதுவந்து விருப்பமுடன் குளிகைகொண்டு சென்றேன்தானே
4903.
தானான குளிகைகொண்டு காலாங்கிநாதர் தண்மையுடன் குருதனையே நினைத்துகொண்டு
தேனான பதிமூன்றாம் வரையிற் சென்றேன் தோற்றமுடன் விநாயகரின் சமாதிகாண
கோனான தும்பிக்கை யுடையமாண்பன் கொற்றவனாங் கணபதியா மென்றசித்து
மானான மகதேவ ரென்னுஞ்சித்து மகத்தான சமாதிபதி கண்டிட்டேனே
4904.
கண்டேனே சமாதியிட பக்கந்தன்னில் கருவான சித்துமுனி கோடாகோடி
விண்டதொரு நாதாக்கள் கூட்டந்தன்னை விருப்பமுடன் யான்கண்டு மனதுவந்து
தெண்டமுடன் அடியேனும் முடிகள்சாய்ந்து தேற்றமுடன் பதாம்புயத்தை பணிந்துநின்று
கொண்டனைத்து எந்தனுக்கு விதிகள்கூறி குருவான விநாயகரைக் காண்பிப்பீரே
4905.
காண்பிக்க வேண்டுமென்று அடியேன்தானும் கனமான சித்துகளை வினவும்போது
வீண்பாலா வுந்தனையும் சபிப்பேனென்று வினவுடனே சித்துமுனி கூறும்போது
ஆண்மையுள்ள ரிஷிதேவர் அனைவோருக்கும் வப்பனே ஆதரிக்க வென்றுசொல்லி
கேண்மையுடன் அடியேனுங் காலாங்கிதன்னை கீழ்மையுடன் அடியேனும் நினைந்திட்டேனே
4906.
நினைத்தேனே எந்தனையும் ஆதரித்து நிலையான பதின்மூன்றாம் வரையிற்கொண்டு
கனைபோன்ற விநாயகரின் சமாதிபக்கல் சுத்தமுடன் கொண்டுமல்லோ சித்துதாமும்
தினையளவு குற்றமது நேராமல்தான் தீரமுடன் எந்தனுக்கு வுளவுகூறி
பனையளவாய் வுயரமது குளிகைபூண்டு பார்த்தேனே விநாயகரின் சமாதிகாணே
4907.
காணவே விநாயகரின் சமாதிகண்டேன் கருவான சமாதியது மூடவில்லை
பூணவே யங்குசமும் ஒத்தைக்கொம்பும் புகழான யானைமுகம் தன்னைப்போலே
ஊணவே பூமிதனில் சமாதிபூண்டு உறுதியுடன் இருகரமு மேந்திகொண்டு
காணவே வெகுகால மிருந்தசித்து மகத்தான மூன்றுயுகங் கண்டசித்தே
4908.
சித்தான சித்துமுனி விநாயகன்தான் சிறப்பான மேருகிரி தன்னிலப்பா
முத்தான பதிமூன்றாம் வரையில்தானும் முனையான குளிகையினால் கண்டுவந்தேன்
பத்திதரும் நெடுங்கால மிருந்தசித்து பாருலகில் சாத்திரத்தின் முதலாஞ்சித்து
வெத்திபெறும் விநாயகரின் சித்துதம்மை வேகமுடன் மேருவரை பார்திட்டேனே
4909.
பார்த்தேனே யின்னமொரு மகிமைசொல்வேன் பாங்குடனே பதினான்காம் வரையிற்சென்றேன்
தீர்த்தமுடன் மேருகிரி தன்னிலப்பா திறமான சிவலிங்கப் பதியைக்கண்டேன்
ஆர்த்தியுடன் கோடியே ரிஷிகளப்பா அம்மலையில் சூழ்ந்திருக்க யானுங்கண்டேன்
மூர்த்தியுடன் திருமூர்த்தி சொரூபரோடும் முனையான சிவலிங்கங் கண்டிட்டேனே
4910.
சிவலிங்கங் கண்டேனே யதற்குமேலே திருவான சிவலிங்கம் பதினாயிரத்தெட்டு
தவமுடனே நாதாக்கள் ரிஷிகள்தாமும் தண்மையுடன் சிவலிங்கந் தன்னைநோக்க
பவமகற்றி யர்ச்சனைகள் மிகவுங்கூறி பாங்குடனே நாதாக்கள் இருப்பாரங்கே
குவலயத்தில் மற்றொருவர் காணாமற்றான் கொற்றவனே பதினைந்தாம் வரைசென்றேனே

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 4911-4920

4911.
சென்றேனே புலிப்பாணி மைந்தாகேளு சிறப்பான காலாங்கி கடாட்சந்தன்னில்
குன்றேறி குளிகைதனைக் கொண்டுமல்லோ கொற்றவனே மேருகிரி தன்னிற்சென்றேன்
அன்றுரித்த மான்தோலும் புலித்தோலுமாக வப்பனே வாயிரம்பேர் ரிஷிகள்கண்டேன்
தென்றிசையில் அகஸ்தியனார் முனிவர்போலும் தேற்றமுடன் ஆயிரம்பேர் ரிஷிகண்டேனே
4912.
கண்டேனே பதினைந்தாம் வரையிலப்பா கயிலாச நாதருட சீஷவர்க்கம்
பண்டுபோல் மேனியது ஜோதிமின்ன பாங்குடனே தேவரிஷி வாயிரம்பேர்
கொண்டல்லோ பாரிஜாத புட்பந்தன்னை கொம்பனையாள் மனோன்மணியாள் தன்றனக்கு
தொண்டுடனே யர்ச்சனைகள் மிகவுங்கூறி தோறாமல் யாகமது செய்வார்பாரே
4913.
பாரேதான் யாகமது செய்துகொண்டு பாங்குடனே சித்துமுனி இருக்கும்போது
நேரேதான் பதினைந்தாம் வரையில்யானும் கெடிதான குளிகைகொண்டு செல்லும்போது
தீரேதான் ஆயிரம்பேர் சித்துதாமும் தீர்க்கமுடன் எந்தனையும் கண்டுமல்லோ
சேரேதான் எந்தனது பக்கல்வந்து சிறப்புடனே யாரென்று கேட்டிட்டாரே
4914.
கேட்டவுடன் அடியேனும் காலாங்கிதம்மை கிருபையுடன் யென்மனதில் எண்ணங்கொண்டு
வாட்டமுடன் அவர்பாத சீஷனென்றேன் வளமையுடன் எந்தனுக்கு யிதவுகூறி
நீட்டமுடன் பதினைந்தாம் வரையில்தானும் நீதிதப்பி வந்ததினால் உந்தமக்கு
தாட்டிகமாய் சாபமது வந்துசேரும் தயவுள்ள பாலகனே என்றிட்டாரே
4915.
என்றுமே கூறலுமே யடியேன்தானும் எழிலான காலாங்கி கடாட்சத்தாலே
குன்றுமே சாபமதை நிவர்த்திசெய்து குளிகைகொண்டு ரிஷியாரை யானுங்கண்டு
வென்றிடவே எந்தனையும் ஆதரித்து வேகமுடன் கோபமதை நிவர்த்திசெய்து
தென்றிசையில் கும்பமுனி தன்னைப்போலே தேற்றமுடன் எந்தனையும் ஆட்கொள்வீரே
4916.
கொள்ளவே யடியேனும் மனதுவந்து கோடியுகம் தவஞ்செய்யும் ரிஷியார்தம்மை
மெள்ளவே யடியேனும் தாள்பணிந்து வேதாந்ததாயி மனோன்மணியாள் தன்னை 
தெள்ளமுர்த மானதொரு ஜோதிபீடம் தேற்றமுடன் அடியேனும் தான்பணிந்து
உள்ளபடி எந்தனுக்கு தெரிசனத்தை வுத்தமரே காட்டவென்று பணிந்திட்டேனே
4917.
பணிந்துமே நிற்கையிலே சித்தர்தாமும் பான்மையுடன் பதினைந்தாம் வரையின்மேலே
துணிவுடனே யடியேனைத் தாமழைத்து துப்புறவாய் மனோன்மணியாள் பீடந்தன்னை
கணிதமுடன் எந்தனுக்குக் காண்பித்தல்லோ கைலாச மனோன்மணியாள் ரூபந்தன்னை
துணிந்திடவே கண்டவர்கள் யாருமில்லை துப்புரவாய் ஜோதிமயங் காணலாச்சே
4918.
ஆச்சப்பா வையகத்தில் வெகுகோடிசித்து அம்தகையாள் மனோன்மணியைக் கண்டதில்லை
மூச்சடங்கி சென்றதொரு நெடுங்காலசித்து மூதுலகில் யாரேனுங் கண்டதில்லை
பாச்சலுடன் மனோன்மணியாள் சொரூபவொளி கண்டசித்து அனந்தசித்து கோடியுண்டே
4919.
கோடான கோடியும் நாலுயுகமப்பா குவலயத்தில் மனோன்மணியைக் கண்டதில்லை
நாடாண்மை தனில்வாழும் ரிஷிகள்தேவர் நலமான சித்துமுனி நாதர்தாமும்
காடாண்மை கொண்டதொரு மனோன்மணியாள்ரூபம் தாரணியில் யாவருந்தான் கண்டதில்லை
பாடாண்மை கொண்டதொரு ஜோதிமயந்தன்னை பாருலகில் கண்டவர்கள் கோடிபேரே
4920.
பேரான திருக்கமலம் வீற்றிருக்கும் பெருமையுள்ள மனோன்மணியாள் பீடந்தன்னை
கீரான சித்துமுனி நாதர்தாமும் சிறப்புடனே பாடிவைத்தார் பலநூல்தன்னில்
நேரான சாத்திரத்தின் வுளவுகண்டோர் நேர்மையுடன் சின்மயத்தை மனதிலுன்னி
ஆரான பீடமென்ற ஆராதாரம் வப்பனே யொடுங்கிநின்ற சமாதிதானே

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 4921-4930

4921.
தானான சமாதிநிலை நின்றுகொண்டு தன்மையுள்ள ஓங்காரந் தன்னைநோக்கி
கோனான குருபதத்தை மேலேயுன்னி கும்பகத்தை மேல்நோக்கி பதியமர்ந்து
தேனான மனோன்மணியைக் காணவல்லோ தேசத்தில் வெகுமாண்பர் சிவயோகிதானும்
பானான பராபரத்தை தியானித்தேதான் பான்மையுடன் நெடுங்காலம் தவம்செய்வாரே
4922.
செய்தாலும் மனோன்மணியைக் காண்பதில்லை தேசமதில் நாலுயுகங் கடந்தாலென்ன
வையகங்கள் தான்முழுதும் அழிந்திட்டாலும் புகழுஞ்சித்தர் புகழானஜோதிமயங் காண்பதல்லால்
மெய்யான ரூபமதைக் காண்பதேது வேதாந்த நூல்களிலுஞ் சொன்னார்தாமே
4923.
சொன்னாரே சித்துமுனி ரிஷியார்தானும் துப்புரவாய் எந்தனுக்கு சொன்னார்கோடி
தென்னான கும்பமுனி கூறும்நூலில் தோற்றமுடன் உபதேசம் சொன்னார்போலும்
நன்னயமாய் எந்தனுக்கு வேதங்கூறி நாதாந்த காலாங்கி பெயரைமாறி
உன்னிதமாய் உபதேசஞ் செய்துமல்லோ உவமையுடன் விடையெனக்கு தந்திட்டாரே
4924.
தந்தாரே ஜோதிமயந் தன்னைக்கண்டு தன்மையுடன் கிரிதனிலே விடையும்பெற்று
அந்தமுடன் பதினாறாம் வரையிற்காண வன்புடனே குளிகையது பூண்டுகொண்டு
சொந்தமுள்ள காலாங்கி நாதர்தம்மை சுந்தரனார் பதாம்புயத்தை மனதிலுன்னி
இந்தவரை விட்டுமல்லோ மேலேயப்பா எழிலான கிரிபோக வெண்ணினேனே
4925.
எண்ணினேன் பதினாறாம் வரையைக்காண யெழிலான மேருகிரி தன்னில்யானும்
குண்ணான மலையதுவும் குகைகள்தாண்டி கொற்றவனே சுனையதுவும் கடந்துமேதான்
தண்னான கிரிவளத்தைக் காணவென்று தாக்குடனே குளிகையது பூண்டுகொண்டு
கண்ணான காலாங்கி நாதர்தம்மை கருத்திலே மனதுவந்து நடந்திட்டேனே
4926.
நடந்தேனே இமயகிரி தன்னிலப்பா நலமான மேருகிரி சாரலோரம்
கடந்தேனே பதினாறாம் வரையில்தானும் கருவான சுனையுண்டு தடாகமுண்டு
அடந்ததொரு சுனையருகே சுரங்கமுண்டு அதன்புறத்தே யிருளடைந்த சோலையுண்டு
தொடர்ந்ததொரு சித்துமுனி நாதர்கூட்டம் தோறாத சீஷவர்க்க மனேகமுண்டே
4927.
உண்டான மலைதனிலே கோடிசேனை உலகமதில் மெத்தவுண்டு சொல்லொண்ணாது
அண்டர்முனி ராட்சதர்கள் இருக்கும்நாடு அடைவான நாளதனில் அதிசயத்தை
கண்டதொரு காரியங்கள் என்னவென்றால் கடிதான வதிசயத்தை என்னசொல்வேன்
தொண்டனைப்போல் அடியேனும் குளிகைபூண்டு துப்புரவாய் வெகுகால மிருந்திட்டேனே
4928.
இருந்தேனே கானகத்தின் வழியில்தானும் எழிலான குகையோரம் தன்னில்நின்றேன்
குருந்தமரந் தன்னருகே சித்துதாமும் கொப்பெனவே சீஷவர்க்கம் தன்னிற்சேர்ந்து
பொருந்தவே நெடுங்காலந் தவமிருந்து பொங்கமுடன் சுனையோரம் சாரல்தன்னில்
விருந்தமுர்த மானதொரு பசளைதன்னை விருப்பமுடன் சித்துமுனியும் பார்த்தாரே
4929.
தானான கறுப்பசளை யுண்டபோது தகமையுள்ள சித்துமுனி ரிஷியார்தாமும்
கோனான குருசொன்ன மூலிதன்னை கூறான சித்துமுனி நாதர்தாமும்
பானான மூலிதன்னை அந்திசந்தி பாகமுடன் தானருந்தி வருங்காலத்தில்
மானான மூலியது முனிவருக்கு மகத்தான இலையதுவும் பதினாரெட்டே
4930.
எட்டான மூலிதனை சித்துதாமும் எழிலான அந்திசந்தி காயகற்பம்
திட்டமுடன் சதாகாலங் கொள்ளும்போது திரமான மூலியது ஒருநாள்தன்னில்
பட்டமரந் தனிலல்லோ தழைகள்மென்று பாங்குடனே தானிருக்கும் வண்மைதன்னை
தொட்டவர்கள் யாரென்று சித்துதாமும் தோற்றமுடன் வுள்ளமதில் எண்ணிட்டாரே

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 4931-4940

4931.
எண்ணியே நாதாந்த சித்துதாமும் யெழிலான மூலியது சென்றபேர்க்கு
கண்ணமுடன் ஞானமென்ற குளிகைதன்னால் தகமையுடன் தான்பார்க்கும் வேளைதன்னில்
வண்ணமுடன் கரும்பசுவும் மலையோரத்தில் மார்க்கமுடன் தினந்தோறும் மேய்ந்துமல்லோ
புண்ணியனார் சித்துமுனி வைத்தமூலி புகழான காயாதி கற்பந்தின்னலாச்சே
4932.
தின்னவே காயாதி கற்பமூலி தீரமுடன் எந்தனுக்கு வாய்த்ததாலே
மன்னவனார் தேவாதி சித்துதாமும் மார்க்கமுடன் விட்டகுறை இருந்ததாலே
பன்னவே காயாதி கற்பமூலி பாங்குடனே வாய்த்துதென்று மனதிலுன்னி
தென்பொதிகைத் தனிலமைந்த கதையைப்போலும் தேவனது கடாட்சமதால் வாய்க்கலாச்சே
4933.
ஆச்சென்று கரும்பசுவும் மனதிலெண்ணி ஆண்மைகொண்டு இருக்குமந்த காலந்தன்னில்
மூச்சடங்கி தானிருக்கும் மாயாசித்து முனையான கரும்பசுவைத் தன்னைப்பார்த்து
மாச்சலென்ற சினமதுவு மதிகமாகி மகத்தான சாபமது கொடுத்தபோது
கூச்சலுடன் கரும்பசுவும் மண்ணில்வீழ்ந்து கொப்பெனவே யலறியல்லோ விழுகலாச்சே
4934.
விழுந்துமே காராவும் கதறும்போது விருப்பமுடன் கன்றதுவும் ஓடிவந்து
அழுதுமே காராவைத் தான்முகந்து அலறியே பசளையென்ற மூலிதன்னை 
தொழுதுமே சித்துமுனி பாதந்தன்னில் துப்புறவாய் வாய்தனிலே யூட்டும்போது
பழுதுபடா சித்துமுனி மனதுவந்து பான்மையுடன் விசனமது கொண்டிட்டாரே
4935.
கொண்டுமே மனக்கவலை யதிகமாகி குவலயத்தில் பசுதனையே கொன்றதாலே
விண்டுமே பாவமது நேரலாச்சு வீண்பழிக்கு ஆளானோம் விண்ணிலப்பா
துண்டரிக மானதொரு கோபத்தாலே துப்புறவாய் விசனமது வதிகமாகி
பண்டுளவு மாலையணி கிருஷ்ணபூபன் பட்சமுடன் தான்வளர்த்த கோவுமாமே
4936.
தேதான ரத்னகிரி மலையிலப்பா கொப்பெனவே நாதாக்கள் கண்டதுண்டு
ஆவலுடன் தாயுடனே கன்றுமாக ஆண்மையுடன் கிரிதனையே சுற்றிமேய்ந்து
பாவமது நேராமல் நாதர்கட்கு பான்மையுடன் தானடக்கும் கோவுமல்லோ
சாவதுவும் நேர்ந்ததொரு துன்தையாலே சாங்கமுடன் சித்துமுனி புலம்பிட்டாரே
4937.
புலம்பியே மனந்தேறி சித்துதாமும் புகழான காராவின் பசுவுக்கல்லோ
நலம்பெறவே சாபமதை நிவர்த்திசெய்து நன்மையுடன் காரா கன்றுக்கேதான்
ஜலமதுவும் குகைதனையே தானுங்கண்டு சட்டமுடன் இருப்பதற்கு புலமுங்கண்டு
வலம்பெரிய கானகத்தில் நெடுங்காலந்தான் வளமையுடன் வாழ்கவென்று வரந்தந்தாரே
4938.
தந்தாரே பதினாறாம் வரையிலப்பா தன்மையுடன் காராவின் கன்றுதானும்
சொந்தமுடன் அவ்வரையி லிருக்கக்கண்டேன் சுந்தரனே புலிப்பாணி மைந்தாகேளு
விந்தையுள்ள காதைதனை வையகத்தில் விட்டகுறை இருந்தவர்க்கு யெய்துமென்று
அந்தமுடன் என்மனதில் எண்ணியல்லோ வப்பனே குளிகைகொண்டு பறந்திட்டேனே
4939.
பறந்தேனே இன்னமொரு மார்க்கஞ்சொல்வேன் பாங்கான புலிப்பாணி மைந்தாகேளு
இறந்ததொரு காராவின் பசுவின்காதை எழிலாக குளிகைகொண்டு வறிந்தமட்டும்
துறந்தேனே சொல்லிவிட்டேன் உண்மையாக துப்புரவாய் பதினேழாம் வரையில்சென்றேன்
சிறந்ததொரு வதிசயங்கள் சொல்வேனப்பா துப்புரவாய் மனதுவந்து கேட்பீர்தானே
4940.
தானான மேருகிரி தன்னிலப்பா தாக்கான விஷ்ணுவின் சமாதிதன்னை
கோனான என்குருவாங் காலாங்கிநாதர் கொற்றவனார் சொரூபரது கடாட்சத்தாலே
கேனான மலைமேலே சென்றேனங்கே தேற்றமுடன் பதினேழாம் வரையிற்கிட்டி
மானான மகதேவர் கடாட்சத்தாலே மார்க்கமுடன் குளிகைகொண்டு நின்றிட்டேனே

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 4941-4950

4941.
நின்றேனே பதினேழாம் வரையிலப்பா நீதியுள்ள சித்துமுனி கோடாகோடி
குன்றினிலே எந்தனையுங் கண்டுமல்லோ கொப்பெனவே யாரென்று வினவிக்கேட்க
வென்றிடவே யடியேனும் பயந்தொடுங்கி விருப்பமுடன் பதாம்புயத்தை பணிந்துநின்று
சென்றேனே மகாவிஷ்ணு சமாதிதன்னை சேர்வையெனக் கருள்தருக வென்றேன்தானே
4942.
தானான பதாம்புயத்தை பணிந்துகேட்க தகமையுடன் சொரூபமுனி சித்துதாமும்
மானான மகாவிஷ்ணு தன்னைக்காண மானிலத்தி லாராலும் ஆகுமோசொல்
கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் நெடுங்காலங் கார்த்திருந்தார்
பானான பதாம்புயத்தைக் காணுதற்கு பாருலகில் யாராலும் முடியாதென்றே
4943.
முடியாத மகத்துவங்கள் உந்தமக்கு மூதுலகில் கிட்டாது யாருக்கென்று
அடியார்கள் சிவகூட்ட மாண்பரோடும் அம்மலையில் நெடுங்காலம் கார்த்திருந்தார்
படிதோறும் நாதாக்கள் காவலுண்டு பதாம்புயத்தைக் காணுதற்கு முடியாமற்றான்
கெடியான மேருகிரி தன்னைநீக்கி கெவனமுடன் குளிகைகொண்டு இறங்கினாரே
4944.
இறங்கினார் என்றல்லோ எந்தனுக்கு எழிலான சித்துமுனி ரிஷியார்தாமும்
உறமுடைய வார்த்தையது கூறும்போது ஓகோகோ நாதாக்கள் காண்பியார்கள்
திறமுடைய எந்தனது வலுமையாலே தீர்க்கமுடன் அடியேனுங் குளிகைகொண்டு
சிறகுடைய பட்சியது போலேயானும் சீறுடனே மேல்வரையிற் சென்றேன்பாரே
4945.
பாரேதான் மகாவிஷ்ணு சமாதிபக்கம் பட்சமுடன் அடியேனுஞ் சென்றுவந்து
நேரேதான் சமாதியது மேலேநோக்கி நிட்களங்க மானதொரு சொரூபர்தம்மை
தீரேதான் திரிகர்ண சொரூபமூர்த்தி திகழுடனே எந்தனுக்கு இதவுகூறி
வேரேதான் கதியெனக்கு என்னவென்று விட்டகுறை இருந்ததினால் வந்திட்டேனே
4946.
வந்தேனே எந்தனுக்கு சொரூபநாதர் வரமுடனே காட்சியது தருகவென்று
நொந்துமனந் தானுருகி தாள்பணிந்து நொடிக்குள்ளே சிரங்குனிந்து பணிந்தபோது
அந்தமுடன் மகதேவர் விஷ்ணுதாமும் அங்ஙனவே யசரீரி வாக்குகூற
மந்தமுடன் அடியேனுங் கால்நடுங்கி பட்சமுடன் உபதேசங் கேட்டிட்டேனே
4947.
கேட்டேனே மகதேவர் மனமிறங்கி கிருபையுடன் என்மீதில் மனதுவந்து
நாட்டமுடன் அசரீரி வாக்காலப்பா நயமுடனே எந்தனுக்கு வேகங்கூறி
நீட்டமுடன் காலாங்கி நாதசீஷர் நீதியுடன் நெடுங்காலங் குளிகைபூண்டு
தாட்டிகமாய் வையகத்தில் இருந்தாயப்பா தண்மையுள்ள குளிகையது வலுமைகாணே
4948.
காணவே இமயகிரி தன்னிலப்பா கருவான சித்தர்களும் முனிவருண்டு
பூணவே நாதாக்கள் வலுமையுண்டு புகழான மேருகிரி தன்னிலப்பா
ஆணவங்கள் கொண்டல்லோ குளிகைபூண்டு யவனியெலாம் சுற்றிவந்தாய் மகிமையாலே
வேணதொரு தேசாதி தேசமெலாம் வேகமுடன் மலைநதிகள் வென்றிட்டாயே
4949.
வென்றுமே நெடுங்காலந் தானிருந்து வேகமுடன் சீனபதிக் கேகியல்லோ
சென்றுமே சீனபதி மாண்பருக்கு செயலான மகிமையெல்லா மனைத்துங்கூறி
குன்றான மேருகிரி தன்னிலப்பா கொற்றவனே குளிகைகொண்டு வந்தாய்நீயும்
இன்றுநீ வந்ததினால் உந்தனுக்கு எழிலான வுபதேசங் கூறுவேனே
4950.
கூறுவேன் எந்தமக்கு என்றுவல்லோ குவலயத்தில் சித்தர்முனி காணாவண்ணம்
மாறுபட சித்துமுனி யுளவுகூறி மார்க்கமுடன் கையெனக்கு விடையுங்கூறி
தேறுதலாய் ஞானோப தேசஞ்சொல்லி தெளிவுறவே பதினெட்டாம் வரையிற்செல்ல
ஆறுதலஞ் சிகாரம்வரை முடியைக்காண வன்புடனே எந்தனுக்கு வருள்தந்தாரே

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 4951-4960

4951.
அருளான விடையதுவும் பெற்றுமேதான் வன்பான குளிகையது யானும்பூண்டு
இருளான மலைதனிலே யான்கடந்து எழிலான பதினெட்டாம் வரையிற் சென்றேன்
மருளான மார்க்கண்டர் தன்னைக்காண மார்க்கமுடன் குளிகையது பூண்டுகொண்டு
பொருளான மேருகிரி யடியேன்தானும் பொங்கமுடன் பதினெட்டாம் வரைசென்றேனே
4952.
வரையான மார்கண்டன் சமாதிகாண வளமுடனே யடியேனும் சென்றபோது
திரைகடலுஞ் சத்தசாகரமுங் கடந்து திறளான மனுகோடி முனிவரெல்லாம்
நரையகற்றி காயாதி கொண்டுமல்லோ நவகோடி ரிஷியாரும் முனிவர்தானும்
வரைகோடி லக்கில்லை கணக்கோயில்லை வளமான பதினெட்டாம் வரையிற்றானே
4953.
வரையான சமாதியது வனேகங்கண்டேன் வளமான மார்கண்டன் லிங்கந்தன்னை
நிரையான நாளொன்று பூசைமார்க்கம் நீதியுடன் ஆயிரமாஞ் சொச்சந்தன்னை
கரையான லிங்கமகா பூசை கருவாக மார்க்கண்டன் செய்யும்மார்க்கம்
திரைகடலுங் கொள்ளாது வேதயாகந் திரளாழி லிங்கமதை கண்டிட்டேனே
4954.
கண்டேனே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் கருவான புலிப்பாணி மைந்தாகேளு
கொண்டேனே காலாங்கி கிருபையாலே கோடியுகம் தானிருக்க குளிகைபெற்றேன்
துண்டரிக மாகவல்லோ குளிகைபூண்டு துப்புரவாய் பதினெட்டு ஒன்றிற்சென்றேன்
சண்டமாருதம் போல மேருதன்னில் சாங்கமுடன் குளிகையிட்டு யேறினேனே
4955.
ஏறினேன் பத்துஒன்பது வரையிற்சென்றேன் எழிலான குளிகைபோற்ற சித்தருண்டு
மாறினேன் மகாதேவர் சித்துபக்கம் மகத்தான வஞ்சலிகள் யானுஞ்செய்து
கூறினேன் பதாம்புயத்தை வணங்கியானும் கொற்றவனே முடிதாழ்ந்து வடிபணிந்தேன்
சீறியே என்மீதிற் கோபம்விட்டு சிறப்புடனே எந்தனை யாரென்றிட்டாரே
4956.
என்றாரே சித்துமுனி கூறும்போது எழிலான காலாங்கி நாதர்தம்மை
குன்றான மலைமீதிற் நின்றுகொண்டு கொற்றவரே சீனபதி யென்றேன்யானும்
சென்றிடவே என்மீதிற் பட்சம்வைத்து சிறப்புடனே யெந்தனுக்கு இதவுகூறி
நின்றதொரு எந்தனுக்கு வாதினங்கள் நிட்களங்க மாகவல்லோ கொடுத்தார்தானே
4957.
கொடுத்தவுடன் அடியேனும் முடிவணங்கி கொப்பெனவே பத்துவொன்பதியில் வந்தேன்
அடுத்ததொரு நூலிருக்குஞ் சமாதிதன்னை யன்புடனே யான்பார்க்க வேண்டுமென்றேன்
கொடுத்ததொரு காவியங்கள் ஆயுர்வேதம் தோறாமல் சமாதியது மலைபோற்கண்டேன்
படுத்ததொரு தென்பக்கம் மேருதன்னில் பாங்கான சமஸ்கிருத நூல்கண்டேனே
4958.
கண்டேனே மேருகிரி தன்னிலப்பா கருவான வடபாகம் நூல்கள்சொல்வேன்
விண்டதொரு நூலெல்லாம் வடமொழியேயாகும் வீரான சாத்திரங்கள் மலைபோல் கண்டேன்
அண்டமுடன் மேருகிரி தன்னிலப்பா வழகான கிழக்குமுகம் நூல்கள்சொல்வேன்
சண்டமாருதம் போல நூல்கள்தானும் சார்பாக கீர்வாணம் என்னலாமே
4959.
என்னலாம் மேருகிரி தன்னிலப்பா எழிலான மேற்குமுகஞ் சமாதிகண்டேன்
துன்னவே சாத்திரங்கள் மலைபோல்கண்டேன் துப்புரவாய் படிப்பதற்கு நாளுமில்லை
சொன்னதொரு பரிபாஷை நூல்களப்பா தோறாமல் மேருகிரி தன்னிற்சென்றேன்
பன்னவே பலபேருங் கூடிசொன்ன பாரினிலே சாத்திரங்கள் அனேகந்தானே
4960.
தானான சாத்திரங்கள் மேருதன்னில் தண்மையுடன் நாலுமுகஞ் சமாதிகண்டேன்
கோனான குருநூலும் பெருநூலுமாக கொற்றவனே மலைபோலே சமாதிகண்டேன்
பானான மூன்றுயுகப் பிரளயங்கள் பாங்குடனே வந்தநெடுங் காலந்தன்னில்
தேனான சாத்திரத்தை மேருதன்னில் தேற்றமுடன் சமாதிதனில் வைத்திட்டாரே