5141.
நீதியா யின்னமொரு மார்க்கம்பாரு நிலையான கருமான மொன்றுசொல்வேன்
சோதியே சுடரான மணிவிளக்கே தோற்றமுடன் யாமுனக்கு வுரைப்பேன்பாராய்
ஆதியாம் கற்பூர மணிவிளக்கை யப்பனே ஜாலமென்ற மணிதான்சொல்வேன்
சாதியினி லுயர்ந்ததொரு பூரமப்பா தண்மையுள்ள பூரமது ஆலாத்தியாமே
5142.
ஆமேதான் ஆலாத்தி கற்பூரத்தை அடைவுடனே தானெரிக்க வண்மைசொல்வேன்
நாமேதான் சொன்னபடி மச்சுமாளி நலமாக மாளிகையின் நடுமையத்தில்
போமேதான் குடவிளக்கு தன்னையப்பா பொங்கமுடன் பத்தடியாந் தூரந்தன்னில்
வேமேதான் வீண்போகா வண்ணமப்பா விருப்பமுடன் பதிதனையே வைக்கக்கேளே
5143.
கேளப்பா புலிப்பாணி மைந்தாகேளு கிருபையுள்ள யெந்தனிரு கண்ணேயப்பா
பாளப்பா போகாமல் புத்திமானே பாங்கான காலமொன்று செய்வாயப்பா
நீளப்பா பதிமுகத்தி லிருந்துகொண்டு நீதியுடன் காந்தியது பூசைமார்க்கம்
வேளப்பா நோயாளி முன்னதாக வேள்வியுடன் வோமமது செய்திடாயே
5144.
செய்யவே நோயாளி படிநிதானம் கீர்த்தியுடன் யாககுண்டம் வளர்த்தும்போது
பையவே பூசைமுகம் கற்பூராத்தி பாங்குடனே ஜாலமது செய்யக்கேளு
துய்யநல்ல தீமுறுகல் பாஷாணத்தை துப்புறவாய் ஜலமதனில் வைத்துக்கொண்டு
மெய்யுடனே ஜலமதனைக் கையிற்றோய்த்து மேன்மையுடன் பாஷாணம் பதனங்கொள்ளே
5145.
கொள்ளவே தீமுறுகல் பாஷாணத்தை கொப்பெனவே வெண்ணீரில் தான்கலந்து
விள்ளவே ஓம்நமசி யென்றுவோதி மிக்கவே கற்பூர மேலிற்போடு
துள்ளவே சீஷனுக்குக் கூறும்வார்த்தை துடியான கற்பூரம் விளக்கில்லாமல்
அள்ளவே குதிகொண்டு தீபம்போலே வாத்தாளே எறியவென்று வபயஞ்சொல்லே
5146.
சொல்லவே கற்பூரம் விளக்கில்லாமல் துப்புறவாய் ஜோதியுடன் எறியும்பாரு
வெல்லவே தீபமது தூரநிற்க வேதாந்தத் தாயினது கடாட்சத்தாலே
மெல்லவே எறிந்தவண்ணந் தன்னைப்பார்த்து மேதினியில் மாந்தரெல்லாம் மெய்நடுங்கி
கொல்லவே வந்ததொரு பூதந்தானும் கொப்பெனவே கற்பூர மெறியலாச்சே
5147.
ஆச்சப்பா ஜாலமென்ற தந்திரவேதை வதரணங்கள் தன்னாலே எறியலாச்சு
மூச்சொடுங்கிப் போயிருந்த பூரந்தானும் முனையான கொழுந்துவிட்டு எறியும்வண்ணம்
பாச்சலுடன் மாண்பர்களுங் கண்டுமல்லோ பாங்குடனே யதுபுதுமை காலமென்பார்
ஆச்சரிய மானதொரு வித்தைதானும் அவனியிலே யாரறிவார் புத்திமானே
5148.
புத்தியுள்ள புலிப்பாணி மைந்தாகேளு பனிதமுட னுந்தமக்கு யின்னஞ்சொல்வேன்
சத்தியமாய் கருமான மின்னவென்று சட்டமுடன் யானுரைப்பேன் மைந்தாகேளு
வெற்றிபெற மாண்பர்களில் ஆயிரம்பேர் வேடிக்கை சிமிட்டுவித்தை வினோதம்பாரு
தத்துவமாய் சபையோர்கள் முன்னதாக சார்புடனே கரங்குவித்து நிற்பார்பாரே
5149.
பாரேதான் சபையோர்கள் பார்த்திருக்க பண்பாகக் கேணிதனி லிறங்கிமுன்னே
நேரேதான் எரிகாலன் பாலையப்பா நேர்மையுடன் கரந்தனிலே குழப்பிக்கொண்டு
சீரேதான் மறவிடமாய் நின்றுகொண்டு சிறப்புடனே வெண்ணீர்போல் குழைத்துப்போடு
சீரான பாலதுவும் மாண்பருக்கு நிறமான வெந்நீர்போல் தோற்றுநன்றே
5150.
அன்றான வெண்ணீரைப் பூசிக்கொண்டு வன்பான கேணிதனில் வந்துநின்று
குன்றான பருவதம்போல் கோடிமாண்பர் கொற்றவர்கள் திருமுகத்தைத் தானும்பார்த்து
வென்றிடவே யேகாந்தி நிஷ்களம்போல் விருப்பமுடன் ஜலமதனில் மூழ்கியேதான்
சென்றுமே ஜலத்தைவிட்டுக் கேணியேறி சிறப்புடனே சூரியனில் நிற்பாய்தானே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக