5181.
வந்திட்டோ மென்றல்லோ மையலாகி மகத்தான சன்னதங்கள் அதிகங்கொண்டு
குன்றான புருஷனையும் மிகவேநோக்கி குடிதனக்கு வனர்த்தங்கள் நேர்ந்துதென்று
இன்றுமே எந்தனுக்கு இந்தபூசை எழிலான பூசையது யேர்வையில்லை
கன்றுதான் பூசையது பரியேகொண்டு காணிக்கை வைத்தாலே யேர்வையாமே
5182.
ஏர்வையாம் வையகத்துப் பெண்களெல்லாம் எழிலான புருஷனையும் தூஷணிப்பார்
சேர்வையாம் சீனபதிப் பெண்களெல்லாம் சிறப்புடனே புருஷனையும் போற்றுவார்கள்
பார்வையாங் குளிகையது கொண்டுமல்லோ பாருலகம் ஏழுகடலுஞ் சுத்திவந்தேன்
நேர்மையாஞ் சீனபதிப் பெண்களுக்கு நெறிமுறைகள் தத்துவங்கள் மிகவுண்டாமே
5183.
உண்டான தெய்வமது யாதுமில்லை வுத்தமனே கடவுளன்றி வேரொன்றில்லை
பாண்டான பொய்கொலைகள் களவுமில்லை பாங்கான கர்மமது வொன்றேயுண்டு
திண்டான விசுவாச யருளுமுண்டு திறளான பாவமது யில்லையப்பா
கண்டேனே சீனபதி மார்க்கத்தோரை காசினியில் காலாங்கி கடாட்சந்தானே
5184.
தானான காலாங்கி கடாட்சத்தாலும் தாக்கான மனோன்மணியாள் கிருபையாலும்
மானான நாலுயுகங் கடந்துவந்தேன் மகத்தான வையகத்தில் எல்லாருந்தான்
கோனான சீனபதி பெண்கள்நீக்கி குவலயத்தில் எல்லாரும் இருந்தமார்க்கம்
வேனான வெட்டவெளி மயக்கத்தாலே விருதாவாய் மாண்பரெல்லாம் மயங்கினாரே
5185.
மயங்கவே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் மகத்தான புலிப்பாணி மைந்தாகேளு
தயங்கவே தந்திரமாஞ் ஜாலஞ்செய்வேன் தாக்கான மானிடர்கள் பிழைக்கவென்று
புயங்கமுடன் நோயாளி சாந்தியப்பா புகழாக பிணிகொண்ட மாண்பருக்கு
ஜெயம்பெறவே சாந்தியது சொல்வேனப்பா செய்கின்ற மார்க்கமது பண்பாய்க்கேளே
5186.
பண்பான நோய்கொண்ட பிணியாளர்க்குப் பாகமது சொல்லுகிறேன் பாண்மையாக
திண்ணமுடன் மச்சென்ற மாளியப்பா திறமுடனே கிழக்குமுக மாகவல்லோ
நன்மையுடன் கொலுக்கூடம் ஒன்றமைத்து நாதாந்தக் கூடமது யேகவட்டம்
வண்மையுடன் சோடச தூணிறுத்தி வாகுபெற சின்மயத்தின் பூசைசெய்யே
5187.
செய்யவே மயானத்தின் பூசையப்பா செப்புகிறேன் வருமை மைந்தாகேளு
உய்யவே கும்பமென்ற கலசமப்பா வுத்தமனே நடுமையம் தன்னில்வைத்து
பையவே நவகோண வாசல்விட்டு வாகமுடன் கலசமென்ற பாண்டமப்பா
மெய்யுடனே தானியமா மொன்பதாகும் மேன்மையுடன் கலசமதில் கீழேவையே
5188.
கீழான கலசமது தன்னிலப்பா கிருபையுடன் தானியங்கள் வைத்தபின்பு
தாழான குடுவைக்கு நூலைச்சுற்று தகமைபெற சூச்சதுதான் நாலதாகும்
தீதான சரணமது வொன்றேயாகும் நீதியுடன் நடுமையம் தன்னில்வைத்து
சாழான தேங்காயை அதின்மேலப்பா சட்டமுடன் வைத்தல்லோ மஞ்சள்பூசே
5189.
பூசியே குங்குமமுந் தானணிந்து புகழான மாயிலையும் புட்பஞ்சாத்தி
ஆசியே அவலுடனே கடலையப்பா வன்பாக முக்கனியுங் கொண்டுபோற்று
வாசியென்ற பிரணவத்தை மனதில்மாறி மகதேவா யெந்தனையுங் காருமென்று
தேசியென்னும் பழமதுவே கீறியப்பா திக்கெட்டும் போட்டுமல்லோ செப்பக்கேளே
5190.
செப்பவென்றால் வஸ்துமுதல் மதுபானங்கள் செம்மலுடன் பலகார வர்க்கமெல்லாம்
ஒப்பமுடன் தானமைத்து புண்ணியவானே ஓகோகோ நாதாக்கள் செய்யும்வண்ணம்
தப்பிதங்கள் நேராமல் மன்னாகேளு தண்மையுடன் சோடசமாம் பூசைமார்க்கம்
செப்பமுடன் தானமைத்து நீதிவானே நிட்களங்க மாகவல்லோ நேமிப்பாயே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக