பக்கங்கள்

சனி, 3 ஆகஸ்ட், 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 4961-4970

4961.
வைத்தாரே மேருகிரி தன்னிலப்பா வண்மையுடன் பிரளயங்கள் நேர்ந்தபோது
கைத்தவமாய் அவரவர்கள் செய்தநூலின் காசினியில் மலையோரம் பிரளயத்தில்
மெய்த்தெனவே திருப்பாலின் கடலினோரம் மேதினியில் ஒதுங்கி மிதந்துமல்லோ
சத்தசாகரந் தனிலே சிலதுநூல்கள் சாங்கமுடன் கலியுகத்தில் கண்டார்தாமே
4962.
கண்டாரே கலியுகத்து மாண்பரெல்லாம் கருவான சாத்திரத்தைக் காணவில்லை
தொண்டுமிக வடியேனுஞ் செய்துமல்லோ துப்புரவாய் காலாங்கி கடாட்சத்தாலே
சண்டையிட்டு குளிகையது பெற்றுமேதான் சதுரான மேருகிரி தன்னிற்சென்று
விண்டிடவே போகரேழாயிரத்தை விருப்பமுடன் மனதுவந்து கொண்டிட்டேனே
4963.
கொண்டேனே போகரேழா யிரந்தான் குருவான வகஸ்தியனார் காவியந்தான்
சண்டமாருதம் பன்னீரா யிரந்தான் சட்டமுடன் பணிநாலாயிர முந்தானும்
பண்டான சதுர்காண்டம் நாலாயிரந்தான் பாங்கான கரும மென்ற
காண்டந்தானும் விண்டான பன்னீராயிரந்தானப்பா வுத்தமனே நாடிபன்னிரா யிரந்தானே
4964.
நாடியாஞ் சுகர்பன்னீ ராயிரந்தான் நலமான பூசிபன்னீராயிரந்தான் தேடியுங்காணாத
கருமகாண்டம் தெரிவாக தெளிவான சாத்திரமும் மலையிற் கண்டேன்
கோடிதனங் கொடுத்தாலுங் கிட்டாதப்பா கொற்றவனார் தன்வந்திரி கிரந்தந்தானும்
நீடியே வேதபுராணங் களெல்லாம் நிதியான மலைபோல பார்த்திட்டேனே
4965.
பார்த்தேனே சதகோடி புராணமெல்லாம் பாங்கான சித்துமுனி யாயுள்வேதம்
சேர்ந்ததொரு கோர்வையல்லோ கோடாகோடி தேற்றமுடன் மலைதனிலே கண்டேன்யானும்
ஆர்த்துமே பிரளயத்தில் மிதந்தநூல்கள் ஆயிரத்தில் ஒருபங்கு மாண்பர்கண்டார்
நேர்த்தியுள்ள சாத்திரங்கள் முழுதுமேதான் நேர்மையுடன் மலைதனிலே சமாதிகாணே
4966.
காணவே இன்னமொரு மார்க்கஞ்சொல்வேன் கருவான புலிப்பாணி மகனேகேளிர்
பூணவே காலாங்கி கடாட்சத்தாலே புகழான குளிகையது கொண்டுமேதான்
வேணதொரு வதிசயங்கள் காண்பதற்கு விருப்பமுடன் இருபதாம் வரையிற்சென்றேன்
ஊணவே குளிகையது கொண்டுமல்லோ வுத்தமனே மேல்வரையிற் சென்றேன்பாரே
4967.
பாரேதான் குளிகைகொண்டு யடியேன்தானும் பட்சமுடன் மலைதனிலே ஏறும்போது
நேரேதான் சூரியமகா ரிஷியார்தாமும் நேர்மையுடன் அருணனைதான் பூசைசெய்து
சீரேதான் கிழக்குமுகந் தானிருந்து சிறப்புடனே யாகமது செய்துமல்லோ
சேரேதான் கிட்டிருந்து வடியேனப்பா செவ்வண்மை மகாரிஷியைப் பார்த்திட்டேனே
4968.
பார்க்கையிலே சூரியமகா ரிஷியார்தாமும் பண்பாக எந்தனையும் மனதுவந்து
தீர்க்கமுடன் நமஸ்கார பூசையோடு தீரமுடன் வந்தவனா ரென்றுகேட்க
கோர்த்தகரம் தனையோடு முடிவணங்கி குருபரனே யாரென்று கூறி
வேர்த்துவுடல் தானடுங்கி யடியேன்தானும் வேதாந்தக் காலாங்கி என்றிட்டேனே
4969.
என்றேனே காலாங்கி சீஷனென்றேன் எழிலான சூரியனா ரிஷியாருக்கு
குன்றான மலையேறி குளிகைபூண்டு கொற்றவனே மேல்வரையைக் காணவந்தேன்
சென்றிடவே யடியேனும் வந்ததாலே செம்முலுடன் எந்தனுக்கு காட்சிதந்து
வென்றிடவே மகிமைதனைக் கூறவென்று விழுந்திட்டேன் அவர்பாதம் அழுந்திட்டேனே
4970.
இட்டதொரு எந்தனுக்கு இதவுகூறி யெழிலான சூரியனார் ரிஷியார்தாமும்
சட்டமுடன் ஆதித்தன் பிறக்கும்ஜோதி தண்மையுள்ள சந்திரனார் இருக்கும்ஸ்தானம்
வட்டமுடன் நட்சத்திர வரையுங்கண்டேன் வளமான மேகமண்டலமுங் கண்டேன்
திட்டமுடன் அக்கினி மண்டலமுங் கண்டேன் தீரமுடன் சப்தமேகந் தனைக்கண்டேனே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக