5191.
நேமமுடன் செம்மறியின் தலைதானப்பா நேர்மையுடன் கொண்டுவந்து மைந்தாகேளு
தாமமுடன் கலசத்திற் கெதிரேவைத்து சட்டமுடன் வகண்டமது மேலேவைத்து
ஓமமுடன் யாகமது செய்வாயப்பா வுத்தமனே ஆயிரந்தான் வுருதான்போடு
சாமமது நடுச்சாம வேளையப்பா சாந்தியது செய்யும்வகை தன்மைபாரே
5192.
பாரப்பா பரசாந்தியது செய்யும்போது பட்சமுடன் பிரமையது போவதற்கு
நேரப்பா நோயாளி தன்னிலப்பா நேர்மையுடன் கிரகமது போவதற்கு
சீரப்பா சடையதுவால் பொம்மையொன்று சிறப்புடனே தானமைத்து வுபாயங்கேளு
ஆரப்பா தானறிவார் வுபாயமார்க்கம் அப்பனே சொல்லுகிbறென் அன்பாய்த்தானே
5193.
தானான பிரதமைக்கு வாடைபூண்டு சட்டமுடன் வாபரண மெல்லாம்பூண்டு
கோனான காலாங்கி சொன்னவாக்கு கொற்றவனே பிசகாம லாமைதன்னை
பானான யாமையது கொண்டுவந்து பாலகனே பிரதமையின் பாதத்தின்கீழ்
தேனான வுளுந்தினுட மாவையப்பா திண்மையுடன் யாமையது வோட்டிற்பூசே
5194.
பூசியே பிரதமையின் பாதத்தின்கீழ் புகழாக யாமைதனை பொதிந்துபோடு
காசியென்ற பட்டினால் பாதந்தொட்டு பாங்குபெற வுடுப்பதுவும் பணிந்துமல்லோ
தூசிபடா பாதமது தெரியாமற்றான் துப்புரவாய் பிரதமையைச் சாய்த்துவைத்து
கூசிடா வண்ணமது யோமசாந்தி கொற்றவனே செய்துமல்லோ சொல்லக்கேளே
5195.
சொல்லவென்றால் பிரதமையை நோயாளிமுன்னே சுத்தமுடன் தானிறுத்தி வைக்கும்போது
வெல்லவே பிரதமைதான் சுத்தியல்லோ விருப்பமுடன் தான்வருகும்போதிலப்பா
கொல்லவே வந்ததொரு கிரகமப்பா கொற்றவனே பிரதமையின் மேலேயப்பா
புல்லவே மையலது பலியேகொண்டு கோபாலா போகுதடா யென்றுசெப்பே
5196.
செப்பிடவே கிட்டிருந்த மாண்பரெல்லாம் செம்மலுடன் பிரதமையைக் கண்டபோது
ஒப்பிடவே சாந்தியினால் கிரகம்நீங்கி ஓங்கார பலியதுவுங் கொண்டுதானும்
செப்பிடவே கிரகமது போகுதென்று மேதினியில் எல்லவரும் மயங்குவார்கள்
தப்பிதங்கள் இல்லாமல் பிணியாளன்தான் சட்டமுடன் சுகமாவான் பாரீர்பாரே
5197.
பாரப்பா பிணியாளன் சுகமுமாகி பான்மையுடன் பிரம்மையது நீங்கியல்லோ
சீரப்பா பிரதமையின் ஜாலத்தாலே சிறப்புடனே எந்நாளும் பிணிகள்நீங்கி
வேரப்பா சாந்தியது மகிமையாலும் வேதாந்தத் தாயினது கிருபையாலும்
ஆரப்பா பிரம்மையது நீங்கியல்லோ வவனிதனில் சுகமாக வாழ்வார்தானே
5198.
தானான சடந்தனக்கு நோய்கள்வந்தால் தகமையுடன் மாண்பரெல்லாஞ் செய்யுமார்க்கம்
கோனான தன்தெய்வங் குலதெய்வந்தான் கொப்பெனவே வம்மனென்றும் பிடாரியென்றும்
பானான பலதெய்வ குற்றமென்றும் பாங்குபெற கப்பணங்கள் கட்டுவாகும்
மானான முனிதேவர் முடங்கனென்றும் மகத்தான பலவிதமாம் வண்ணமாமே
5199.
வண்ணமா மிப்படியே லோகமெல்லாம் வகுப்புடனே புத்தியது மாறலாகி
எண்ணமுடன் தன்னறிவு நிலையுங்கெட்டு எழிலான பதாம்புயத்தை நினையாமற்றான்
திண்ணமுடன் கடவுள்தனை மனதிலுன்னி தீர்க்கமுடன் யேகாந்த வுருவைவிட்டு
பண்ணியதோர் கோலமதை யென்னசொல்வேன் பாருலகில் மாண்பருட தன்மைதாமே
5200.
தன்மையா மின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் தன்மையுள்ள புலிப்பாணி மைந்தாகேளு
பான்மையாம் எந்தனது பாட்டனப்பா பாங்கான காலாங்கி நாதரப்பா
வன்மையாம் வருமைய சீஷனையா வளமான காலாங்கி நாதர்தாமும்
மின்மையாய் எந்தனது குருநாதனையா மேன்மையுடன் எந்தனுக்கு உரைத்தார்பாரே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக