பக்கங்கள்

சனி, 3 ஆகஸ்ட், 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5011-5020

5011.
கூறுவாய் காயத்தின் வலுமைதன்னை குறிப்பாக மர்மமதாய் மனதிலுன்னி
தேறுவாய் கைதனையே கண்ணிலொத்தி தேற்றமுடன் முத்தமது இட்டார்போல
மாறுபா டாகவல்லோ வாசந்தன்னை மதிமுகத்தில் மோர்ந்துமல்லோ தெரிந்துகொள்வாய்
தீதுடைய மனிதரவ ரெல்லாங்கூடி சிறப்பாகக் கையதனைக் காட்டுவாரே
5012.
காட்டுவார் ஒவ்வொரு மனிதர்தானும் கைநிட்டி பரிட்சையது செய்யுமென்பார்
தாட்டிகமாய் கைநீட்டிக் காட்டும்போது தகமையுடன் வாசனையைத் தெரிந்துகொள்ளு
மேட்டிமையாய் வாசனைகள் இருக்குமாண்பர் மேதினியில் பொருளதனை தீண்டாமாண்பர்
பூட்டகமாய் வாசனைகளில்லா விட்டால் புண்ணியனே திருடனென்று செப்பலாமே
5013.
செப்பலாம் பயங்காளியான மாண்பன் சென்றுமே மாளியிடம் கட்டிநின்று
ஒப்பமுடன் நகையெடுத்த தோஷத்தாலே ஓகோகோ தொட்டாலே மோசம்நேரும்
எப்படியும் தப்பிக்க வழிதான்வேண்டும் எழிலான தேங்காயைத் தொடக்கூடாது
இப்படியே தன்மனதி லுள்ளடக்கி எழிலாக யான்தொட்டேன் என்பான்பாரே
5014.
பாரேதான் பயங்கரத்தை யுள்ளடக்கி பான்மைபெற சபையார்முன் சோதனைக்கு
நேரேதான் முன்நிற்பான் பாவிதானும் நெடிதான சண்டாளன் குருத்துரோகி
கூரேதான் சத்தியமாய் வார்த்தைசொல்வான் குணமில்லான் மனமில்லான் மானமில்லான்
சேரேதான் மெய்வார்த்தை மிகவுங்கூறி செழிப்புடனே தான்வருவான் திருடனாமே
5015.
திருடனாம் பொய்சூது கபடுதந்திரம் தீரமுடன் தான்பேசி தப்பிப்பான்பார்
பொருடனையே கொள்ளைகொண்ட லோபன்தானும் பொங்கமுடன் பொருளெடுத்த மாண்பென்ன
குருதனையே தான்நினைத்து திருடனென்று குறிப்புடனே சொல்லியல்லோ பொருளைவாங்கு
அருளுனக்கு வுண்டாகும் மைந்தாபாலா வப்பனே காலாங்கி கடாட்சந்தானே
5016.
தானாக பொருள்தீண்டா மாண்பரெல்லாம் சட்டமுடன் தேங்காயைத் தொடுவார்பாரு
வேனான பொருளெடுத்தோன் சந்தேகத்தால் வேற்றமுக மாகியல்லோ தீண்டானப்பா
மானான வையமென்ற யெண்ணத்தாலே மயக்கமுடன் தேவதைகள் கொல்லுமென்று
பானான கலசமது வெகுவாய்தோன்றி பான்மையுடன் கைதனையே தீண்டான்பாரே
5017.
தீண்டான்காண் பொருளெடுக்கா பூபன்தானும் திறமுடனே தப்பிக்க வழியேபார்ப்பான்
பூண்டகமாய் அதிதமென்ற போக்குசொல்லி புணிதமுடன் தப்பிக்க வழியேகாண்பான்
காண்டகமாய் இந்தவித்தை யாருங்காணார் காசினியில் புத்திமான் காண்பான்பாரு
வேண்டியதோர் கருமான மின்னமுண்டு விருப்பமுடன் சொல்லுகிறேன் இன்னங்கேளே
5018.
கேளப்பா புலிப்பாணி மைந்தாகேளு கெடியான கஸ்தூரி ஜாலமப்பா
நாளப்பா போகாமல் இந்தஜாலம் நாட்டினிலே செய்வார்கள் அனந்தம்போக்கு
மாளப்பா புத்திமான் செய்யுஞ்ஜாலம் மகத்தான ஜாலமது வினோதவித்தை
வீளப்பா ஜெகஜால சூதுவித்தை விள்ளாரே யாருந்தான் விள்ளார்தானே
5019.
விள்ளாரே கஸ்தூரி ஜாலவித்தை விளம்புகிறேன் மாணாக்கள் பிழைக்கவென்று
புள்ளான தடியொன்று மூன்றேயாகும் புகழான மச்சென்ற மாளிதன்னில்
விள்ளவே நடுமையந் தன்னிலப்பா விருப்பமுடன் கோல்நாட்டி முக்கோணந்தான்
கொள்ளவே முக்கோணக் குச்சிக்குள்ளே குறிப்புடனே காகமென்ற கலசம்வையே
5020.
வைக்கவே கலசமதில் கலசம்வைத்து மகத்தான கலசமதில் வோடுவைத்து
நைக்கவே யோட்டின்மேல் தலைதானப்பா நலமான செம்மறியின் தலைதானாகும்
பொய்க்காமல் தலைமேலே சாணம்வைத்து பொங்கமுடன் சாணமதில் கலசம்வைத்து
மெய்க்கவே கண்டமதில் தீபமேற்றி மேன்மையுடன் மந்திரங்கள் ஓதுவாயே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக