5161.
தானான பேய்கொண்ட மாண்பருக்கு தாக்கான கருவொன்று சொல்வேன்பாரு
தேனான தேவிமனோன் மணியாள்பூசை தோற்றமுடன் தானமைத்துக் கும்பம்வைத்து
கோனான குருபரணைத் தியானம்செய்து கொப்பெனவே வுடுக்கோசை தனையெடுத்து
மானான மந்திரத்தை யுச்சரித்து மார்கமுடன் பேயாட வழிசொல்வேனே
5162.
வழியான தேவதையைத் தானழைத்து வளமையுடன் ஜெபதபங்கள் மிகவேவோதி
பழியான முப்புலியுந் தான்கொடுத்து பான்மையுடன் ஓமமது செய்யும்போது
சுழிமாரி மயக்கமது வதிகங்கொண்டு சுடரொளியாந் தீபமது பார்க்கும்போது
குழிபோன்ற கண்ணிரண்டும் இருளுந்தோன்றி குப்புரவாய் லாடகவி பேசுவாரே
5163.
பேசிய கூச்சலது வதிகமாகி பேரான மராட்டகமும் மிகவுங்கூறி
ஆசித்துப் பூசித்துக் கரங்குவித்து வப்பனே தேகமது நடுங்கலாகி
நாசிதனில் சுவாசமது மிகவேவோங்கி நடுக்கமுடன் குறட்டையது வதிகமாகி
தூசிபட மேனியது பிரண்டுமல்லோ துள்ளியே பற்கடித்து எழும்புவாரே
5164.
எழும்பியே வேதாளம் ஆர்க்கரித்து எழிலான பிடாரபலி கொண்டபேய்போல்
தழும்புபடா மேனியது தழும்புமாகி தற்பரனாற் சொரூபமதைக் கண்டாப்போல
தொழும்படவே தலைவிரித்து ஆட்டங்கண்டு தோற்றமுடன் வெகுபினத்த லதிகமாகி
அழுதுமே ஆயாசத் தியக்கமாகி வப்பனே கரங்குவித்து வாடும்பாரே
5165.
பாரேதான் சின்மயத்தைக் கண்டாற்போல பட்சமுடன் வுதிரமதை வாயாற்கக்கி
நேரேதான் பூசைமுகம் தன்னைக்கண்டு நேர்மையுடன் யேர்வையது எனக்கொவ்வாது
சீரேதான் பிதுர்வனத்தை கத்துமாண்டி சிறப்பான ஓங்காரப் பேய்தானல்லோ
கூரேதான் பூசையது மயானபூசை கொப்பெனவே எந்தனுக்கு தருவீர்தாமே
5166.
தாமான பேயாட்டங் கொண்டமாண்பர் தன்மையுடன் பூசைமுகம் யேர்வையில்லை
நாமான மாகவல்லோ வேதமோதி நடுச்சாம பூசையது செய்வேனென்றும்
வேமான லாடகவி முனிதானென்றும் விட்டகுறை யிருந்ததினா லிங்கேவந்தேன்
சாமான்னிய மானதொரு முனிதானல்ல தத்துவத்திற் பேர்கடந்த முனிதான்பாரே
5167.
முனியான முனியல்லோ பிரம்மராட்சி மூதுலகைக் கடந்ததொரு ஞானசித்து
சனியான ராட்சதனும் எனைத்தொடர்ந்து தாரணியில் கேணிதனில் விழுந்தபூதம்
பனிபோன்ற மலைவளத்தை சுத்தும்பூதம் பட்சமுடன் பிடாரிகளை வணங்கும்பூதம்
தனியான தத்துவங்கள் அதிகங்கொண்ட தயாபரியை மறவாத பூதமாமே
5168.
பூதமாம் பேயாட்ட முப்பத்திரண்டு பூதலத்தில் மிக்ககூறும் அதிதவித்தை
நீதமுடன் சற்பரனை யோடொபசாரம் நீதியுடன் நடப்பதுவும் சிலதுபூதம்
தீதமுடன் தலைவிரித்தல் ஆட்டங்கொண்டு திகழான வார்த்தைகளும் மிகவேயாகும்
கோதகமாய் மலையிலேறிப் போவேனென்று தோற்றமுடன் சிலபூதம் கூறுங்காணே
5169.
காணவே இந்திராதி ஜாலமப்பா கருவான கருவிகளும் மையினாலும்
கோணவே யட்சரத்தின் பீட்டகந்தான் சொல்லும் வில்லாலுங் கரணத்தாலும்
பூணவே காஞ்சோரிப் பொடியினாலும் புகழான திருவெண்ணீர் கலப்பினாலும்
ஆணவங்கள் தானொடுங்கி பேய்கள்தானும் வன்புடனே வாய்திறந்து கூறுந்தானே
5170.
தானான பிரணவத்தை யுச்சரித்து தண்மையுடன் அகஸ்தியனார் காண்டந்தன்னில்
கோனான யென்பாட்டன் கும்பயோனி குருசொன்ன காவியம் பன்னீராயிரந்தான்
தேனான காண்டமது பனிரெண்டுக்குள்ளே திறமான முதற்காண்டந் தன்னிலப்பா
மானான இலங்கைபதி வேந்தனுக்கு மகத்தான மையொன்று கூறினாரே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக