5051.
வலித்துமே சினைதானும் பனிநீர்தன்னை வளமுடனே தான்குடித்து நிற்கும்போது
பலிப்புடைய சினையெல்லாம் உதிர்த்துக்கொண்டு பட்சமுடன் கசகசாவில் கலப்பாயப்பா
சலிப்பின்றி பரணிதனில் அடைத்துமேதான் சட்டமுடன் பதனமது செய்துகொண்டு
கலிதனிலே வெகுமாண்பர் கூட்டத்தோடு களிப்புடனே ஜாலமது செய்குவாயே
5052.
செய்யவென்றால் ஜாலமது மார்க்கங்கேளு செம்மண்ணு தொட்டியொன்று பாண்டமப்பா
துய்யநல்ல ஜலமதுவும் பாண்டந்தன்னில் துப்புரவாய் நிறையவிட்டு புகலக்கேளு
பையவே பரணைதனை திறந்துமைந்தா பாலகனே பாரினிலே வெகுபேர்காண்க
வையகங்கள் பிரமிக்க கசகசாவை வண்மையுடன் தானெடுத்துக் கொட்டுவாயே
5053.
கொட்டையிலே ஜனங்களெல்லாம் மயங்குவார்கள் கோடியிலே புத்திமானொ ருவனுண்டு
சட்டமுடன் மற்றோர்கள் காணாரப்பா தாரிணியில் காண்பதுவும் அரிதேயாகும்
திட்டமுடன் பாண்டமதை மூடிப்போடு தீர்க்கமுடன் ஒருநாழிகை யானபின்பு
வட்டமுள்ள பாண்டமதை திறந்துபார்க்க வளமான சினையதுவும் மீனுமாச்சே
5054.
ஆச்சப்பா சினையெல்லா மீனுமாச்சு வப்பனே கசகசா நின்றுபோச்சு
நீச்சப்பா சிறுமீன்கள் பொடிகளப்பா நிலையான பாண்டமதில் மேயலாச்சு
மேச்சப்பா பொரித்ததெல்லாம் சினைதான்கெட்டி மேன்மையுள்ள கசகசா சொத்தையென்று
ஆச்சரிய மாகவல்லோ வுரைப்பாயப்பா வருண்மைந்தா மெய்யென்று நம்புவாரே
5055.
நம்பியே மாண்பரெல்லாம் ஏக்கம்கொண்டு நடுநடுங்கி பிரமித்து சோபித்தேதான்
வெம்பியே முகம்வாடி யுளங்களித்து வேகமுடன் ஆசீர்மம்மிகவுஞ் செய்து
தம்பியே எந்தன்குரு நாதபோதா தாரணியில் உனைப்போல சித்தனுண்டோ
கும்பியே கைகுவித்து வுளங்களித்து கொப்பெனவே கால்தனிலே பனிகுவாரே
5056.
பனிகுவார் எந்தன்குரு நாதாவென்பார் பாரினிலே வெகுகோடி சித்துவென்பார்
துணிவுடனே ஜாலமல்ல சிருஷ்டியென்பார் தோய்ந்தபொரு ளுள்ளதொரு கருவேயென்பார்
கணிவுடனே காயாதி கற்பங்கொண்ட கைலாச நாதமுனி கடவுளென்பார்
மணிபோன்ற லோககுரு விவர்தானென்பார் மாசற்ற சற்குருவா மென்பார்பாரே
5057.
பாரப்பா யின்னமொரு கருமானங்கேள் பாரினிலே எல்லவரும் பயந்துவோட
ஆரப்பா ஆச்சரிய மானவித்தை வப்பனே அறிவுள்ளான் அறிவான்பாரு
சீரப்பா பிரதிவா மெழுகினாலே சிறப்புடனே கத்தியொன்று செய்வாய்தானும்
நேரப்பா செம்பருத்தம் சப்பார்த்துப்பூ நெடிதான செம்பாளைப் பழத்தைவாங்கே
5058.
வாங்கியே சார்பிழிந்து மன்னாகேளு மகத்தான இரும்பினுட கத்திமேலே
தூங்கியே திரியாதே புத்திவானே துடிப்புடனே சாரதனைப்பூசிப்பூசி
மாங்குபெற ரவிதனிலே காயவைத்து பான்மையுட தன்னையே பதனம்பண்ணி
சாங்கமுடன் சபைகூட்டி மைந்தாகேளு சட்டமுடன் ஜாலம் விளையாடுவாயே
5059.
ஆடுவாய் சபையார்முன் செப்பக்கேளு வப்பனே யோர்சிறுவன் புத்திவானாய்
தேடியே கொண்டுவந்து கூட்டத்துள்ளே தெளிவுடனே யவன்கழுத்தில் நிம்பழந்தன்னை
சாடியே கழுத்திலே நிம்பழத்தை சட்டமுடன் தான்தறித்து கயறுபூண்டு
வாடியே திரியாமல் மயங்கிடாமல் மன்னவனே கத்திகொண்டு யரிகுவாயே
5060.
அரிகையிலே யெலுமிச்சை பழரசந்தான் வப்பனே ரத்தமது போலேசாயும்
கிரியையிது மெய்க்கிரியை சாலவித்தை கீர்த்தியுள்ள வித்தையிது என்பார்பாரு
சரியான ஜெகஜால மிதுவேயென்பார் தாரணியில் செய்பவர்கள் இதைபோலுண்டோ
குரியான ரத்தமது ஜாலவித்தை கொற்றவனே கழுத்தறியும் வித்தைதானே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக