பக்கங்கள்

சனி, 3 ஆகஸ்ட், 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 4991-5000

4991.
இல்லையே வாண்பெண்ணா லிரண்டுங்கண்டார் எழிலான சாத்திரங்கள் கற்றுகண்டார்
தொல்லையெனும் பிறவியது கண்டதில்லை தோறாமல் சாத்திரத்தை வுளறினார்கள்
கொல்லனது வீதிதனில் வூசிவிற்ற கூரான கதைபோல யென்முன்னாக
எல்லையுள்ள சித்தர்முனி ரிஷிகளெல்லாம் யெழிலாகப் பாடிவைத்தார் நூல்கள்தாமே
4992.
நூலான நூல்களெல்லாம் அதிதஞ்சொன்னார் நுணுக்கமுடன் யாதியந்த வஸ்துயில்லை
பாலான நூல்போலே பலரும்பாடி பாரினிலே யொளித்துவைத்தார் முனிவர்சித்தர்
காலாண நூலதுதான் இருபத்திரண்டு கணக்குடனே பாடிவைத்தார் லட்சமாக
மாலான சாத்திரத்தில் ஆதியந்தம் மகதேவர் சங்கையதை சொல்வார்தானே
4993.
சொல்லாத சாத்திரங்கள் ஏதுக்கல்லோ தொல்லுலகில் பலநூலுங் கற்றுமென்ன
புல்லர்களாய் வெகுமாண்பர் பலருங்கூடி புகட்டினார் சித்தர்முனி சாத்திரத்தை
வெல்லவே கடவுளது இருக்கும்ஸ்தானம் வேதாந்தத் தாயாரும் கூறவில்லை
நல்லதொரு சித்துமுனி சாத்திரங்கள் நலமான நூல்களெல்லாம் பாழாய்ப்போச்சே
4994.
போச்சென்று விடுகாமல் புண்ணியர்கள் புகட்டினார் வையகத்து மாண்பர்க்கெல்லாம்
மூச்சடங்கிப் போனதொரு சித்துதாமும் முனையான தெய்வமது வென்றொன்றுண்டு
பாச்சலுடன் பலபேரு மறியவல்லோ பண்பாகப் பொதுப்படவே சொன்னாரங்கே
ஆச்சரிய மானபரா வஸ்துதன்னை வன்புடனே கண்டறிந்தோர் இல்லைபாரே
4995.
பார்க்கையிலே சாத்திரங்கள் இதிகாசங்கள் பண்புடனே பாடிவைத்தார் முனிவர்தானும்
ஆர்க்கமுடன் யாரேனும் விள்ளக்கூறி வன்புடனே சாத்திரங்கள் கூறவில்லை
மார்க்கமது தெரியாமல் வீணில்காதை மயக்கமுடன் பாடிவைத்தார் நூல்கள்தோறும்
சூர்ப்பனகை மாதுவுக்கு தனங்கள்போல சுருதிபொருள் ஆகமங்கள் கதைபோலாச்சே
4996.
ஆச்சப்பா கைலாயமேரு கண்டேன் அங்ஙனவே மகிமையெல்லாம் கூறினேன்யான்
வீச்சுடனே குளிகையது பூண்டுகொண்டு வீரமுடன் மேருகிரி தன்னைநீக்கி
பாச்சலுடன் சீனமெனும் பதியிற்சென்று பண்பான மாண்பர்களுக் குகந்துயானும்
ஆச்சரிய மானதொரு மகிமையெல்லாம் அன்புடனே யானுரைத்தேன் சீனத்தார்க்கே
4997.
சீனமாம் பதினென்பேர் சித்துதாமும் சிறப்பான சாத்திரங்கள் கோடியுண்டு
மானமுடன் சித்தாதி சித்தர்தாமும் மயக்கமுடன் வெகுநூல்கள் பாடினார்கள்
ஈனமது வாராது எந்தன்நூலு எழிலான குருநூல்தான் சத்தகாண்டம்
வானமது மேருவென்ற கைலைமேரு வளப்பமெல்லாம் இந்நூலில் பகர்ந்திட்டேனே
4998.
பகர்ந்தேனே காலாங்கி நாதர்தம்மால் பாங்கான சீனபதி யான்கடந்து
உகர்ந்ததொரு தேசாதி தேசமெல்லாம் வுத்தமனே குளிகையது பூண்டுகொண்டு
அமர்ந்துமே யட்டதிசை யானுங்கண்டு வன்பான கைலாச மேரிற்சென்றேன்
சுமர்ந்திட்ட ஆதிசேடன் தன்னைத்தானும் துப்புரவாய்க் கண்டதில்லை வுண்மைதானே
4999.
தானான சாத்திரத்தின் பெருநூலப்பா மேன்மையுள்ள குருநூலாம் சத்தகாண்டம்
கோனான யெனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் குருபாத கடாட்சத்தாலும்
தேனான தென்பொதிகை தன்னில்வாழும் தேஜொளிவின் அகத்தியனார் கிருபையாலும்
மானான சீனபதி சமாதிசென்ற மகத்தான கமலமுனி கடாட்சங்காணே
5000.
காணவே சத்தகாண்ட மேழிற்குள்ளே கருவிகர ணாதிபொரு ளாதியந்தம்
தோணவே துறைமுகமும் யானுங்கண்டு துப்புரவாய்ப் பாடிவைத்தேன் குருநூல்தானும்
வேணதொரு பொருளெல்லாம் இதிலடக்கம் விரும்பியே யானுரைத்த பெருநூல்தானும்
ஆணவங்கள் தானொடுங்கி யைந்தாங்காண்டம் அன்புடனே பாடிவைத்தேன் முற்றதாமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக