பக்கங்கள்

சனி, 3 ஆகஸ்ட், 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5151-5160

5151.
தானான ஜலமதுவும் காய்ந்தபின்பு சட்டமுடன் திருவெண்ணீர் காணலாகும்
கோனான குருபரனார் பூசைசெய்து கொற்றவனே தேவதாஸ் தலத்தைவிட்டு 
தேனான மனோன்மணியாள் பாதங்கண்ட தேவிதனைப் பூசைசெய்த புனிதனென்பார்
பானான பரஞ்சுடராய் மேனியெல்லாம் பாங்கான பட்டையது காணலாமே
5152.
காணலாம் சிவயோக மாண்பன்போல கைலாய சித்தமுனி நீதானென்பார்
பூணவே பிர்மலபி கடந்தசித்து புகழான கேணிதனில் இறங்குஞ்சித்து
தோணவே யெரிகாலன் தந்திரஜாலம் தோற்றமுடன் காண்பதற்கு பிரம்மையாகும்
நீணவே ஜாலமாந் தந்திரப்போக்கு நீதியுடன் செய்துமல்லோ பரிசுவாங்கே
5153.
வாங்கப்பா ராஜரிடம் பரிசுவாங்கி வளமுடனே வையகத்தில் சித்தனைப்போல
தூங்கியே திரியாதே துய்யபாலா துரைராஜன் சுந்திரன்போல் போகஞ்செய்து
ஏங்கியே மாண்பரெல்லாம் திடுக்கிட்டேங்க யெழிலான மாயவித்தை வெண்ணீர்வித்தை
சாங்கமுடன் செய்துமல்லோ தரணிமீதில் சட்டமுடன் காலாங்கி தன்னைப்போற்றே
5154.
போற்றியே யின்னமொரு கருமானங்கேள் புகழான காலாங்கி நாதர்தம்மால்
தேற்றமுடன் எந்தனுக்கு உபதேசித்த தெளிவான ஜாலவித்தை மரக்காணந்தான்
ஆற்றலுடன் மணத்தவளை நெய்யைவாங்கி வப்பனே வுடும்பினுட நெய்யுங்கூட்டி
சாற்றலுடன் விலாங்கினது யிணமுஞ்சேர்த்து சட்டமுடன் குழித்தயிலம் வாங்கிடாயே
5155.
வாங்கியே தயிலமதை யிறக்கிக்கொண்டு வண்மையுடன் சீசாவிற் பதனம்பண்ணு
பாங்குடனே சிங்கமுகம் பாண்டஞ்செய்து பதனமுடன் மேல்வாயாந் தளவாய்போல
தேங்கவே பாண்டமதில் கரியைக்கொட்டி தேற்றமுடன் தீயதனைப் போட்டுமல்லோ
ஓங்கவே சிறுகழியாய் விறகுதன்னை ஒப்பமுடன் போட்டுமல்லோ எரித்திடாயே
5156.
எரிக்கையிலே கொழுந்தது போலெறியும்போது யெழிலான சங்கிலியாம் வீரமப்பா 
முறுக்கியதோர் சங்கிலியை தீயிற்போட்டு முனையான தீயதனிற் காய்ச்சிக்கொண்டு 
பரிக்கியே பலபேர்கள் மாண்பர்பார்க்க பட்சமுடன் நெய்யதனைக் கையிற்றோய்த்து
நெருக்கியே சங்கிலியை வுருவும்போது நெடிதான தீயதுவும் பற்றாதன்றே
5157.
அன்றான சங்கிலியைப் பார்க்கும்போது அடலான தீபமது சுடர்போல் தோற்றும்
குன்றான மலைக்கல்லு கருங்கல்லப்பா கொப்பெனவே யிதுபோல யெடுக்கலாகும்
சென்றுமே ராஜரிடம் ஜாலம்செய்து சிறப்பான பரிசுமுதல் யாவும்பெற்று
வென்றிடவே ஜாலமது தந்திரஜாலம் வினோதமுடன் செய்துமல்லோ பரிசுகொள்ளே
5158.
கொள்ளவே வெகுநபர்கள் மெச்சும்பாலா குவலயத்தில் நீயுமொரு சித்தனைப்போல்
எள்ளளவுங் குறையதுவும் நேராமற்றான் யெழிலான வித்தையது செய்துமல்லோ
வுள்ளபடி சிவயோகம் ராஜயோகம் வுத்தமனே சமாதிநிலை நின்றுகொண்டு
கள்ளமில்லா தேவரிஷி தம்மைப்போல காசினியில் வெகுகாலம் வாழ்குவீரே
5159.
வாழ்க்கையிலே வுமைக்கண்ட மாண்பரெல்லாம் வையகத்தில் இவர்போலுஞ் சித்துமுண்டோ
தாழ்மையுடன் உமைப்பணிவார் கோடிமாண்பர் தாரணியில் வுனக்கீடு வொருவருண்டோ
ஆழ்மையுள்ள மாண்பாலா புத்திவானே வவனிதனில் ஜாலவித்தை செய்துகொண்டு
மேழ்மையுடன் பூலோக வாழ்க்கைதன்னில் மேதினியில் யெப்போதும் வாழ்குவீரே
5160.
வாழவே யின்னமொரு கருமானங்கேள் வண்மையுள்ள புலிப்பாணி மைந்தாபாரு
தாழவே ரெண்டகமாஞ் சாதியப்பா தாக்கான பூசாலி செய்யுமார்க்கம்
ஆழவே பேய்கொண்ட மாண்பர்தம்மை வன்புடனே தாமழைத்து சபையோர்முன்னே
சாழலுடன் பேயாட்டம் கொள்ளுமார்க்கம் சட்டமுடன் தேவதைகள் வரவுதானே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக