பக்கங்கள்

சனி, 3 ஆகஸ்ட், 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5111-5120

5111.
உரைத்தேனே புலிப்பாணி மைந்தாபாரு உத்தமனே இன்னமொரு பாகஞ்சொல்வேன்
கரைக்கின்ற மருந்தினிட ஜாலமப்பா கண்கண்ட வித்தையடா கூறப்போமோ
துரைத்தனத்தார் மெச்சுகின்ற ஜாலமப்பா துப்புரவாய் நானுரைப்பேன் துய்யபாலா
கரையான குளங்கண்டு மடுவுகண்டு கட்டழகா ஜாலமது செய்வாய்தானே
5112.
தானான வித்ததுதான் பேன்கொட்டையப்பா தாக்கான சாதியது பெருவித்தாக
மானான வித்ததுதான் கொண்டுவந்து மகத்தான வக்கினியில் வருத்துப்போடு
தேனான வித்ததனை வறுத்தபின்பு தெளிவாக பொடியம்மி தனிலரைத்து
கோனான குருபதத்தை மனதிலெண்ணி கொற்றவனே யதிற்சேர்க்க வகைமைகேளே
5113.
கேளேதான் புலிப்பாணி மைந்தாகேளு கெடிதான பூநாக மன்னித்தோடு
பாரேதான் போகாமல் கிளறிப்போடு பாங்காகக் கொதியிட்டு எடுத்துக்கொண்டு
காளேதான் போகாமல் மத்தியானம் நலமான மடுவுதனில் மச்சங்கண்டு
ஆளேதான் அம்மருந்தை நீரிலேதா னப்பனே கரைத்துவிடு மைந்தாபாரே
5114.
பாரேதான் போதையென்ற மருந்தினாலே பாங்கான மச்சமெல்லாந் தியக்கங்கொண்டு
சேரேதான் கரையோரம் வந்துசேரும் செயலான மருந்தினிட வேகத்தாலே
நேரேதான் ஜலத்தைவிட்டு எகிறிப்பாயும் நெடிதான மச்சமெல்லாம் கூறப்போமோ
வீரேதான் விஷமேறி மயக்கங்கொண்டு விடுபட்டு யேகுமல்லோ மச்சந்தானே
5115.
தானான ஜாலவித்தை யதீதவித்தை தாரணியில் சூட்சமதை யறியாமாண்பர்
கோனான காலாங்கி நாதர்வாக்கு குவலயத்திற் பொய்யாது மெய்யேயாகும்
தேனான ஜாலவித்தை செய்துமல்லோ தேசத்தில் பிழைக்கவல்லோ மாண்பருக்கு
பானான பராபரியாள் கிருபையாலே பாலித்த வித்தையது பாண்மையாமே
5116.
பாண்மையாம் இவ்வித்தை யறிந்துமைந்தா பாங்கான ராஜரிடஞ் சென்றாயானால்
தேன்போன்ற ஜாலமதை மிகவாய்ச்செய்து தேற்றமுடன் அவர்மனது களிப்புண்டானால்
மேன்மையாம் உந்தனுக்கு வேணதீவார் மேதினியில் உனைப்போல சித்தருண்டோ
பாண்மையுடன் சிவராஜ யோகஞ்செய்து பாலிப்பாய் வெகுகோடி வித்தைதாமே
5117.
வித்தையால் ஜெகஜால வித்தையப்பா விருப்பமுடன் உந்தனுக்கு உபதேசித்தேன்
சுத்தமுடன் ஞானோப தேசவித்தை சூட்சாதி சூட்சமெல்லாம் திறந்துவிட்டேன்
நித்தமுமே மதியமுர்தம் நிலையம்பூண்டு நீணிலத்தில் நீயுமொரு சித்தனைப்போல
கத்தனையே எந்நாளு மனதிலெண்ணி கைலாய பதிபோல வாழ்ந்திடாயே
5118.
வாழவென்றா லின்னமொரு மார்க்கம்பாரு வளமான வித்தையது கருதானப்பா
தாழவே புலிப்பாணி மைந்தாகேளு தகமையுள்ள கண்மணியே புகல்வேன்பாரு
வேழமையாய் தேவதைகள் கூட்டத்தோடும் வெகுமாண்ப ருக்கோசை தன்னினோடும்
சாழலெனு மோசையது முறிந்துபோக சட்டமுடன் யாமுரைப்போம் வளமைகாணே
5119.
காணவே பேயோட்டு மந்திரவாதி கனமான பத்துபேர் மாண்பர்கூடி
தோணவே சிலம்பங்கள் போடும்போது துப்புரவாய்க் கூச்சலுடன் போரேவந்தால்
வேணவே மர்மங்கள் மனதிற்கொண்டு வேட்கையுடன் வுடுக்கைதனை யுடைப்பதற்கு
நாணவே கெந்தகத்தின் திராவகத்தால் நலமாக குச்சிதன்னிற் கோடுபோடே
5120.
போடேதான் எதிராளி காணாமற்றான் போக்கான திராவகத்தைத் தீட்டும்போது
நீடவே சவ்வென்ற சர்மந்தானும் நிட்களங்க மாகவல்லோ வெந்துமேதான்
கூடவே யிருக்குமந்த காலந்தன்னில் கொப்பெனவே யெதிராளி வந்துமல்லோ
சாடவே யுடுக்கைதனை யடிக்கும்போது சட்டமுடன் உடுக்கதுவும் கிழியுந்தானே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக