பக்கங்கள்

சனி, 3 ஆகஸ்ட், 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5061-5070

5061.
தானான வித்தையிது சூட்சம்சூட்சம் தாரணியில் யாரேனும் காண்பதுண்டோ
கோனான காலாங்கி நாதரப்பா கொற்றவனார் எந்தனுக்கு உபதேசித்த
தேனான வித்தையிது தேசிவித்தை ஜெகதலத்தில் கோடிபேர் மயங்குவார்கள்
பானான பராபரியாள் கடாட்சத்தாலே பாலகனே யுந்தனக்கு யோதினேனே
5062.
ஓதினேன் ஜாலமென்ற வினோதஜாலம் வுத்தமனே வையகத்தோர் பிழைக்கவென்று
நீதியுடன் உந்தமக்கு சொன்னேன்யானும் நிட்களங்க மாகவல்லோ வுரைத்தேனப்பா
பாதிமதி தானணிந்த தம்பிரானே பாருலகில் சித்தனைப்போ லிருந்துகொண்டு
ஜோதிமயங் காணுதற்கு சூட்சாசூட்சம் தொல்லுலகில் காண்பதற்கு வழிகொள்வாயே
5063.
கொள்ளவென்றால் குருபதத்தின் கொள்கைவேண்டும் கோளாறு தானகற்றி நடக்கவேண்டும்
எள்ளளவும் பொய்சூது கபடுதந்திரம் யென்மகனே மனந்தனிலே நண்ணலொப்ப
புள்ளிமயி லேறிவரும் புனிதவானை புகழுடனே எந்நாளும் நினைக்கவேண்டும்
விள்ளவே யவருமக்கு வுபதேசிப்பார் வித்தகனே எல்லோரும் போற்றுவாரே
5064.
போற்றுவா ரின்னமொரு கருமானங்கேள் பொங்கமுடன் உந்தமக்குக் கூறுவேன்யான்
ஆற்றலுடன் காலாங்கி நாதரோடு வன்புடனே வனஞ்சுத்தி வருகும்போது
காற்றுடனே வனாந்திரங்கள் சுற்றும்போது கண்மணியே எந்தனுக்குக் களையுண்டாச்சு
நீற்றலுடன் காலாங்கி யென்னைப்பார்த்து நீட்சியுடன் களைபோக நினைத்திட்டாரே
5065.
நினைத்துமே வரிசிதனைக் கொண்டுவந்து நீதியுடன் காலாங்கி நாதர்தாமும்
புனைப்புடனே சீலைதனி லரிசிகொட்டி புகழுடனே தோளாந்திர மாகவல்லோ
சினைப்பதற்கு வரிசிக்கு நாலுகொண்ட சிறப்பான இடமதுவும் அதிகம்விட்டு
பனைப்புடனே தான்முடிந்து வாற்றோரந்தான் பட்சமுடன் மணல்தனிலே பதிந்திட்டாரே
5066.
பதிந்துமே முடிச்சியின்மேல் மனலைக்கொட்டி பாங்குபெற தீயதனை மேலேமூட்டி
அதிந்துமே யோர்சாம மெரித்தபோது வப்பனே யாற்றுநீர் கசிந்துமேதான்
துதிந்துமே யரிசியது யூறலாகி துய்யாணின் னிறம்போலே சாதமாச்சு
முதிந்துமே போகாமல் பதத்தெடுத்து முத்தமனே எந்தனுக்கு தந்தார்தானே
5067.
தானான காலாங்கி நாதர்தாமும் தண்மையுடன் எந்தமக்குக் கொடுத்தஜாலம்
கோனான குருகொடுத்த ஜாலமப்பா கொற்றவனே யுந்தனுக்கு யானும்தந்தேன்
பானான பராபரியாள் கடாட்சத்தாலே பாலித்தேன் யுந்தமக்கு இந்தப்போக்கு
தேனான ஜாலமது இந்திரஜாலம் தேற்றமுடன் யுலகுதனில் செய்வாய்பாரே
5068.
பாரப்பா வரிசியென்ற சாதமப்பா பண்புடனே கண்டவர்கள் பிரமிப்பார்கள்
நேரப்பா பாண்டமில்லா வித்தையப்பா நெடிதான தந்திரமாஞ் ஜாலவித்தை
ஆரப்பா செய்வார்கள் இந்தப்போக்கு வப்பனே யாமுமக்குச் சொன்னநீதி
சீரப்பா வுலகுதனில் சித்தனைப்போல் சிறப்புடனே தாமிருந்து யாடுவாயே
5069.
ஆடையிலே வையகத்து மாண்பரெல்லாம் அப்பனே இந்திரமாஞ் ஜாலமென்பார்
கூடையிலே வெகுபேர்கள் மாண்பர்தானும் குறிப்புடனே இச்சாலம் செய்துபார்ப்பார்
தேடையிலே பாண்டமது ஜலமுமில்லா தேசத்தில் வித்தையிது சொகுசுமெத்த
நீடையிலே சபைகூடி செய்துபார்த்து நீதியுடன் உந்தனையும் வணங்குவாரே
5070.
வணங்கியே ஏவல்களும் மிகவுஞ்செய்து வஞ்சலிகள் மிகச்செய்து வன்பாயப்பா
இணங்கியே சோடசோப சாரஞ்செய்து யென்குருவே யென்சாமி யென்பார்பாரு
மணங்கமழுந் தாமரையை யடிபணிந்து வையகத்தி லெப்போதும் சதாநித்தம்தான்
பணங்காசு மிகத்தந்து பலவாயீந்து பாலகனே எப்போதும் போற்றுவாரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக