5001.
அண்டபகி ரண்டாண்ட மரனேகாப்பு ஆனந்த பூரணமாம் உமையாள்காப்பு
குண்டமெனும் குவலயத்தில் குறியேகாப்பு குமரகுரு சீர்முருகர் பாதங்காப்பு
புண்டரீக திருபெருமாள் புவனைகாப்பு புகழான பிரமனவன் புனிதன்காப்பு
சண்டமா ருதம்போலே வேழாயிரத்தை சாற்றுகிறேன் காலாங்கி பாதங்காப்பே
5002.
காப்பான வாறாவதான காண்டம் கருவான பொருளெல்லாம் இதிலடக்கம்
சேப்பான வேழாயிரம் பொருள்தானப்பா சிறப்பான சத்தகாண் டகமுமாகும்
வேப்பான வாறாவதான காண்டம் வெகுபொருள்கள் இதிலடக்கம் வினயமெத்த
பாப்பான காண்டமது வாறுக்குள்ளே பார்லோக வித்தையெல்லாம் காணலாமே
5003.
காணலாம் பெருநூலா மேழாயிரத்தில் கருவான சரக்கெல்லாம் இதிலேதோயும்
பூணவே குருநூல்தான் பெருநூலப்பா புகழான சத்தசா கரந்தானாகும்
வேணதொரு கருக்குருவும் இதிலடக்கம் வேகமுடன் பாடிவைத்த சத்தகாண்டம்
நாணவே நாதாக்கள் ரிஷிகள்பாதம் நான்வணங்கி பாடிவைத்தேன் நன்மைபாரே
5004.
பாரேதான் மாந்திரீக ஜாலப்போக்கு பாங்கான வயித்தியமும் யோகமார்க்கம்
சீரேதான் சிமிட்டுவித்தை யனந்தம்போக்கு சிறப்பான கோல்வரிசை சிலம்பாட்டம்
நேரேதான் பற்பமுடன் செந்தூரங்கள் நெடிதான கட்டினமும் நீற்றினமுமாகும்
தீரேதான் லேகியங்கள் குளிகைமார்க்கம் திறமான லோக மாரணமுமாமே
5005.
ஆமேதான் புலிப்பாணி வருண்மைந்தாகேள் அப்பனேசொல்லுகிறேன் புத்திவானே
நாமேதான் காலாங்கி நாதர்பாதம் நலமுடனே யான்வணங்கி கூறலுற்றேன்
வேமேதான் வெகுநூல்கள் பார்த்துமேதான் விருப்பமுடன் இந்நூலை யுந்தனுக்கு
தாமேதான் குருநூலாய்ப் பொருள்கள்கண்டு தக்கபடி செய்தேனே தரணியோர்க்கே
5006.
தாரிணியில் நூல்கண்டோர் கர்மிகட்கும் தகமையுள்ள சண்டாளர் பாவிகட்கும்
காரணியாம் நயம்பேசி கதையுரைக்கும் கடிதான துரோகிகட்கு இந்தநூலை
தூரணியாய் கொடுத்தாக்கால் பாவமெய்தும் துப்புரவாய்க் கொடுக்காதே புண்ணியவானே
வேரணியாய் தர்மிகட்கும் புண்ணியர்க்கும் வேணவுப சாரமுடன் கொடுப்பாய்தானே
5007.
தானான போகரேழா யிரந்தான் தாரணியில் கண்டவர்கள் விள்ளார்தாமே
கோனான எனதையர் காலாங்கிநாதர் குவலயத்தில் கொற்றவர்தன் கடாட்சத்தாலும்
வேனான சத்தகாவியத்தை யப்பா விருப்பமுடன் பாடிவைத்தேன் மைந்தாகேளு
தேனான இந்நூல்தான் சொர்ணநூலாம் தெளிவாகப் பாடிவைத்தேன் புவியுளோர்க்கே
5008.
புவியான இன்னமொரு மார்க்கம்பாரு புகழான தந்திரமாஞ் ஜாலவித்தை
கவியான சித்தர்முனி ரிஷிகள்யாரும் கூறவில்லை யெவ்வித நூலிலப்பா
பவியான பணிதிகளை கொள்ளைகொண்டோர் பாருலகில் காண்பதற்கு வரிதேயாகும்
குவிதமுடன் ஜாலமாந் தந்திரவித்தை கூறுவேன் மாணாக்கள் பிழைக்கத்தானே
5009.
தானான கொள்ளைகொண்டோர் மாண்பர்தம்மை தாரிணியில் பிடிப்பதற்கு வுபாயதந்திரம்
மானான மச்சென்ற மாளிதன்னில் மகத்தான காகமொன்று பதிதானப்பா
பானான மேடையது வொன்றுசெய்து பாங்கான மேடையின்மேல் கலசம்வைத்து
கோனான குருதனையே மனதிலுன்னி கொற்றவனே கலசமதில் தேங்காய்வையே
5010.
வைத்துமே தேங்காய்மேல் காயந்தன்னை வளமாகத் தான்பூசி மைந்தாநீயும்
பையவே சந்தேகப் பட்டபேரை பாங்குடனே கும்பலாய்க் கூட்டிக்கொண்டு
மெய்யாக நீங்களெல்லாம் மாளிசென்று மேன்மையுடன் தேங்காயைத் தொட்டுவந்தால்
கைதனையே சோதிப்பே னென்றுசொல்லி கருத்துடனே வுறுதிமொழி கூறுவாயே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக