5131.
செய்யவே பாண்டமது கலசந்தன்னில் செயலான வித்தையது எல்லோர்காண
பையவே பூசனியாம் பிஞ்சுதன்னை பாங்குடனே மட்பாண்டந் தன்னிலிட்டு
மெய்யுடனே சின்னவாய் கொண்டபாண்டம் மெல்லெனவே பூசனிக்காய் வளர்ந்துமல்லோ
கொய்தபின்பு தனையெடுத்து பாண்டந்தன்னை கொப்பெனவே ரவிதனிலே வைக்கக்கேளே
5132.
கேளேதான் பாண்டமது ரவியில்வைக்க கொடியான காயதுவும் பழமேயாகி
நானேதான் முத்தினதோர் பழமுந்தானும் நலமான பாண்டத்தில் உருளும்பாரு
சூளேதான் கலசமென்ற பாண்டந்தன்னை துப்புரவாய் பதனமது செய்துகொண்டு
ஆளேதான் தலைமீதில் குடத்தைவைத்து வன்புடனே ஜாலமது செய்வாய்தானே
5133.
தானான சபையேறி வேந்தர்முன்னே சட்டமுடன் மாணாக்கள் கூடிருக்க
கோனான வேந்தர்களும் திடுக்கிட்டேங்க கொற்றவனே பாண்டமதை முன்னிறக்கி
தேனான பூசனிக்காய் வேறகன்று தேற்றமுடன் சபையோர்முன் கொண்டுவந்து
பானான பராபரியை மனதிலெண்ணி பட்சமுடன் ஜாலமது செய்துகாட்டே
5134.
காட்டவே தனக்குகந்த சீஷனாக கருவாக மர்மமதை யவனுக்கோதி
நீட்டமுடன் பாண்டமதை யவன்கைதந்து நிறையவே ஜலமதனைக் கொடுவாவென்று
வாட்டமுடன் பாண்டமதில் ஜலமும்நிற்க வாகுடனே வலுவேந்தர் பார்த்திருக்க
நீட்டமுடன் மரமென்ற டோலிதன்னை நினைவாக யவன்கழுத்தில் மாட்டிடாயே
5135.
மாட்டியே திரைவளைத்து மதியம்பூண மார்க்கமுடன் எல்லவரும் பார்த்திருக்க
தாட்டிகவாய் ரவியதனி லிருந்துகொண்டு சட்டமுடன் பூசனிக்காய் தனையெடுத்து
நீட்டமுடன் டோலியென்ற கச்சைக்குள்ளே நினைவுடனே யாருமது காணாமற்றான்
பூட்டகமாய் பூசனிக்காய் தனையெடுத்து பொங்கமுடன் டோலிக்குள் பொதிவாய்மூடே
5136.
மூடியே திரைநீக்கி மைந்தாபாரு முனையான பூசனிக்காய் குடத்துள்ளேகி
ஓடியே காயதுவும் பாண்டத்துள்ளே வுத்தமனே யிருக்கின்ற வயணம்பாரு
சாடியே ஜலமதனை யகற்றிப்போடு சட்டமுடன் பாண்டமதை திறந்துகாட்ட
வாடியே குடத்துக்குள் காயைக்காட்ட வண்மையுள்ள ஜாலமென்று மயங்குவாரே
5137.
மயங்குவார் குடத்துக்குள் பூசனிக்காய் மார்க்கமுடன் சென்றதொரு புதுமைகண்டு
தியங்கியே ஜெகஜால இந்திரஜாலம் தீர்க்கமுடன் மாந்திரீகம் இதற்கீடுண்டோ
நயம்படவே தாமுரைத்து மாண்பரெல்லாம் நாதாந்த சித்துவென்று நடுங்குவார்கள்
ஜெயம்பெறவே வித்தையிது யதிதவித்தை செய்கிறதோர் வண்மைகண்டு பிரமிப்பாரே
5138.
பாரேதான் இவ்வண்ண தந்திரஜாலம் பாரினிலே கருவாளி யறிவான்பாரு
நேரேதான் ஜாலவகை செய்துமல்லோ நெடிதான பிரம்மலபி கடந்தோன்போலே
சேரேதான் மாணாக்கள் கோடிமுன்னே செய்துமே தந்திரமாம் ஜாலப்போக்கில்
நீரேதான் பணமதுவும் மிகவேவாங்கி நீதியுடன் பிழைப்பதுவும் தருமமாமே
5139.
தருமமாஞ் ஜெகஜால தந்திரஜாலம் தாரிணியில் பிழைப்பதுவே நீதியாகும்
கருமமா மற்றொருகை தொழிலினாலே காசினியில் வெகுபாவ மெய்தும்பாரு
மருமமது யாருக்கும் வெளியிடாமல் மார்க்கமுடன் ஜீவனத்தை செய்துகொண்டு
சொரூபமென்ற ஞானோப தேசந்தன்னை சுத்தமுடன் பெறுபவனே சித்தனாமே
5140.
சித்தனாய்ப் பிறந்தாலும் தீர்மைவேண்டும் சீருலகில் பலபேர்கள் மதிப்பேவேண்டும்
கத்தனாங் காலாங்கி போலேகீர்த்தி காசினியில் அவர்போலே பெறவேவேண்டும்
நித்தமுமே மனோன்மணியாள் அருளேவேண்டும் நீங்காத தவத்துறுதி கொள்ளவேண்டும்
பத்தியுடன் சித்துமன துறுதிவேண்டும் பாரினிலே நீயுமொரு நீதிவானே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக