5101.
தானான இன்னமொரு ஜாலமார்க்கம் தண்மையுடன் கூறுகிறேன் மைந்தாகேளு
தேனான மனோன்மணியாள் கிருபையாலே ஜெகதலத்தில் அனேகவித்தை செப்பக்கேளு
கோனான காலாங்கி நாதர்தம்மால் குவலயத்தில் கோடியுக மிருந்துமேதான்
பானான வதிசயங்கள் மிகவுஞ்சொல்லி பாலித்தார் எந்தனுக்குக் கோடியாமே
5102.
கோடியாம் பசுமாடு இருக்குங்கூட்டம் கொற்றவனே நீசென்று மைந்தாபாரு
தேடியே கரும்புலியின் கொழுப்புதன்னை தீவிரமாம் கொண்டல்லோ காற்றுவாடை
நாடியே ஓரிடமாய் வைத்துக்கொண்டு நலம்பெறவே கோனானின் னருகிற்சென்று
பாடியே பால்கறக்கச் சொல்வாயப்பா பாலகனே மாடெல்லா மோடும்பாரே
5103.
ஓடியே பால்கறக்க மாட்டாதப்பா வுத்தமனே சமுசாரி யலைவான்பாரு
தேடியே மாடெல்லாம் பிடிப்பான்பாரு தேசத்தில் மாடெல்லா மோட்டங்காட்டி
நீடியே யவனிடத்தில் வாராதப்பா நிட்சய காலாங்கி ஜாலமப்பா
கூடியே ஜனங்களெல்லாங் கூட்டமிட்டு கொப்பெனவே மயங்கியல்லோ தியங்குவாரே
5104.
தியங்கியே ஏமாந்து நிற்கும்போது தீரமுடன் கோனாரின் பக்கல்வந்து
மயங்கியதோர் கோனானைக் கண்டல்லோதான் மார்க்கமுடன் தானழைத்து மன்னாகேளு
நயம்படவே யவன்தனக்கு குறிகள்சொல்ல நன்மையுடன் செம்பொன்னைக் கேட்பாயப்பா
ஜெயம்பெறவே காளியிட சாபத்தாலே ஜெகதலத்தில் மாடெல்லா மோடலாச்சே
5105.
ஆச்சப்பா சாபத்தை நிவரத்திசெய்து வப்பனே பூசைசெய்ய வேண்டும்
மூச்சடங்கிப் போனதொரு மாடெல்லாந்தான் உத்தமனே மந்தைவந்து சேரும்பாரு
பாய்ச்சலுடன் வேங்கையுட கொழுப்புதன்னை பாலகனே நீமறைவாய் வைத்துவிட்டு
கூச்சலுடன் பாஷையாய் மந்தைமாட்டை கொப்பெனவே தானழைக்க வருகும்பாரே
5106.
பாரப்பா மந்தையெல்லாஞ் சேர்ந்தபின்பு பரிவாகக் காளிக்குப் பூசைபோடு
நேரப்பா பூசையது நேரும்போது நெடிதான சன்னிதங்கள் மிகவுங்கூறி
ஆரப்பா யடர்ந்தவனந் தனிலிருக்கும் அப்பனே கோனானே சொல்லக்கேளும்
சீரப்பா யுந்தமக்குக் குறைவுமில்லை சிறப்புடனே மாதமொரு பூசைசெய்யே
5107.
செய்யவே காளிக்கு காணிக்கையப்பா செப்பியதோர் உத்தாரப் படிதானப்பா
உய்யவே எப்போதும் பூசைமார்க்கம் உத்தமியே போடுகிறேன் என்றுகூறி
பையவே கப்பணங்கள் கட்டியேதான் பான்மையுடன் காணிக்கை தருவேனென்று
வெய்யவே கற்பூர வாலாத்திக்கொண்டு விருப்பமுடன் போற்றியது செய்வாய்தானே
5108.
தாமான பூசைகொண்ட காளிதானும் தன்மையுடன் சன்னதங்கள் வந்தாற்போல
கோமானாம் இடையன்முன் எதிரேநின்று கொற்றவனே குறிசொல்லுங் காலந்தன்னில்
சாமான மானதொரு குறிகளல்லோ தாரணியில் இவர்போலுஞ் சித்துமுண்டோ
போமேதான் சகலசித்துங் கடந்தஞானி பொங்கமுடன் குறிசொல்லுஞ் சித்தென்பாரே
5109.
என்பாரே கரும்புலியின் கொழுப்பின்மார்க்கம் எழிலான வித்தையிது கூறப்போமோ
அன்பான தோழனவன் இருக்கவேண்டும் அவனுக்கே மர்மங்கள் கூறவேண்டும்
பன்மையாய் பலபேர்கள் கூடுவார்கள் பார்க்கையிலே கர்மிகளும் தர்மிகளுமுண்டு
நன்மையுடன் வெகுவார்த்தைப் பேசியல்லோ நலம்பெறவே கருதனையே கேட்பார்காணே
5110.
காணவே மர்மத்தைக் கூறவேண்டாம் காசினியில் மகிமைகள் மெத்தவுண்டு
பூணவே மர்மத்தை வெளிகாட்டாமல் பொங்கமுடன் ஜாலமதை செய்துகொண்டு
நாணவே வையகத்தில் வித்தைசெய்து நன்மையுடன் பிழைப்பதுவே மெத்தநன்று
தோணவே இப்பாகம் மைந்தாபாரு தோற்றமுடன் உந்தமக்கு உரைத்ததாமே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக