பக்கங்கள்

சனி, 3 ஆகஸ்ட், 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5171-5180

5171.
கூறியதோர் மையதனால் அனேகசித்து குவலயத்தி லாடலாம் பேய்தனக்கும்
மீறிதோர் மையினால் அஷ்டசித்து மேதினியில் வெகுகோடி மாண்பரப்பா
சீறியதோர் வேதாளம் பேயாட்டங்கள் சிறப்புடனே கருவென்ற மையினாலே
வீறிதோர் கருமானந் தன்னைக்கொண்டு விட்டகுறை தனையகற்றி செய்வாய்பாரே
5172.
செய்யவே மையினுட பெருமைதானும் சிறப்பான பூதலத்தில் எவராலாகும்
வெய்யவே விட்டகுறை யிருந்தவர்க்கும் மேதினியில் அம்மைதான் பலிக்கும்பாரு
துய்யநல்ல மையதுவுஞ் செய்வாரானால் துரைராஜ சுந்தரனைக் காணலாகும்
மெய்யான மையினுட போக்குதன்னை மேதினியில் காண்பவனே சித்தனாமே
5173.
சித்தனாம் பூவுலகில் ரிஷிதானென்பர் சிறப்பான கருவி கரணாதியுள்ளோன்
முத்தனாம் மூதுலகம் கடந்தஞானி முனையான பிரம்மலபி கடந்தோனென்பார்
சத்தியத்தைத் தவறாத வேள்வியோனாம் தரணிபதி யுலகாளும் ராஜனென்பார்
நித்தியமும் பிராணநிலை கலையில்நின்று நிட்களங்க மானசுட ரென்பார்தானே
5174.
சுடரான வையத்து சித்தனென்பார் சூட்சாதி சூட்சமதைக் கடந்தஞானி
அடலான மாண்பரெல்லாம் வணங்கும்ஞானி வவனிதனில் விட்டகுறை யிருந்துதானால்
திடமான ஞானியென்று பேர்வகுப்பான் தீர்க்கமுள்ள ஜெகஜால மந்திரவாதி
மடலான தத்துவங்கள் தொண்ணூற்றாறும் மார்க்கமுடன் தானறிந்த மதியவானே
5175.
மதியான மையினுட மார்க்கத்தாலே மகத்தான லோகமெல்லாம் வசியமாகும்
கதியான மோட்சமென்ற மாளிதானும் காணிக்கை யெப்போதும் கழரொண்ணாது
விதியான விதியிருந்தால் மையின்போக்கு வீணிலே போகாது சதாகாலந்தான்
துதியான இலங்கைமன்னன் மையினாலே தொல்லுலகோர் யெப்போதும் துதிப்பார்காணே
5176.
காணவே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் கருவான பொய்மசக்கல் தலையாட்டந்தான்
பூணவே கும்பமது கலசம்வைத்து பொங்கமுடன் பேயாட்டங் கொள்ளும்போது
தோணவே லாகிரிகள் வஸ்துவாலும் தொல்லுலகில் மாதர்மேல் சன்னதங்கள்
வேணபடி தன்மீதில் வந்தாப்போலும் வெகுபிறட்டல் தலைசுழட்டல் அதிகந்தானே
5177.
தானான தெய்வமது வனேகங்கொண்டு தாக்கான சன்னதங்கள் அதிகமாகி
கோனான தன்புருஷன் தன்னைநோக்கி கொற்றவா எந்தனுக்கு யேர்வையில்லை
மானான மகுத்துவங்கள் அதிகங்கொண்டு மன்னவர்க்கு தெய்வமது கூறினாப்போல்
பானான கரங்குவித்து தலைமேற்கொண்டு பாலகனே பூசையில்லை யென்பார்பாரே
5178.
பாரேதான் கன்னியர்மேல் சன்னதங்கள் கைலாய வடிவேலன் தன்னைப்போல
நேரேதான் நிற்கிறவ ராறோநீர்தான் நீதியுள்ள வாண்பிள்ளை நினைவாய்க்கேளிர்
சீரேதா னுந்தனுட மாளிதன்னில் சிறப்பான பூவாடைக் காரியப்பா
வேரேதான் கட்டுதற்கு வாடையில்லை வித்தகனே மனங்கலங்கி நின்றாள்தானே
5179.
நிற்கவே பூவாடைக் காரிதானும் நிட்களங்க மாகவல்லோ வெகுகாலந்தான்
துற்கையென்ற பிடாரியது தானுமல்லோ துதியான காட்டேரி சின்னானப்பா
சொற்பழு வாராத கருப்பன்தானும் சுடரொளியாஞ் சத்தகன்னி மாதுதானும்
கற்பமதை யாவிகொள்ளும் ரத்தமுண்டி கருவழிக்கும் மாடனது நானுந்தானே
5180.
நானான தெய்வமப்பா பூவாடையப்பா நன்மையுடன் சித்தடிமேல் மையல்கொண்டு
கோனான தேவதைகள் வாடைகட்டி கொப்பெனவே சன்னதங்கள் அதிகங்கொண்டு
தேனான நடுவீட்டு செல்லியத்தாள் தெளிவான வங்காள பூபதிதானப்பா
மானான ஈஸ்வரியாள் எல்லைகாத்தாள் மகத்தான தெய்வமது வந்திட்டோமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக