4981.
உண்டான மேருகிரி தன்னிலப்பா வுத்தமனே யட்டகிரி மலைதானுண்டு
செண்டான தேவர்தாமங்கே கண்டேன் சிறப்பான கைலாய ரதமுங்கண்டேன்
கொண்டல்வண்ண னச்சுதனார் பீடங்கண்டேன் குறையாத வட்டரதந் தானுங்கண்டேன்
பண்டுளவ மாலையணி மாலைபூண்ட பாங்கான பற்குணனார் ரதங்கண்டேனே
4982.
கண்டேனே வர்ச்சனனார் ரதமுங்கண்டேன் பாங்கான பாசுபதந் தன்னைக்கண்டேன்
துண்டரிக மானதொரு இந்திரன்வில்லை துப்புரவாய் கைலாய பதியிற்கண்டேன்
சண்டமா ருதம்போல இந்திரன்சேர்வை தன்மையுடன் கைலாயபதியிற் கண்டேன்
புண்டரிக மானதொரு பிர்மன்வில்லை புகழான பதிதனிலே பார்த்திட்டேனே
4983.
பார்த்தேனே மேருகிரி தன்னிலப்பா பாங்கான தங்கரதம் மேலிற்றானும்
தீர்த்தமுடன் லிங்கமுடன் இந்திரன்தானும் சிறப்பான ஆயிரங்கண் தன்னோடொக்க
ஊர்த்துவமா மாயிரத்தெட்டு மாற்றுக்குகந்த சிம்மாதனம் அதிலே இந்திரன்சேர்வை
கோர்த்துமே கோடான கோடிமன்னர் கொற்றவர்க்கு ஏவல்செய்ய வறிந்திட்டேனே
4984.
அறிந்தேனே கைலாய பதியிலப்பா வன்பான தேவாதி தேவர்தாமும்
செறிந்திடவே வெகுகோடி மாண்பரோடும் செம்மலுடன் வினயமது சொல்லொணாது
முறிந்துதொரு நரகமென்ற குழியிலப்பா முனையான வக்கிரமக் கூட்டத்தார்கள்
குளிந்துமே வேதனைகள் செய்யுமார்க்கம் கொற்றவனே கண்டுமல்லோ நடுங்கிட்டேனே
4985.
நடுங்கினேன் கைலாய மேருதன்னில் நலமான வதிசயங்கள் அனேகங்கண்டேன்
ஒடுங்கியதோர் மாண்பர்களின் பாவந்தன்னை ஓகோகோ நாதாக்கள் கண்டதில்லை
படுந்துயரங் காணாமல் நூல்கள்பாடி பட்சமுடன் மாண்பர்களுக் கோதினார்காண்
இடும்புமிக யான்றுலைத்து மேருதன்னில் எழிலான வதிசயங்கள் கூறிட்டேனே
4986.
கூறினேன் இத்தாதி காட்சியெல்லாம் குவலயத்தில் யாரேனுங் கண்டதில்லை
மீறியே எந்தனது புண்ணியத்தால் மிக்கான காலாங்கி கடாட்சத்தாலும்
தேறியே மனோன்மணியாள் கடாட்சத்தாலும் தேற்றமுடன் மேருகிரி தன்னில்சென்றேன்
சீறியே என்மீதில் சினந்துமல்லோ சிதாபர சனமந்தேறி சென்றிட்டேனே
4987.
சென்றேனே ஆதியென்ற கடவுள்காணேன் சிறப்பான வெகுமகிமை யானுங்கண்டேன்
குன்றான மேருகிரி தன்னில்யானும் குறையாமல் கடவுளது மகிமைகண்டேன்
வென்றிடவே யாதியென்ற வஸ்துகாணேன் வீணாக வனாதியென்ற வஸ்துகண்டேன்
நின்றதொரு தேவாதி தேவர்தாமும் நிகட்சியுடன் பதாம்புயத்தை தவஞ்செய்வாரே
4988.
தவமான மேருகிரி தன்னிலப்பா தண்மையுள்ள தேவாதி தேவரெல்லாம்
சவம்போல யாகமது சென்றார்கள் சாங்கமுடன் தேவனையுங் கண்டாரில்லை
பவமகற்றி மேருகிரி தன்னில்தானும் பட்சமுடன் சாகமது செய்துமென்ன
அவப்பொழுதும் தவப்பொழுதுங் கொண்டுமென்ன அவர்களுந்தான் ஒருபலமுங் காணார்தாமே
4989.
தானான கைலாய பதியில்தானும் சட்டமுடன் தேவாதி தேவர்தானும்
கோனான கடவுள்தனின் பதாம்புயத்தை கொற்றவரு மாண்பர்களுங் கண்டதில்லை
தேனான மனோன்மணியாள் முதலானோரும் தெளிவான சங்கையதை யறிவதில்லை
பானான பரலோகங் கண்டுமென்ன பாரினிலே கடவுள்தனைக் காணார்தானே
4990.
காணாமல் கைலாசம் கண்டுமேதான் கருத்துடனே பாடிவைத்த நூல்களெல்லாம்
வீணாக வாதியந்த பொருள்காணாமல் விட்டமுறை பித்தரென்று வீம்புபேசி
தோணாத பொருள்களெல்லாம் நூலில்கூறி தொகுப்புடனே சாத்திரங் கட்டிவைத்தார்
ஆணாக பெண்ணாக பிறந்தகூர்மை அவனிதனிற் கண்டதல்லா லில்லைதானே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக