பக்கங்கள்

சனி, 3 ஆகஸ்ட், 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5071-5080

5071.
போற்றுவார் உனைநித்தம் புண்ணியவானே பொங்கமுடன் சதாகாலம் பணிவார்பாரு
சாற்றலுடன் திரிகாலம் பூசைசெய்வார் சதாநித்தம் யேவல்களும் மிகவேசெய்வார்
ஆற்றலுடன் சித்தனைப்போல் நீயுமப்பா வப்பனே எப்போதும் மகிமைபூண்டு
நீற்றலுடன் சிவயோகம் பூண்டுமல்லோ நீதியுடன் நீயிருந்துகொண்டு நிலையங்காணே
5072.
காணவே யின்னமொரு மார்க்கம்பாரு கருவான ஜாலமப்பா வராகஜாலம்
பூணவே கடாவொன்று வராகமொன்று பொங்கமுடன் கொண்டல்லோ செப்பக்கேளு
தோணவே சபைகூட்டி வேந்தர்முன்னே தோற்றமுடன் டோலியென்ற மேளமப்பா
நாணவே டோலிக்குள் வராகன்தன்னை நாட்டமுடன் வாய்கட்டி யடைத்திடாயே
5073.
அடைத்துமே போலிருக்கு யிருபக்கந்தான் அடவாக வாயிறுக்கிக் கட்டிப்போடு
படைமுகம் பார்த்திருக்க சீஷனொன்று பாலகனே மனதிற்கு உகந்தமாண்பன்
தடைகூடி சீஷனப்பா பாலகனாக சற்பனைகள் தெரிந்தவனாய்த் தேர்ந்தெடுத்து
விடைதனக்கு உகந்தவனாய் ஞானமோதி வித்தகனே கழுத்தினிலே டோலிமாட்டே
5074.
மாட்டியே டோலிதனை யடிக்கச்சொல்லி மன்னவர்கள் பார்த்திருக்க நீயுமப்பா
கூட்டமுடன் வாடதனை சபையோர்முன்னே குறிப்பாக கத்திகொண்டு வெட்டுவாய்நீ
தேட்டமுடன் வாடதுதான் வராகமாகும் தெளிவாக வுதிரமது பூமிநிற்கும்
நீட்டமுடன் வாடதுவும் ரூபமாறி நிலையான வராகமது வாகும்பாரே
5075.
பாரென்று சொல்லியல்லோ பாலர்மெச்ச பாரினிலே திரைகொண்டு மைந்தாநீயும்
நேரேதான் டோலிதனை யடித்துக்கொண்டு நிஷ்களங்கமாகவல்லோ சபையோர்முன்னே
வேறேதான் வுள்ளிருக்கும் வராகந்தன்னை விட்டல்லோ வாடதனை யுள்ளேபோடு
நாரேதான் வாராலே இருக்கிக்கட்டி நலம்பெறவே திரையதனை யவிழ்த்திடாயே
5076.
அவிழ்த்துமே சபையார்முன் வராகந்தன்னை யங்ஙனவே விட்டுவிடு பிரமிப்பார்கள்
புவிதனிலே இந்தவித்தை ஜாலவித்தை புகழான விந்தையிது காணப்போகா
துவிதமுள்ள ஜாலமே தந்திரஜாலம் துப்புரவாய் காண்பதுவு மரிதேயாகும்
குவிதமுள்ள டோலினது வித்தைதன்னை குவலயத்தில் காணார்கள் மட்டிமாடே
5077.
மாடான வித்தையிது மகிமையப்பா மகிதலத்தில் எவராலும் கூறப்போமோ
கூடான கூடுவித்தை பாயும்வித்தை கூறினேன் வையகத்தில் நீதவித்தை
தாடாண்மை கொண்டதொரு வராகவித்தை தாரணியில் யாரேனுஞ் செய்வாருண்டோ
பாடான தந்திரமாம் ஜாலப்போக்கு பாலித்தேன் மாணாக்கள் பிழைக்கத்தானே
5078.
தானான இன்னமொரு கருமானங்கேள் தன்மையுள்ள வாஞ்சநேயா பிடித்துவந்து
கோனான குருதனையே நினைத்துக்கொண்டு கொற்றவனே சிற்றாமணக்கு வித்துதானும் 
தேனான வித்தையதை யெடுத்துக்கொண்டு தேற்றமுடன் ஆசனத்தின் வழியதாக
மானான வயறுநிறை கொள்ளுமட்டும் மகத்தான கொட்டைதனை பொதிந்திடாயே
5079.
பொதியவே குழிவெட்டி வாஞ்சநேயர் பொங்கமுடன் தான்போட்டு மண்ணைமூடி
விதியான மார்க்கமது போலேயப்பா வித்தகனே நாள்தோறும் ஜலத்தைவிட்டு
பதியான நாள்கடந்து பார்த்தாயானால் பாலகனே செடியாகும் பண்பாய்க்கேளு
துதியுடனே காயதுவும் காய்த்தபின்பு தூய்மையுடன் வித்துதனை யெடுத்திடாயே
5080.
எடுத்துமே தயிலமது வாட்டியப்பா எழிலான தயிலமதை பதனம்பண்ணு
அடுத்துமே அழிஞ்சியின்தன் தயிலங்கூட்டி வப்பனே பரணிதனில் அடைத்துநீதான்
விடுத்துமே விடுதியொன்று மச்சியொன்று விரிவான மாளியது வீட்டுக்குள்ளே
தொடுத்ததொரு விளக்கதனில் நீபமேற்றி தோற்றமடா வுன்ரூபம் கிரங்குமாமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக