பக்கங்கள்

சனி, 3 ஆகஸ்ட், 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5041-5050

5041.
காணவென்றால் எடுத்தவர்கள் மாண்பருக்குக் கடிதான பழமதுவும் ரசந்தானப்பா
பூணவே ரசமதுவும் குறைந்துகாட்டும் புகழான எலுமிச்சம் பழந்தானப்பா
தோணவே திருஷ்டாந்திரங் கண்டுகொள்ளு தோராமல் சபையார்க்குக் கூறுகூறு
வேணதொரு வுபசாரக் கள்ளனைத்தான் வேகமுடன் கண்டறிந்து செப்புவாயே
5042.
செப்பவென்றால் நாவில்லை பாவுமில்லை ஜெகதலத்தில் உனைப்போல மகுத்துமுண்டோ
ஒப்பவே சபையார்முன் கள்ளனைத்தான் ஓங்கார மிட்டல்லோ யழைப்பாய்பாரே
தப்பிதங்கள் நேர்ந்ததென்று மனதிலுன்னி தண்மையுடன் பொருளதனைத் தருவான்பாரு
இப்படியே ஜாலதந்திரத் தினாலே யென்மகனே பொருளதனை வாங்குவாயே
5043.
வாங்கையிலே புத்திமான் என்றுசொல்லி வார்த்தைசொல்வார் வையகத்தி லுன்னையப்பா
தூங்கியே திரியாதே மைந்தாகேளு துப்புரவாய் நீயுமொரு கெவுளியாவாய்
ஏங்கியே யுனைகண்டால் எல்லாருந்தான் எழிலுடனே யுந்தமக்கு வணக்கங்கூறி
பாங்கியர்கள் தன்முதலாய்ப் பரிசுயீவார் பாரினிலே நீயுமொரு சித்தனாமே
5044.
சித்தனென்று சொல்லியல்லோ யுன்னையப்பா சிதாபாசக் கட்டளையை மனதிலுன்னி
பத்தியாய் திரிகாலப் பூசைசெய்து பலகாலும் சிந்தித்துப் பணிவுகூறி
முத்திபெற நல்வழிக்கு வாளதாகி முயன்றுமே யெப்போதும் முயற்சிவானாய்
நத்தியே யும்மிடத்தில் சீஷனாக நாடோறும் பணிவிடைக்கு நிற்பாரே
5045.
பாரப்பா நெற்பொறியின் வித்தைசொல்வேன் பாங்கான நெல்லதுவுங் குறுணிகொண்டு
நேரப்பா சீலைதனில் முடிந்துதானும் நெடிதான சுண்ணாம்புக் காளைதன்னில்
சீருடனே கிளிஞ்சி நடுமையந்தானும் சிறப்புடனே வைத்துமல்லோ கிளிஞ்சிமூடி
காருடனே தானவித்து எடுத்துக்கொண்டு கவனமுடன் முடிச்சதனை யவிழ்த்திடாயே
5046.
அவிழ்க்கையிலே நெல்லதுவுங் காரமேறி அழகுடன் நெல்லதுவுங் கண்ணிற்றோற்றும்
புவிதனிலே வெகுசனங்கள் கூட்டத்தோடு பொங்கமுடன் தானழைத்து கும்பல்சேர்த்து
பவிமதிகள் போன்றதொரு மாந்தருக்கு பண்பான ஜாலமொன்று சொல்வாயப்பா
துவிதமுள்ள நெல்லதனை சபையோர்முன்னே துப்புரவாய் பூமிதனில் கொட்டிடாயே
5047.
கொட்டியே பலபேர்கள் பார்க்கவல்லோ கொப்பெனவே ஜலமதனை நெல்லின்மேலே
திட்டமுடன் தான்தெளிப்பாய் மைந்தாய்நீயும் தீர்க்கமுடன் நெல்லெல்லாம் பொறியேயாகும்
சட்டமுடன் பொறியெடுத்துப் பார்க்கும்போது சார்பான நெற்பொறியும் மெய்யதாச்சு
வட்டமுடன் நெருப்பில்லாப் பொறியுமாச்சு மகத்தான வித்தையிது ஜாலமாச்சு
5048.
ஜாலமென்றால் நெருப்பில்லாப் பொறியுமாச்சு சாங்கமுடன் கண்டவர்கள் மயங்கலாச்சு
கோலமுடன் பொறியெடுத்து சபையோர்முன்னம் பொங்கமுடன் தான்கொடுத்து பரிசுவாங்கி
தாலமுடன் வையகத்தில் சித்தனைப்போல் தாரிணியில் வெகுகால மிருந்துகொண்டு
சீலமுடன் லோகவதி சயமுங்கண்டு சிற்பரனைப் போலிருந்து பூசிப்பாயே
5049.
பூசித்துத் தானிருக்கும் காலந்தன்னில் பொங்கமுடன் மாந்தரெல்லாம் உன்னையப்பா
ஆசித்து வணங்கியேதான் வன்புகூர்ந்து வப்பனே எந்நாளும் பதாம்புயத்தை
நேசித்து யுந்தமக்குக் கருணைகூர்ந்து நெடுங்காலங் கார்த்திருப்பார் மாந்தரெல்லாம்
காசுமிகப் பொன்னையெல்லாம் தருவார்பாரு கடாட்சித்து அவர்களுக்கு கதிசொல்வாயே
5050.
சொல்லவே புலிப்பாணி மைந்தாகேளு சொற்பெரிய காலாங்கி தனைநினைந்து
வெல்லவே சினையுள்ள மச்சந்தன்னை விருப்பமுடன் தானெடுத்து புனிதவானே
புல்லவே பனிநீரைத் தானெடுத்து புகழாக சினைதனக்கு நித்தியந்தான்
செல்லவே ரவிதனிலே சுறுக்குத்தாக்கு செம்மலுடன் சூரியனும் வலிப்பான்பாரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக