5021.
ஓதுவாய் பஞ்சாட்சர வட்சரத்தை வுத்தமனே நூற்றெட்டு வுருதான்போடு
வாதுபுகழ் செம்மறியின் முகத்திலப்பா வண்மையுடன் வாடையென்ற கஸ்தூரிதானும்
தீதறவே கள்ளனைத் தானறியவேண்டி திகழான கஸ்தூரி தன்னையப்பா
சேதுபந்த மாகவல்லோ முகத்தில்பூசி செம்மலுடன் பதனமது செய்குவாயே
5022.
செய்யவே கஸ்தூரி தன்னைத்தானும் சிறப்புடனே பூசியல்லோ மைந்தாகேளு
வெய்யவே மாளிதனில் கன்னம்போனால் வேகமுடன் திருடர்களைப் பிடிக்குமார்க்கம்
பையவே சந்தேகப் பட்டபேரை பாங்குடனே யாவரையுங் கூட்டிவந்து
நையவே மச்சென்ற மாளிதன்னில் நலமுடனே சபைகூட்டி நிற்கச்செய்யே
5023.
நிற்கவே ஏகஜனஞ் சூழ்ந்துநிற்க எழிலாகக் கள்ளனைத் தானறியவேண்டி
துற்கையென்ற காளியது மந்திரத்தால் துப்புறவாய் நவகண்ட மோதும்போது
அற்பமென்று நினையார்கள் மாண்பரப்பா வப்போதே எடத்தவனு மேங்கிநிற்பான்
சொற்பமென்ற தந்திர மந்திரத்தினாலே சோர்வடைந்து கள்வனவன் முழிப்பான்பாரே
5024.
பார்க்கையிலே கள்வனவன் லகுவாய்நிற்பான் கருத்தினிலே சதாசிவமுந் திடுக்கிட்டேங்கி
தீர்க்கமுடன் ஒவ்வொரு வராகவல்லோ தீரமுடன் மச்சென்ற மாளிதன்னில்
ஏர்க்கவே சோதனைக்கு மாளிக்குள்ளே யென்தாயே யீஸ்வரியே தீண்டவில்லை
ஆர்க்கவே சத்தியத்தை செய்துமல்லோ வப்பனே முகமதனைத் தீண்டிடாயே
5025.
தீண்டவே வேண்டுமென்று சொல்லியல்லோ சோதனைக்கு வுள்ளகற்றி துலைவாய்நில்லு
ஆண்டகையே மாதாவே யென்றுரைத்து அங்ஙனவே யட்சதையைத் தூவுதூவு
மாண்டதொரு செம்மறியின் முகத்தைத்தொட்டு மார்க்கமுடன் ஒவ்வொருவர் வருங்காலத்தில்
வேண்டியே யவர்கரத்தை நீதானப்பா விருப்பமுடன் தானணைத்து முகத்திலொத்தே
5026.
ஒத்தையிலே கஸ்தூரி மனந்தான்வீசும் ஓகோகோ பொருளெடுக்க வில்லையென்று
சத்தியமாய் நீசொல்வாய் மகனேயப்பா சாங்கமுடன் பொருளெடுக்க வில்லையென்று
புத்தியுடன் பொருள்தொட்டோன் கரத்தில்வாசம் பொங்கமுடன் இருக்கவே மாட்டாதப்பா
வெத்தியுடன் நீநினைத்து மாண்பர்தம்மை மேதினியில் சொல்லுவது தருமமாமே
5027.
தருமமாம் பொருள்களவு கண்டுதேறி தண்மையுடன் சொல்வதுவே மனுதர்மமாகும்
கருமமது பொய்யாது வுந்தனுக்கு காசினியில் நீயுமொரு நீதனாவாய்
பருமமுடன் வையகத்தில் மாண்பர்க்கெல்லாம் வளமையுடன் குருசம்பர போதவானாய்
அருமையாய் எல்லவரும் உந்தனைத்தான் அப்பனே சதாகாலம் போற்றுவாரே
5028.
போற்றவார் தந்திரமாஞ் ஜாலவித்தை பொங்கமுடன் யாருக்கும் விள்ளவேண்டாம்
ஏற்றியே கர்மிகளும் பாபியோரும் யெதாஸ்தான சண்டாள ரனேகருண்டு
நாற்றிசையு மிருப்பார்கள் புண்ணியவான்கள் நவிலாதே யொருவருக்கும் நவிலவேண்டாம்
மாற்றியே மாந்திரீகம் என்றுரைத்து மகுத்துவமாய் ஞானிபோல் இருந்திடாயே
5029.
இருக்கையிலே எல்லவரும் போதங்கொண்டு என்குருவே என்சாமி என்றுமல்லோ
பொருக்கமுடன் பொருள்கொள்ளை யிட்டபேர்கள் பொங்கமுடன் வுனைத்தேடி வருவார்பாரு
தருக்கமது மிகப்பேசி மகனேயப்பா தருவித்த பொருளதனை கொடுப்பேனென்று
அருட்கமலம் வீற்றிருக்கும் அம்பாள்தானும் அப்பனே கூட்டிவைப்பாள் என்றுசொல்லே
5030.
சொல்லையிலே எதிராக வந்தபேர்கள் சொக்கியே யுன்வலையில் சிக்கியல்லோ
வல்லதொரு குருசம்பிர தாயபூபா வளமையுடன் எந்தனது பொருளையப்பா
மெல்லவே தருவித்துத் தந்தாயானால் மேன்மையுடன் யுந்தமக்கு பாதியீவேன்
சல்லியங்கள் நேராது சுவாமியென்று தப்பாமல் அடிபணிந்து சேவிப்பாரே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக