5121.
தானான வுடுக்கையது கிழியும்போது தாக்கான எதிராளி மாண்பரெல்லாம்
கோனான சற்குருவை மனதிலெண்ணி கொப்பெனவே மகதேவா வனியாயந்தான்
தேனான வுடுக்கையது கடிகைமுன்னே தெளிவான ஓசையது பாடிற்றல்லோ
மானான மஹேஸ்பரியே யென்னபாவம் மங்கையரே எந்தனுக்கு கூரென்றாரே
5122.
கூறென்று சொல்லுகையில் பாலன்பேரில் கொப்பெனவே சன்னதங்கள் ஏகியல்லோ
ஆரென்று எண்ணாதே எந்தன்மீதில் அப்பனே சக்கலா தேவியப்பா
ஊரென்று இந்தவூர் பதியுமல்ல வுத்தமனே வடகாசி வயோத்தியல்லோ
தேரென்ற பதிதனிலே வீற்றிருக்கும் தேவியல்லோ சக்கலா தேவியாச்சே
5123.
ஆச்சென்று சொல்லுகையில் பாலன்தானும் வன்பான தோழரெல்லா மொன்றாய்கூடி
பேச்சொன்றும் பேசாமல் பின்னோடாமல் பிரியமுடன் மனதுவந்து தேவியார்க்கு
கூச்சலுடன் குறைநீங்கி எங்களுக்கு கொம்பனையே செய்தகுற்றம் கூறுமம்மா
பாய்ச்சலுடன் மலையேறிப் பதியைத்தேடி பாங்குடனே போகவென்று வரங்கேட்டாரே
5124.
கேட்டதொரு மாண்பருக்கு தேவியாரும் கிருபையுடன் மனங்களித்து கூறும்வார்த்தை
நீட்டமுடன் எதிராளி மந்திரதந்திரம் நேர்மையுடன் நீங்களல்லோ வறியாமற்றான்
வாட்டமுடன் பகையாளி செய்தகுற்றம் வண்மையுடன் அறிவதற்கு மனமிருந்தால்
தாட்டிகமாய்ச் செம்பொன்னை தட்டில்வைத்து சட்டமுடன் கேட்டாலே விதிசொல்வேனே
5125.
விதியான வழியதுவுங் கூறும்போது விருப்பமுடன் மாண்பரெல்லாம் ஒன்றாய்க்கூடி
மதிமயங்கி செம்பொன்னைத் தட்டில்வைத்து மார்க்கமுடன் காணிக்கை யேர்வையென்ன
பதிகடந்து மாண்பருக்கு கருவின்மார்க்கம் பட்சமுடன் தாமுரைத்து பழியுந்தீர்த்து
கதியனைத்தும் பெற்றல்லோ ஜாலதந்திரம் நீதியுடன் சித்தனைப்போல் செய்வாய்பாரே
5126.
பாரேதான் கருவறிவான் புத்திவான்தான் பாரினிலே மற்றவரோ காணப்போரார்
நேரேதான் வுலகமதில் ஜாலதந்திரம் நேர்மையுடன் இப்படியே செய்வார்பாரு
சேரேதான் கிட்டிருந்து நிதிகொடுத்து சேர்வையுடன் தேவதைகள் மார்க்கங்கண்டு
கூரேதான் வையகத்தில் ஜாலஞ்செய் கொப்பெனவே மாண்பரெல்லாம் பிழைப்பார்காணே
5127.
காணவே யின்னமொரு மார்க்கம்பாரு கருவான புலிப்பாணி மைந்தாகேளு
தோணவே யுடுக்கைதனை உடைப்பதற்கு துப்புறவாய்க் கருமானமொன்று சொல்வேன்
நீணவே வீரமென்ற காடிகாரம் நீதியுடன் தானெடுத்து மைந்தாபாரு
வாணமென்ற வுடுக்கைதனை கையிலேந்தி வளமான கோடதுபோல் தீட்டிடாயே
5128.
தீத்துமே காடியென்ற காரந்தன்னால் தீரமுடன் கீறலது வூனும்போது
வேத்துமே சவ்வதுவும் வெந்துமேதான் வேதாந்தத் தாயினது வுடுக்கைதானும்
ஆத்துமே வெந்துனைந்து இருக்கும்பாரு வப்பனே உடுக்கைத்து கச்சந்தானும்
கீத்தலுடன் கைதட்டி யடிக்கும்போது கீர்த்தியுடன் வுடுக்கையது வுடையும்பாரே
5129.
உடைந்ததொரு வுடுக்கையது காணும்போது வுத்தமர்கள் மாண்பரெல்லாம் திடுக்கிட்டேங்கி
படைமுகந் தான்கலங்கி பொறிகலங்கி பாங்கான மாண்பரெல்லாம் மதிகெட்டேங்கி
கடையான மாந்திரீக தந்திரஜாலம் கண்காணா வித்தையென்று கத்துவார்கள்
விடையான பாலரெல்லாம் மெய்யென்றெண்ணி விருப்பமுடன் அதிசயித்து நின்றிட்டாரே
5130.
நின்றாரே யின்னமொரு மார்க்கம்பாரு நிலையான புலிப்பாணி மைந்தாகேளு
வென்றிடவே மாணாக்கர் பிழைப்பதற்கு விருப்பமுடன் ஜாலமது சொல்வேன்யானும்
குன்றான மலைக்கல்லு போலேயப்பா குழியான மண்பாண்ட மொன்றுசெய்து
நன்றான வாயதுவும் கலசம்போல நலமான சிறுவாயாய் செய்திடாயே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக